(Reading time: 2 - 4 minutes)

926308bb07c0cee60900f538db090f47

 

முடியாது !
(பூமியின் காதலன் -1)

 

நான் கேட்ட எதையுமே அவன் நிறைவேற்றாமல் இருந்தது இல்லை !
ஆனால் நான் கேட்ட எதற்கும் அவன் சரியென்று உடனே சொன்னதில்லை !

ங்களுக்குள் இருக்கும் இடைவெளி எல்லாம் வார்த்தைகளால் நாங்கள் நிரப்பிக் கொண்டே நகர்ந்தாலும், அவன் எனக்கு புரியாத புதிர் தான். செல்லம் கொஞ்சியோ , கெஞ்சியோ , கோபமாகவோ எதை கேட்டாலும் அவன் பதில் "முடியாது " என்பதுதான் .

பல முறை நானே , எதையேனும் கேட்டுவிட்டு அவன் வாய்திறக்கும் முன் என் கீச்சு குரலால் , முடிந்த அளவு அவனது மிடுக்கை கொண்டு வந்து "முடியாது " என்பேன் . உள்ளூர அவன் அதை ரசிக்கிறான் . ஆனால் அதை கொஞ்சமும் வெளிப்படுத்தாமல் " தெரிஞ்சா சரி" என்பான் .

வன் என்னருகில் இருந்திருந்தால் , அடிக்கடி சந்திக்கும் தொலைவில் இருந்திருந்தால் , நான் என்னை எப்படி எல்லாம் ஒப்பனை செய்து கொள்வேனோ , அதே போல அவனிடம் பேசும் ஒவ்வொரு அலைப்பேசி அழைப்பிலும் நான் என்னை சிந்தனைகளால் அலங்கரித்து கொள்கிறேன் .

என்னுடன் பேசுவது அவனுக்கு அசுவாரஸ்யமாக இருக்க கூடாது , சலிப்பு தட்டிவிட கூடாது என்பதற்காக ஏதேதோ செய்கிறேன் . ஆரம்பர பரஸ்பர நிலையில் இருந்த வெட்கம் இப்போது சுத்தமாய் இல்லை . ஆண் குரலில் பேசுவது , பூனை போல "மியாவ்" என்பது , அவனே எதிர்பாராத செல்ல பெயரை உருவாக்கி அழைப்பது , அரசியல் தொடங்கி அடுத்த வீட்டின் அலங்காரம் வரை அவனிடம் நான் பேசுவது ஏராளம் .

ல நேரங்களில் நான் பேசும்போதே இடைப்புகுந்து பாடுவான் ; சாலையில் கடந்து செல்லும் பெண்ணின் அழகை புகழ்வான் , சாலை நெரிசலை எண்ணி புலம்புவான் . இவனுக்கு என் பேச்செல்லாம் பொருட்டே இல்லை என்று பொருமுவதற்குள் நான் விட்ட வார்த்தையை அவனே தொடர்வான் . அல்லது நான் சொல்லி மறந்த விஷயத்தை அவனாகவே நினைவில் வைத்து பேசுவான் . நடு இரவு 2 மணிக்கு கூட , நான் என்றோ புலம்பிய பழைய தோழனை பற்றி அவனால் நினைவு கூற முடிகிறது . அவன் என்னை அலட்சியம் என்ற போர்வையை போத்திக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கிறான்.

ன் இசைப்பட்டியலில் அவன் குரலால் இசைக்கும் பாடல்களில் இருந்து , அவன் கடைசியாய் எழுதிய கவிதை வரை அனைத்துமே நான் விரும்பி கேட்டதுதான் . ஆனால் நான் கேட்டவுடன் அவன் சொல்லும் முதல் பதில் "முடியாது " !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.