(Reading time: 2 - 4 minutes)

கவிதை - உண்மை நாயகர்கள்... - யாசீன்

தாய் மண்ணின் அமைதி காக்க...
மானிடம் புனிதம் காக்க...
மண்ணகம் வந்துதித்த மண்ணின் மைந்தர்கள்..
வானும் வாழ்த்த, வையகமும் வாழ்த்த..
எதற்கும் ஒப்பா அவர்களின் தியாகம்...
என்றும் அவர்களே எம் மண்ணின்  நாயகர்கள்.....

பஞ்சு மெத்தையிலும் குளுகுளு ஏசீயிலும்...நிம்மதியாய் நீ துயில..
கடும்மழையிலும்
கனல் வெயிலிலும்....
உனக்காய்....

உறையும் பனியிலும்
சீரும் புயலிலும்.... துன்பங்களை சகித்து தன்னையே அர்பணிக்கின்றது ஒரு கூட்டம். ....

சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்க...
தன் சுகங்களை இழக்கிறான் அவன்....
பெற்றவள் அவளும் ...
நாயகி இவளும் ...
வழி மீது விழி வைத்து..
காத்திருக்கும் நாழிகைகள்....
கடந்து போகும் வாழ்க்கையில் இதுவும் ஓர் அத்தியாயம் என.....

கொண்டது அவர்களோ புனித காதல்....
தன்மீதும் அல்ல...தலைவி மீதும் அல்ல...
பணத்தின் மீதும் அல்ல..பதவி மீதும் அல்ல...
என்றும் தாய்க்கு நிகராய்  தாய் நாட்டின் மேல்.......
எதிர்பார்புகளற்ற அழியா காதலுடன்.....

நெஞ்சில் கொண்ட துணிவும்...
கண்ணில் என்றும் அனலும்....
பசியும் தாகமும் தான் மறந்து
மரணமதை வீரமாய் பெறுமை கொண்டு. ..
என்றும் கடிகாரமாய் ஓடும்...உனக்காய் ஓர் கறுப்புக்கூட்டம்...

யாரோ வடித்த கதைக்கு
திரையில் ஆயிரம் ஹீரோக்கள்...
என்றும் ஓயா பல கைத்தட்டல். ...
வைப்பார் பல கட்டவுட்டுக்கள்...
குறைவில்லா பாலபிசேகமும்.....
ஞாயம்  கொள்வாய் தோழா ....?

தேசத்திற்கு மகுடம் சூட்ட...... மரணத்தை காவுகொண்டு ஒவ்வொரு நொடியையும்  தன் கதையை தானே வடிக்கிறான் உண்மை நாயகன்.....எங்கனம் செய்வாய் நீயும்  உன் கைமாறு ......

எங்கே உனது கைத்தட்டல். ......
எங்கே அவர்களது கட்டவுட்டுக்கள்.........வேண்டாம்.... செய்வாயா ஒரு நிமிட மெளனாஞ்சலி 
கல்லரையில் கம்பீரமாய் அயரும் வேங்கைகளுக்காய் .....
அவர்களுக்கென வீற்றிருப்பது கல்லரை கானகப்பூக்களே.....    இப்போது சொல்வாய் உண்மை நாயகன் யாரென்று. .....

யாரும் கொள்ளா தியாகமாய்....தாய் மண்ணின் தலைமகனவன்......தாய்நாட்டின் மானங்காக்க தலையாய கொடி உயர்த்தி. ..
எதிரிகளை தவிடுபொடியாக்கி....
வீழ்ந்தாலும் வீழ்வான் வீரமகன் தேசக்கொடியை நெஞ்சில் சுமந்து.....

சுகங்களை மறுத்த அவனோ....
உணர்வுகளை மரக்கட்டயாக்கி...
கேட்டது முழுவதும் வெடிச்சத்தங்களே...
எல்லையில் நடமாடிய வாரணம்....
இன்று இங்கனம் பிறவி பாக்கியம் நிறைவேற்றி பிரியாவிடையளிக்கும் நேரமதில்.......தாரகை உண்மை நாயகர்களாய்.......பெற்றெடுத்த இரத்தினங்கள்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.