(Reading time: 4 - 7 minutes)
அதிகாலை பொழுது வீடு முழுவதும் சாம்பிராணி புகை மணமணக்க அந்த வீட்டில் சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தது..
 
அந்த வீட்டின் குடும்பத் தலைவி அருணா நம் நாயகிக்கு சுப்ரபாதம் பாடிக்கொண்டிருந்தார் "ஏய் தனு எழுந்திருடி மணி 7 ஆவுது அப்புறம் மணி ஆயிடுச்சு என்று சரியாக சாப்பிடாம அவசரஅவசரமாக கிளம்புவ"..
 
தனியா நான் மட்டும் வேலை செஞ்சிட்டு இருக்கேன் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்வோம்னு இருக்காளா பாரு சாப்பிடும்போது அது குறை இது குறைனு  ஆயிரம் குறை சொல்ல வேண்டியது இவ்வளவு தூரம் சொல்லிட்டுருக்கேன் எப்படி இழுத்து போத்திகிட்டு தூங்குறா பாரு..
 
ஏய் தனு எழுந்திருடி சந்தோஷ் வர லேட் ஆகும் அதனால இன்னைக்கு நீ சீக்கிரம் போகணும்னு சொன்னியேடி..
 
இந்த ஆயுதம் உடனே வேலை செய்தது தலை உயர்த்தி மணியை பார்த்து அடக்கடவுளே மணி 7.30 ஆகுதா அம்மா நான் நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு சீக்கிரம் போகணும்னு ஏன்மா என்ன காலையிலேயே எழுப்பல..
 
சொல்வேடி ஏன்டி சொல்ல மாட்ட காலையிலிருந்து கரடியாக் கத்துறேன் திரும்பித் திரும்பிப் படுத்துக்கிட்டு இப்ப என்ன கொற சொல்றியா இனிமே என்னை எழுப்பிவிடுன்னு நீ சொல்லு அப்புறம் நான் பேசுக்கிறேன் அவர் திட்டி கொண்டிருக்க கரடி மாதிரி கத்தினா எனக்கு எப்படி காதுல விழும் என முனு முனுத்துவிட்டு நைஸாக குளியலறைக்கு நழுவினாள்..
 
குளித்து முடித்து ஆடை அணிந்துகொண்டு அம்மா டிபன் சீக்கிரம் எடுத்துவை லேட் ஆகுது என கத்திக்கொண்டே டைனிங்டேபிள்  வந்தாள்..
 
இருடி எடுத்து வைக்கிறேன் டெய்லி உனக்கு இதே வேலையா போகுது சீக்கிரம் எழுந்து கிளம்பாம அந்த நேரத்திக்கு கிடந்து ஆடுறது உன்ன நம்பி எப்படித்தான் பொட்டிக்கை  நடத்துறானோ  சந்தோஷ்..
 
அருணா கதிரேசன் தம்பதிக்கு ஒரே செல்ல பெண் சைதன்யா..
 
சந்தோஷும் சைதன்யாவும் சிறுவயது முதலே நண்பர்கள் உடன்பிறந்தவர்கள் யாருமின்றி வளர்ந்ததால் இருவருக்கும் ஒரு சகோதர பாசமும் உண்டு.. அவனும் இவளை எப்போதும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் ஆடை வடிவமைப்பு தொடர்பான படிப்பை முடித்துவிட்டு பெரிய கம்பெனியில் வந்த வாய்ப்பை வேண்டாம் என தட்டிக் கழித்துவிட்டு இந்த பொட்டிக்கை கொஞ்சம் பணம் முதலாக போட்டு கொஞ்சம் லோன் போட்டு எனத் துவங்கினார்கள்..
 
காலேஜ் படிக்கும்போதே சந்தோஷ் ஈவன்ட் ஆர்கனைஸ் செய்யும் ஒரு கம்பெனியில் பார்ட் டைமாக வேலை செய்தான் அது அவனுக்கு பிடித்துப்போகவே பொட்டிக் வேலையோடு சேர்த்து அதனையும் செய்தார்கள்..
 
வந்த வருமானத்தை நாலு பங்காக பிரித்துக் கொண்டார்கள்.. ஒரு பங்கு அவளுக்கு ஒரு பங்கு அவனுக்கு ஒரு பங்கு தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு பங்கு புதிய கிளை துவங்குவதற்கு என முடிவு செய்து கொண்டார்கள்..

இவர்களது ஆர்டர் பிடித்துப்போக மேலும் ஆர்டர்கள் குவிந்தது முதலில் தேடி ஆர்டர் பிடித்தது போல இல்லாமல் தானாகவே வர ஆரம்பித்தது..
 
சந்தோஷுடன் கூடவே அவன் எடுத்து செய்யும் விழா நிகழ்ச்சிகளில் சைதன்யாவும் கலந்து கொள்வாள்.. அப்படி கலந்து கொள்ளும் போது அவளுக்கு தோன்றும் புது முயற்சிகள் ஒன்றிரண்டை சொல்வாள் அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது..
 
இப்போது இருவரும் இன்னும் சில ஆட்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் பெரியஅளவில் செய்ய தொடங்கியிருந்தார்கள்..
 
இரண்டு மாதம் முன்பு DIG வீட்டு கல்யாணத்தில்  குடும்பத்தினர் அனைவருக்கும் சைதன்யா ஆடைகளை ரெடி செய்து கொடுக்க சந்தோஷ் அந்த கல்யாண வேலைகளை எடுத்து திறம்பட செய்தான்..
 
அந்தத் திருமணத்தில் எல்லாம் நல்லபடியாக அமைய இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனால் அதற்குப் பிறகு நிறைய ஆர்டர்கள் வரத் துவங்கியது.. இடம் தான் கொஞ்சம் சிரமமாக இருந்த போதும் சமாளித்துக்கொண்டு செய்தார்கள்.. இப்போதும் கூட
 
சந்தோஷ் ஆர்டர் விஷயமாக கொஞ்சம் பெரிய கம்பெனியில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக சொல்லி மீட்டிங்கிற்கு போயிருக்கிறான்.. அதனால்தான் இன்று அவள் சென்று சீக்கிரமாக ஷாப்பை ஓப்பன் செய்ய வேண்டுமென்று கிளம்பிக் கொண்டிருக்கிறாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.