(Reading time: 4 - 8 minutes)

                                         

                                            காற்றில் உன் வாசம் 
        
        அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின் திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா...   
        வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய்  தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை ஒரு வேலை 'அதுவும் ஒரு காரணமோ ' என்று மனதில் நினைத்து கொண்டால் (என்னவா இருக்கும் 🙄🙄🤔🤔) . 
        ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் அறையில் உள்ள கட்டிலை பார்த்தால் அதில் தன் கணவனும் 5 வயது குழந்தையும்  தூங்கி கொண்டிருந்தனர்.
       'அழகான குழந்தை அன்பான கணவன் ஆனால் எல்லாம் விதி ' என்று தன் மனதில் நினைத்து கொண்டு காலை கடன்களை  தொடங்குவதற்கு அறையை விட்டு வெளியேறினால் பிரியா .
         
             மணி காலை 5.30 பிரியா தன் அறையிலிருந்து ஹாலை தாண்டி வாசலுக்கு வந்தால்.     
             இன்னும் சரியாக விடியாத காலை பொழுது மார்கழி மாதம் என்பதால் குளிரும் கூடியிருக்க அந்த காற்றை இழுத்து வெளியிட்டள்.  
            அதன் பின் வாசலை பெருக்கி  தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் ஒரு பூசணி பூவை சொருகினாள். 
           பின் அதை கோலத்தின் நடுவில் வைப்பதற்கும் அந்த தெருவில் இருக்கும் கோவிலில் பஜனை சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது. 

 

நேரம் காலை 6 மணி .....
  
       கடிகாரத்தின் அலார சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தனர்.   
        கடந்த ஒரு மாத காலமாக பழகிய ஒன்று தான் என்றாலும் காலை 6 மணிக்கு எழுவது சற்று கடினமாகதான் இருந்தது.(என்ன கொடுமை sir இது ???🙄🙄🙄😳😳)... 
        எல்லாரும் தங்கள் காலை கடன்களை முடித்து கொண்டு ஹாலுக்கு வரவும் சாய்ப்ரியா குளித்துவிட்டு தன் ஈரக்கூந்தலை   நுனியில் முடிச்சிட்டு மல்லிகை சரத்தை சூடி நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு கையில் பூக்கூடையுடன் வெளியில் வந்தால்.   
         அனைவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது.அனைவரின் பார்வையையும் உணர்ந்த சாய்ப்ரியாவின் பார்வை ஹாலில் உள்ள டீப்பாய் மீது சென்றது.   

          அங்கு ஒரு ட்ரேயில் 6 கப்புகளில் அவரவருக்கு தேவையானா காபி,பால்,டீ இருந்தது.அதனுடன் ஒரு நோட்புக் பேனாவும்  இருந்தது.பின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சாய்ப்ரியா.  
           (என்னடா நடக்கு இங்க அலாரம் கேட்டு எழுந்து வந்தா  காபி குடிங்கனு கூட சொல்லாம இந்த பிரியா பிள்ள பாட்டுக்கு வெளில போயிட்டு ஒரு மரியாதை இல்ல இவளை என்ன பண்ற பாரு...கொஞ்ச பொறுங்க ஏதோ சத்தம் கேக்கு..............அடப்பாவிகளா இதுங்களுக்காக  நான் சப்போர்ட் பண்ணா  இதுங்க பாட்டுக்கு  காபிய   உரிஜிட்டு இருக்குதுங்க ............அடபோங்கடா😏😏.....ஆமா நானும் எல்லாரும் எல்லாரும்னு சொல்ற யாருனு தான கேக்குறீங்க வாங்கப்பா ஒரு intro பாத்திருவோம்).
        அந்த நீண்ட ஹாலில் இருந்த சோபாவில் நடு நாயகமாக அமர்ந்திருந்தார் வீட்டின் தலைவர்   வேதநாயகம் ,"Vedha group of companies" இவருக்கு சொந்தமானதுதா ஆனால் அத சத்தமாக்கூட சொல்லமுடியாது அது அவரோட இடதுபுறம் இருக்கும் அவரின் மனைவி சகுந்தலா தேவி கு தெரிந்தால் சாமி ஆடிவிடுவார்...இவரின் உழைப்பால் no.1 company ஆக இருக்கிறது இதுவரை எந்த கம்பெனியும் இவர்களின் இடத்தை பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை சுருக்கமா சொன்ன வெளில புலி வீட்டில் எலி ...

சகுந்தலா தேவி குடும்பத்தை பற்றிய கவலையே இல்லாத குடும்ப தலைவி(இவரைப் பற்றி கதையில தெரிந்துகொள்ளலாம்..)

வேதநாயகத்தின் வலதுப்புறம் அவரின் செல்லமகள் அவ்வீட்டின் கடைக்குட்டி 
மித்ரா தேவி  பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் சின்னக்குட்டி வீட்டின் கடைக்குட்டி. அதிக குறும்பும் அதிக பிடிவாதமும் இவளின் சிறப்பு..இது எங்க போய் முடியுதுனு பாக்கலாம்..

தனி சோபாவில் கம்பிரமாக அமர்ந்து காபி அருந்ததுகிறாரே Mr. மித்ரேந்திரன் IPS அவர்களே நம் கதையின் நாயகன் வேதநாயகத்தின் மூத்த மகன். நேர்மையான காவல் அதிகாரி இவருடைய சட்டம் 'குற்றத்தை ஒப்பு கொள் அல்லது உன்னை சுட்டுகொள்'. (இப்போ புரியுதா நம்ம ஹீரோவோட கேரக்டர்🙀🙀 ).

ஹீரோவின் எதிர் சோபாவில் தன் அண்ணனுக்கு  நிகராக கம்பிரமாக அமர்ந்திருப்பவர் Mr. அரவிந்த்மித்ரன் IPS வேதநாயகத்தின் இரண்டாவது மகன்.அண்ணனை பின் பற்றி காவல்துறையில்  சேர்ந்தான்.இவனுக்கு சட்டத்திட்டம் எல்லாம் கிடையாதுங்க தப்பு செஞ்சா உலகத்துல வாழ தகுதி இல்லனு நினைக்கிற ஆளு(நல்ல அண்ண நல்ல தம்பி 🙄🙄😅😅).

இந்த வீட்டுக்கு தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஹாலின் ஒரு ஓரத்தில் கூடை ஊஞ்சலில் ஆடிக்கொண்டே  டீ குடிக்குறாரே இவர்தாங்க வேதநாயகத்தின் மூன்றாவது பையன் Mr.பிரகாஷ்மித்ரன் M.E final year படிக்கிறான்.அம்மாக்கு தப்பாமல்   பிறந்தபிள்ளை.

தொடரும்.....

( அப்பாடி    ஒரு வழியா  intro முடிந்தது....இனி டைரக்டா  கதைக்குள்ள போய்டலாம்.... ஹீரோயின் intro இப்போ இல்லைங்க So wait and see....).....😊😊😊😊
  
         தொடரும்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.