(Reading time: 1 - 2 minutes)

விடியும் நாள்

எந்நாளென்று அறியாது 

நேற்று இன்று நாளை என்று 

சொல்ல பழக்கிவிட்டது கொரோனா...

 

வாரத்தில் ஏழு நாளும் மறைந்து 

மாதத்தின் முப்பதும் கலைந்து 

மூன்று நாட்களை கொண்டே 

நகர்கிறது இக்காலம் .....

 

காமராசரை போலவோ 

கலாமை போலவோ 

வள்ளலாரைப் போலவே 

வள்ளுவரைப் போலவோ 

வாழ்ந்து காட்டாவிடினும் - உன் 

வழியில் சிறப்பாய் வாழ்ந்து விடு...

 

இவனைப் போல வாழ் என்று

இவ்வுலகம் சொல்லாவிடினும் 

இவனைப் போல வாழ்ந்து விடாதே என்று

சொல்லாத அளவு வாழ்ந்திடு.... 

 

மற்றவருக்கு பயந்து வாழாதே 

மனசாட்சிக்கு பயந்து வாழ்ந்திடு...

மரணத்திற்குப் பிறகும் - பலர் 

மனதில் வாழும் பாக்கியம் 

நீ பெற்றால் வாழ்க்கை வரலாறே....

4 comments

  • Dear Jeba! தங்கள் எண்ணங்கள் யாவுமே தூய்மையானது! உயர்ந்தவை! உற்சாகம் தருபவையாக உள்ளது! நாங்கள் படித்து பயன் பெறுவோம்! நன்றி!
  • செம கவிதை வரிகள் அருமையாக உள்ளது புத்தாண்டு அதுவுமாக இத்தனை கவிதைகள் தந்தமைக்கு நன்றிகள் மேம் சூப்பர் :hatsoff:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.