(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உறவொன்று வேண்டும் - இந்துமதி

உறவொன்று வேண்டும்

என் தனிமையைப் போக்க....

அதில் உரிமை ஒன்று வேண்டும்

நான் தோள் சாய்ந்து கொள்ள....

காதல் ஒன்று வேண்டும்

என் அன்பினைக் கொட்டித் தீர்க்க....

அதில் சிறு பிரிவொன்று வேண்டும்

அவன் இல்லாமல் நான் இல்லை என்பதை உணர....

தேடல் ஒன்று வேண்டும்

என்னவனை நான் அறிய...

அதில் வலி கொஞ்சம் வேண்டும்

தேடலின் சுகம் அறிய....

நாட்கள் நீள வேண்டும்

அவன் உடன் நான் வாழ...

அதில் காலம் உரைய வேண்டும் 

எங்கள் காதல் வாழ.....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.