(Reading time: 3 - 5 minutes)
பொன் அந்திச் சாரல் நீ

Chillzee KiMo Book Reviews - கங்கை ஒரு மங்கை - ரவை

முந்தைய ரெவியூவில் அடுத்ததாக Chillzee KiMo T-E-N கான்டஸ்ட் நாவல் அர்ச்சனா நித்தியானந்தமின் தாய்க்கிணறு பற்றி பேசுவோம் என்று சொல்லி இருந்தேன். போட்டிக் கதை என்பதால் போட்டி நடக்கும் போது அதை ரெவியூ செய்து வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால் இந்த முறை அந்த நாவலை ரெவியூ செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- அபூர்வா

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் லேட்டஸ்ட் மின் புத்தகம் 'கங்கை ஒரு மங்கை'. இது Chillzee.inல் பல சிறுகதைகள் பகிர்ந்துக் கொண்டிருக்கும் ரவை அவர்களின் ஏழாவது சிறுகதை தொகுப்பு.

  

கதை சம்மரி:

இந்த தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

 

1. அவ ரொம்ப பாவம்மா!

தவறு எது, சரி எது, நியாயம் எது என்பதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் எப்படி வேறுப் படும் என்பதை எடுத்துக் காட்டுகிறது இந்த கதை.

 

2. தாய்க்கு செய்த பிராயச்சித்தம்!

அரசியல் கட்சிகளை எதிர்த்து சுயேச்சையாக தேர்தலில் நிற்கும் பெண் ஒருத்தியை தோற்கடிக்க அரசியல்வாதிகள் செய்யும் சதியில் இருந்து அவள் தப்பினாளா, தேர்தலில் ஜெயித்தாளா என்பதை சொல்லும் கதை.

  

3. நாத்திகரா, ஆத்திகரா?

நம்பிக்கைகளின் பின் இருக்கும் தத்துவங்களை அலசும் கதை.

  

4. பறிபோன பரிவட்டம்!

மகள் வேறு சாதியை சேர்ந்தவனை திருமணம் செய்துக் கொண்டதால் மானம் போனது என்று கோபப் படும் குடும்பத்தை பெரியவர் ஒருவர் உலக உண்மைகளை எடுத்துச் சொல்லி திருத்தும் கதை.

  

5. அலகிலா விளையாட்டுடையான்!

 இளைஞன் ஒருவனின் எதிர்பாராத மரணத்தை எதிர்கொள்ளும் அவனுடைய பெற்றோரின் நிலையை சொல்லும் கதை.

  

6. கங்கை ஒரு மங்கை

கதாசிரியர் vs சினிமா தயாரிப்பாளர் கதை!

  

7. பாட்டியின் மனக்குறை

இன்றைய கால ரொமான்ஸோடு தன் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்து யோசிக்கும் முந்தைய தலைமுறையின் கதை.

  

8. எல்லோரும் நல்லவரே!

இப்போதும் கிராமத்தில் வாழும் சில களங்கமில்லாத தூய்மையான மங்கலை பற்றி சொல்லும் கதை.

 

9. அதற்குப் பெயர் தியாகமல்ல!

தேசத்திற்காக உயிர் துறந்த ராணுவ வீரனின் தியாகத்தை போற்றும் கதை.

   

10. புதிய போர்வீரன்!

பொருளாதார நிலை வித்தியாசங்கள் ஒரு சிறுவனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை சொல்லும் கதை.

 

த்து கதைகளும் பத்து விதம். கதைகளில் சமூக அக்கறை, சமூக ஏற்றதாழ்வுகள், முற்போக்கும் சிந்தனைகள் என பரவி இருப்பது சிறப்பு.

  

மொத்தத்தில், அனைவருக்கும் ஏற்ற நல்ல ஒரு சிறுகதை தொகுப்பு.

 

இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

அடுத்து Chillzee KiMo வில் விரைவில் வெளியாக இருக்கும் Chillzee.in எழுத்தாளர் அமுதினியின் 'மாற்றம் தந்தவள் நீ தானே' நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.