(Reading time: 2 - 3 minutes)

Chillzee KiMo Book Reviews - எங்கே எந்தன் இதயம் அன்பே - பிந்து வினோத்

Chillzee KiMo exclusive Original KiMo Release (OKR) ஆக பப்ளிஷ் ஆகி இருக்கும் முதல் நாவல் பிந்து வினோத்தின் ‘எங்கே எந்தன் இதயம் அன்பே

 

கதை சம்மரி:

ஹீரோ, ஹீரோயின் அரவிந்த், சாந்தி இருவரும் “படிப்ஸ்” ரகத்தை சேர்ந்த டாக்டர்கள். மேல் படிப்புக்காக லண்டனில் இருக்கும் ஒரு ரிசெர்ச் இன்ஸ்டிட்யூட்டில் சந்திக்கிறார்கள், காதலிக்கிறார்கள்.

ஒரு சூழ்நிலையில் அரவிந்தை விட சாந்தி ஸ்மார்ட் என்று கல்லூரி புகழ, அரவிந்த் பொறமைப் படுகிறான், கோபப் படுகிறான். இதனால் காதலர்கள் மனக் கசப்புடன் பிரிகிறார்கள்.

பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரமுடிந்ததா? என்பது மீதி கதை.

 

தையில் வரும் கேரக்டர்களில், அரவிந்த், சாந்தியை தாண்டி மனசில் தங்கும் கேரக்டர் அரவிந்தின் அம்மா “பாரதி”. அரவிந்திடம் கோபப்பட்டு நேரடியாகவே திட்டும் இடத்தில் “சபாஷ் மம்மி” சொல்ல வைக்கிறார்.

 

கதை அரவிந்த் பக்கம் இருந்து ப்ளோ ஆவதால் அவன் மேல் ரொம்ப கோபம் வரவில்லை. இது குட் & பேட். நிறைய சாப்ட் ரொமான்ஸ் கதைகள் பெண்கள் பக்கம் இருந்தே செல்லும். அந்த விதத்தில் இது ஒரு வெல்கம் சேன்ஜ்.

 

சாந்தியிடம் அடி வாங்கி விட்டு சைட் அடிக்கும் அரவிந்த், “ஏற்கனவே கன்னங்கள் வலிக்கிறது” என்று யோசிப்பது “வின்கிங் ஸ்மைலி” டைப். அம்மா கிட்ட எல்லாத்தையும் சொன்னீங்களா என சாந்தி கேட்பதும் அதே டைப் தான்.

 

க மொத்தத்தில் பொழுதுபோக்கிற்கான ஒரு சாப்ட் ரொமான்டிக் கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

அடுத்து பத்மினி செல்வராஜின் Chillzee KiMo exclusive Original KiMo Release (OKR) நாவல் ‘பூங்கதவே தாள் திறவாய்’ உடன் சந்திப்போம்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.