(Reading time: 3 - 5 minutes)

Chillzee KiMo Book Reviews - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - பிந்து வினோத்

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் பிந்து வினோத்தின் நாவல் ‘எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...!

 

கதை சம்மரி:

தையின் ஹீரோயின் நந்தினி, ஹீரோ சதீஷ் குமார் எனும் எஸ்.கே!

அமெரிக்காவில் வசிக்கும் நந்தினிக்கு வேலை தான் உணவு, உடை, சுவாசிக்கும் காற்று எல்லாமே. வேலையை தாண்டி பர்சனல் லைப் என்று ஒன்றும் இல்லாமல் இருப்பவளின் டீமில் புதியவனாக வந்து சேருகிறான் எஸ்.கே.

தன்னுடைய பேச்சு சாமர்த்தியத்தால் எல்லோரையும் கவரும் எஸ்.கே, கல்லாக இருக்கும் நந்தினியையும் கவருகிறான்.

அவனுடைய அக்கறை, பேச்சு, நடவடிக்கை என எல்லாம் அவனுக்கு அவள் மீது தனி அன்பு இருப்பதாக காட்டவும் அவனை காதலிக்க தொடங்குகிறாள் நந்தினி. எஸ்.கே வும் அவளை காதலிப்பதாக நம்புகிறாள்.

ஓரளவிற்கு மேல் பொறுமை இல்லாமல், அவளே எஸ்.கே விடம் ப்ரொபோஸ் செய்கிறாள். ஷாக் அடிக்கும் விதமாக எஸ்.கே அவளுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் அமெரிக்கா வந்ததே வேறு ஒரு பெண்ணிற்காக என்ற உண்மையையும் சொல்கிறான்.

நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்!

எஸ்.கே மீதான நந்தினியின் காதல் என்ன ஆனது? எஸ்.கே தேடி வந்த பெண் யார், என்ன? எஸ்.கே - நந்தினி இணைந்தார்களா என்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறது மீதிக் கதை.

 

தையின் ஆரம்பம் முதல் கடைசி வரை வரும் நந்தினி பளிச்சென்று மனசுக்குள் ஒட்டிக் கொள்கிறாள்.
நான்ட்ஸ்ன்னு எல்லாம் என்னைக் கூப்பிடக் கூடாது என்று கறாராக தொடங்கி நான் உன்னை விரும்புறேன் என எஸ்.கேவிடம் சொல்லும் அளவிற்கு ட்ரான்ஸ்பார்ம் ஆகும் இரண்டு நந்தினி வெர்ஷன்களும் ஸ்வீட்.

கதை முழுக்க நடக்கும் நாஸ்கார் புகழ் சார்லட் நகரம் பற்றி பெரிய அளவில் விபரங்களோ, துணுக்குகளோ இல்லாமல் இருப்பது சின்னக் குறை.

நேரடியான சீன்கள் குறைவு என்றாலும் சூப்பர் ரொமான்ட்டிக் ஹீரோவாக கலக்குகிறான் எஸ்.கே.
நந்தினிக்காக அம்மாவுடைய கஷாயம் கொடுக்கும் போதாகட்டும், அவளுடைய கன்னத்தை உரசிய விரலை ரசிப்பதாகட்டும், நந்தினியை சைட் அடிப்பதாகட்டும் எஸ்.கே வுக்கு நிகர் எஸ்.கே தான் என்று சொல்ல வைக்கிறான்.

நந்தினி - எஸ்.கே ஜோடியின் கெமிஸ்ட்ரி தூள் கிளப்புகிறது!

 

மொத்தத்தில், நம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் அமர்க்களமான ரொமாண்டிக் கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

அடுத்து ஸ்ரீஜா வெங்கடேஷின் ‘காதல் என்னும் அழகியே...’ நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.