(Reading time: 2 - 4 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - இந்திய மாணவர்கள் vs பாரீன் மாணவர்கள்!

  

மூன்று பாரீன் மாணவர்களும், மூன்று இந்திய மாணவர்களும் ஒன்றாக ஒரு மீட்டிங்கிற்கு செல்ல ரயிலில் பயணம் செய்தார்கள்.

  

ரயில்வே ஸ்டேஷனில், மூன்று பாரீன் மாணவர்களும் தங்களுக்காக மூன்று டிக்கெட்கள் வாங்கினார்கள். ஆனால் இந்திய மாணவர்களோ ஒரு டிக்கெட் மட்டும் வாங்கினார்கள்.

  

"மூணு பேர் எப்படி ஒரே டிக்கெட்டில் போகப் போறீங்க?” என்று பாரீன் மாணவர் ஒருவர் கேட்டார்.

  

“நீங்களே பார்க்க தானே போறீங்க” என்று இந்திய மாணவர்களில் ஒருவர் பதிலளித்தார்.

  

ரயில் வந்ததும் ஆறு பேரும் ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். டிக்கெட் செக் செய்பவர் வருவது தெரிந்ததும் இந்திய மாணவர்கள் ஒரு கழிவறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டார்கள்.

  

மற்றவர்களின் டிக்கெட்டை சரி பார்த்த டிடிஆர், கழிவறைக் கதவைத் தட்டி, “டிக்கெட், ப்ளீஸ்” என்றார்.

  

கதவு கொஞ்சமாக திறந்து ஒரு டிக்கெட்டுடன் ஒரு கை மட்டும் வெளிப்பட்டது.

  

டிடிஆரும் அதைப் பார்த்து விட்டு நகர்ந்தார்.

  

பாரீன் மாணவர்கள் இதைப் பார்த்து, நல்ல புத்திசாலித்தனமான யோசனை என்று ஒத்துக் கொண்டார்கள்.

  

மீட்டிங் முடிந்து ஆறு பேரும் திரும்பி வரும் போது, பாரீன் மாணவர்களும் அதே திட்டத்தை பின்பற்ற முடிவு செய்தார்கள்.

  

ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், அவர்கள் பயணத்திற்கு ஒரு டிக்கெட்டை மட்டும் வாங்கினார்கள்.

  

இந்திய மாணவர்களோ டிக்கட் வாங்கவே இல்லை. மற்ற மூவருக்கும் இதற்கு காரணம் புரியாமல் ஆச்சரியமாக இருந்தது.

  

"டிக்கெட் இல்லாமல் எப்படிப் போவீங்க" என்று பாரீன் மாணவர் கேட்டார்.

  

“நீங்களே பார்க்க தானே போறீங்க” என்று இந்திய மாணவர்களில் ஒருவர் இப்போதும் பதிலளித்தார்.

  

இந்த தடவை ரயிலில் டிடிஆர் வருவது தெரிந்ததும் பாரீன் மாணவர்கள் ஒரு பாத்ரூமிலும், இந்திய மாணவர்கள் ஒரு பாத்ரூமிலும் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.

  

ஒரு நிமிடம் கழித்து இந்திய மாணவன் ஒருவன் வெளியே வந்து பாரீன் மாணவர்கள் இருக்கும் பாத்ரூம் கதவைத் தட்டி, "டிக்கெட், ப்ளீஸ்" என்றார்!

  

ஒரு கை வெளியே வந்து டிக்கெட்டை நீட்டவும், அதை வாங்கிக் கொண்டு மீண்டும் பாத்ரூமிற்குள் சென்று ஒளிந்துக் கொண்டான்!!

  

அப்போ பாரீன் மாணவர்கள் கதி? அதோ கதி தான் 😇😇😇😇!

  

😀😀😀😀😀

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.