(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கவசம் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Helmet

தலைவா,
நீ  எடுக்க நினைத்து 
மறந்து போன
தலைக்கவசம்
கண்களை உறுத்தி
உயிரை வதைக்கும்.


நேரம் கடந்தும்
நீ வீடு திரும்பாதது
அச்சத்தை விதைத்து
உதிரத்தை உறையச்செய்யும்

வாசலில் விளையாடும்
குழந்தையை மேயும் கண்கள்
உன் வரவையும் எதிர்நோக்கும்

என் அலைபேசி அழைப்புகளை
நீ ஏற்காத தருணம்
விரைவில் நீ வரக்கூடுமென
உள்ளம் நம்பும்.

மாறாக,
உன் அலைபேசி அனைக்கப்பட்டதாய்
அறியும் போது
இனம் புரியா பயமொன்று
இதயத்தை திண்கும்

வீட்டைக்கடந்து நிற்காத
வாகன ஒலி
முதுகு தண்டில் வலிக்கும்

பயமுற்றி விழி நிறையும்போது
வாசற்கதவுகள் திறந்து
நீ உள்ளே நுழையும் போது
நின்று போன் இதயம்
மெதுவாக துடிக்கும்

குழந்தைக்கும் எனக்கும் 
சேர்த்து
அவள் கண்ணத்தில்
நீ கொடுக்கும் - முத்தம்

என் இயல்பு நிலையை
மீட்டுத்தரும்...

நீ அறியாது
என் கண்கள் - உன் 
தலைக்கவசத்தை கண்டு மீளும்...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.