(Reading time: 8 - 16 minutes)

சைதன்யா அவளது அறைக்கு உறங்கச் சென்றாள்..

எப்பொழுதுமே படுத்தவுடன் உறங்கி விடுவதுதான் சைதன்யாவின் வழக்கம் எந்த கவலைகளும் சஞ்சலங்களும் அவளிடம் எப்போதுமே இருந்ததில்லை எதையும் வெளிப்படையாக பேசி விடும் பழக்கம் உடையவள் ஏதாவது பிரச்சனை என்றாலும் அப்பொழுதே பேசி தீர்த்துக் கொள்வாள் முன்னேரத்தில் தூங்கிப் பின்னேரத்தில் எழுவது அவளது வழக்கம்..
ஒரு சில நாட்கள் இதற்கு விதிவிலக்கும் உண்டு..

இன்று ஏனோ அவளுக்கு உறக்கம் வர மறுத்தது மிதுர்வனை பற்றியே மனது அசைபோட்டுக் கொண்டிருந்தது அவனை நினைத்தவுடன் அவளை அறியாமல் ஒரு புன்முறுவல் வந்துபோனது அப்படியே உறங்கியும் போனாள்..

பால் கொடுக்க வந்த அருணா அவள் புன்னகைத்துக் கொண்டே உறங்குவதை பார்த்தால் அரை வெளிச்சத்தில் அவளின் அழகு இப்போது பன்மடங்கு கூடி தெரிந்தது என்ன நினைவில் சிரித்தபடியே உறங்குகிறாளோ கடவுளே இப்படியே கடைசி வரை சந்தோஷமாக இருந்தால் போதுமென நினைத்து ஓசைவராமல் அவளுக்கு திருஷ்டி கழித்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார்..

அவளது புன்னகை அவருக்கும் தொற்றிக்கொள்ள சிரித்தபடியே அங்கிருந்து கீழே இறங்கி வந்தார்..

மறுநாள் எப்பொழுதும் போல நேரங்கழித்து எழுந்து அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு அவரை வம்பிழுத்து கொண்டு அப்பாவிடம் அரட்டை அடித்துவிட்டு புது உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினாள்..

வழியில் எப்பொழுதும் போல ஸ்கூட்டி மக்கர் செய்ய மெக்கானிக்கை வரவழைத்து அதை சரி செய்து கொண்டு கிளம்பினாள் எப்போதும் எரிச்சல் அடைபவள் இன்று அது கூட அவள் உற்சாகத்தை குறைக்கவில்லை வேறு என்ன மிதுர்வனை பார்க்க போவது நினைத்துதான்.. 

புன்னகையுடன் பொட்டிக் வந்து சில வேலைகளை முடித்துவிட்டு அவனுடைய கம்பெனி சென்று அங்கு வேலைகளை செய்துகொண்டிருந்தாள்..

மிதுர்வனைப் பற்றி கேட்க அவன் காலையிலேயே ஏதோ மீட்டிங் என வெளியே கிளம்பி விட்டிருந்தான் சிறு ஏமாற்றம் வந்தது..

சுந்தரியிடம் நான் இன்று சந்துவுடன் ஹோட்டல் புக் செய்ய செல்கிறேன் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னுடைய போன் நம்பருக்கு கூப்பிட்டு என்று கூறிவிட்டு பிஏ கருணாகரனிடம் சென்று பர்மிஷன் வாங்கிக் கொண்டு சந்துவுக்கு போன் செய்தாள்.. 

நான் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவேன் நீ கீழே இறங்கி வா..
ஓகே சந்து..
சுந்தரியிடம் சொல்லிவிட்டு அவளிடம் சில வேலைகளை ஒப்படைத்து விட்டு கீழே இறங்கி வரவும் சந்து அவன் பைக்கில் வரவும் சரியாக இருந்தது..

என்ன தனு நேற்றே உன்னிடம் போன் செய்து சொன்னேன் ஆனால் இன்று காலையில் போன் செய்தால் என்ன ஏது என முழிக்கிறாய்.. 

நேற்று போன் செய்து சொல்லும் போது என்ன கனவில் இருந்தாயா என அவளைக் கிண்டல் செய்ய அவளுக்கு மிதுர்வன் நினைவில் முகம் சிவந்து போனது..

பொய்யான கோபத்துடன் ஒரு கனவும் இல்லை நீ கனவு காணாமல் வண்டியை ஓட்டு என அவன் தோளில் தட்டினாள்..

அவன் பைக்கில் ஏறியவுடன் அவனும் சிரித்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தான்..

மிதுர்வன் இதை அனைத்தையும் காரில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன் கிண்டல் செய்ததும் அதற்கு அவள் முகம் சிவந்து நின்றதும் கடைசியில் தோளில் தட்டி சிரித்து விட்டு பைக்கில் ஏறி போனதும் கண்டுவிட்டு அவன் முகம் கடினமுற்றது..

ஒரு பைலை மறந்துவிட்டு எடுக்க வந்தவன் இவர்களை பார்த்து விட்டு அப்படியே அமர்ந்துவிட்டான்..

தான் என்னென்னமோ கனவு கண்டு இன்று அவளை காண வேண்டுமென்று ஆசையுடன் வந்திருக்க அவள் இப்படி செய்தது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது..

ஏன் இந்தப் பைலை பிஏவை எடுத்து வர சொல்லி இருந்தால் அவனே கூட எடுத்து வந்து தந்திருப்பான் இவளைப் பார்க்க வேண்டும் என்றுதானே ஆசையுடன் ஓடி வந்தது ஆனால் அதற்குள் இவள் எங்கேயோ கிளம்பி விட்டாள்..

காரில் இருந்தபடியே போன் செய்து பிஏவை பைலை எடுத்து வரச் சொல்லிவிட்டு அதை வாங்கிக்கொண்டு மீட்டிங் நடந்த ஹோட்டலுக்கு வந்தான்..

கம்பெனி ஆரம்பிக்கும்போது அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறகு அந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் என அவர்களை எல்லாம் கவனித்து அதற்கான அனுமதி வாங்க வேண்டியுள்ளது இது தவறுதான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் வேறு வழி கிடையாது அவர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது இது போல நீக்கு போக்காக நடந்தால்தான் ஓரளவு காரியம் சாதிக்க முடியும்..

நாம் நல்லபடியாக மக்களுக்கு பாதிக்காத வகையில் கம்பெனி நடத்தினாலும் இவர்களுக்கு கொடுக்காமல் ஒன்றும் செய்ய முடியாது.. என்ன ஒன்று நம் சைடிலிருந்து மக்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டியது தான் நாட்டு நிலைமை அப்படி இருக்கிறது..

அனைவரையும் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு லஞ்சுக்கு வரவழைத்து அனுமதி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து எல்லோரையும் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தான்..

ஏற்கனவே எல்லாரையும் கவனித்து விட்டதால் அவர்களும் வாயெல்லாம் பல்லாக வருவதாக சொல்லி சென்றனர் இவன் தந்தையும் பெரிய ஆள் இவனும் வளர்ந்து வரும் தொழில் அதிபர் இவனால் பின்னால் ஆதாயம் இருக்கும் அதனால் தான் அவர்களிடம் இந்த குழைவு அவனுக்கும் அது புரியத்தான் செய்தது எல்லோரையும் கை குலுக்கி அனுப்பி வைத்தான்..

அதிகாரிகளுடன் ஃபைலை காட்டி ஒரு சில ஆலோசனைகளை செய்தபின் அவர்களுக்கும் விடை கொடுத்தான்..

எல்லோரும் கிளம்பிய பின் தானும் கம்பெனிக்கு கிளம்பலாம் என நினைக்கையில்,,

"ஏய் தனு இங்கே வா இந்த சைடும் ரூம் இருக்கிறது அதையும் பார்த்து விடலாம்"..

என்ன சந்து நான் உன்னிடம் எப்போது சொன்னேன் நான் சொல்லும்போதே புக் செய்யாமல் நீ இப்போது ஒவ்வொரு ஹோட்டலாய் அலைய விடுகிறாய்..

ப்ளீஸ் தனு என் செல்லம்ல இது மட்டும்தான் இனி உன்னை அலைய விடமாட்டேன் என அவளை கொஞ்சி கெஞ்சி கையை பிடித்து இழுத்து சென்றான்.. 

இவளின் சந்துவும் அவனின் தனுவும் கையை பிடித்து இழுத்து சென்றதும் மிதுர்வனின் முகம் செந்தனலாக  மாறியது..

எவ்வளவு திமிர் நேற்று அவ்வளவு சொல்லியும் இன்று அவனோடு கைகோர்த்து செல்கிறாள் என கோபமாக அங்கிருந்து சென்றான்..

ஆனால் இது எதுவும் அறியாமல் சைதன்யா சந்துவை திட்டிக் கொண்டிருந்தாள் டேய் ஒழுங்கா இங்கேயாவது ரூம் கிடைக்குமானு பாரு  ஏதாவது பேசி மேனேஜரை சரி பண்ணு..

ஏற்கனவே போன ஹோட்டலில் ரூம் புக் ஆகிவிட இருந்த ஒன்றிரண்டு ரூமை புக் செய்தார்கள் அடுத்து இந்த ஹோட்டலில் ரூம் கிடைத்துவிட்டால் கம்பெனி பக்கத்திலேயே அழைத்துவர திரும்பி அனுப்ப வசதியாக இருக்கும் எப்படியோ பேசி அந்த ஹோட்டலிலேயே தேவைப்பட்ட மற்ற ரூம்களையும் புக் செய்தார்கள்..

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திரும்ப கொண்டு வந்து அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இறக்கிவிட்டு சந்துவுக்கு வேலை இருப்பதாக கிளம்பி சென்றான்..

நான் ஈவினிங் வர லேட்டாகும் தனு ஒரு ஆர்டர் விசயமாக செல்கிறேன் சரவணனை இன்னைக்கு பார்க்க சொல்லி இருக்கிறேன் அதனால் நீ நேராக வீட்டிற்கு கிளம்பி விடு பொட்டிக் வேலைகளை நாளைக்கு பார்க்கலாம் எனவும் தலையாட்டி விட்டு சென்றாள்..

எப்பொழுது என்ன வேலை இருந்தாலும் இருவரும் அன்றைக்கான அன்றாட நடப்புகளை பேசி மறுநாள் வேலைகளைப் பிரித்துக் கொள்வது பொட்டிக் ஆரம்பித்ததிலிருந்து அவர்களின் வழக்கம்..

இதுபோல சந்தோஷ் தாமதமாக வர நேர்ந்தால் சரவணனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவார்கள் சந்தோஷ் வரும்வரை அவன் கவனித்துக் கொள்வான்..

சரவணன் சந்தோஷுக்கு உறவுமுறையில் சித்தி பையன்..

இப்போது சந்தோஷ் விழா சம்பந்தமான வேலைகளைப் பார்ப்பதால் சரவணன் பொட்டிக் ஆர்டர்களை வெளி வேலைகளை கவனித்துக் கொள்கிறான் முக்கியமாக சந்தோஷ் பார்க்க வேண்டிய வேலைகளை அவன்தான் போய் பார்ப்பான் இன்றும் அவ்வாறுதான் செல்கிறான் ஏதேனும் தேவையானால் போனில் பேசிக் கொள்வார்கள் இல்லையெனின் மறுநாள் காலையில் பேசிக்கொள்வார்கள்..

யோசித்துக்கொண்டே மூன்றாவது தளம் சென்று அவளின் அறைக்குள் நுழைந்தாள்  சிசிடிவியில் அவள் வந்தது உள்ளே நுழைந்தது எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மிதுர்வன் முகத்தில் அதே கடின தன்மை  இன்னும் இருந்தது..

சைதன்யா வந்ததும் சுந்தரி பக்கத்தில் வந்து., " அக்கா ஏன் லேட் சீக்கிரம் வருவதாய் சொல்லி தானே போனீர்கள்"..

அவள் விவரம் சொல்ல., "என்னவோ தெரியவில்லைக்கா இன்னைக்கு சார் பயங்கர கோபத்தில் இருக்கிறார் எல்லாரையும் வெளுத்து வாங்குகிறார் கிறிஸ்டி அக்கா கூட இரண்டு முறை வாங்கிக் கட்டிக்கொண்டாள்  உன்னை வேறு வர சொல்லி இருக்கிறார் எனக்கு பயமாக இருக்கிறது அக்கா"..

ஏற்கனவே ஹோட்டலை தேடி அலைந்ததில் சோர்வாக இருந்தவள் யோசனையுடன் ஏன்டி நீ பயப்படுகிறாய் நான் கருணாகரன் சாரிடம் சொல்லி விட்டுதான் போனேன் அவருக்கு ஏதாவது ஒர்க் பிரஸராய் இருக்கும் நம் வேலையை நாம் கரெக்டாக செய்தால் நம்மை ஏன்டி அவர் திட்ட போகிறார் பயப்படாமல் நீ போய் வேலையை பாரு..

அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுக்கு அழைப்பு வந்துவிட்டது சுந்தரி கவலையுடன் பார்க்க அவளது தோளில் தட்டி நான் போய் என்னவென்று பார்த்து வருகிறேன் எனக் கிளம்பினாள்..

அவன் அறைக்கு அருகில் வரும் போது ஏனோ ஒரு இனிய பரபரப்பு தோன்றியது அதே எண்ணத்தோடு அறைக்கதவை தட்டினால் உள்ளே வரச் சொன்னவன் அவளைப் பார்க்கக் கூட இல்லை..

"சைதன்யா நீங்கள் நேற்று கேட்டதுபோல் கம்பெனி வேலை செய்ய ஆரம்பிக்கலாம் நானும் கிறிஸ்டியிடம் சொல்லியிருக்கிறேன் அவர்கள் பழைய பைல்களை வாங்கி நீங்கள் சிலது அதேபோல் பண்ணிக் கொண்டு வாருங்கள்"..

அவர்கள் பைலில் இருப்பதைப் போல நீங்களும் உங்களுடையதை மாடலாக தைத்து கொண்டு வாருங்கள் இன்னைக்கு ஈவினிங்குள் ரெடி பண்ணி எடுத்து வாருங்கள் எனவும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது..

அதற்குள் எப்படி இவ்வளவு வேலைகளை செய்ய முடியும் அதோடு வெளியில் அலைந்தது வேறு அசதியாக இருந்தது முகம் கடினமுற அவன் சொல்லும்போது மறுத்துப் பேசவும் வார்த்தை வரவில்லை ஆனால் குறிப்பாக மணியை ஒருமுறை பார்க்க அவன் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை..

கவலையுடன் சரி என தலையாட்டிவிட்டு வெளியே வந்த பொழுது அவளுக்கு அயர்ச்சியாக இருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.