(Reading time: 8 - 16 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 06 - சரோஜா ராமமூர்த்தி

  

ப்படியே பல இரவுகள் போயின. வெறும் நெருக்கம் தான். வேறே ஒண்றும் இல்லை. அத்துடன் அவன் தூங்கி விடுவான். இவள் தனக்குள் வெந்து கொண்டிருந்தாள். பெருமூச்சுகள் கண்ணீர், விரக்தி என்று அவளை வாட்டி எடுத்தது. புதுச்சேலை கட்டுவதில்லை. அதிகமாய் பூ வைத்துக் கொள்வதில்லை. முகத்திலே ஏக்கம் ததும்பி நின்றது.

  

ஊரிலிருந்து அம்மா கடிதம் போட்டிருந்தாள்.

  

"நீ குளிச்சிண்டு இருக்கியா? சமத்தா நடந்துக்கிறியா? அங்கம்மாவின் மனசு கோணாமல் நடந்துக்கோ... நான் முடியறச்சே உன்னை வந்து பார்க்கிறேன். உன் அண்ணாவும் மன்னியும் இப்போ சினிமா பார்க்கிறது அதிகமாயிடுத்து. படத்துக்காவது ஒரு நாளைக்குக் கொறஞ்சது இரண்டு போயிண்டிருக்கா"

  

நர்மதா கொல்லையில் உட்காரும் போதெல்லாம் கங்கம்மா முகம் சிணுங்கினாள். "ஏழுமலைவாசா! இப்படிஎன்னை சோதிக் றீயே. இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடக்கூடா துன்னு உன் எண்ணமாக்கும்?"

  

பூரணி மசக்கை என்று சொல்லிக்கொண்டு ஏகப்பட்ட ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். கங்கம்மா மாங்காய்த் தொக்கும், மிளகாய்ச் சட்டினியுமாய்ப் பண்ணி நர்மதா விடம் கொடுத்தனுப்புவாள்.

  

"பாத்துக்கோ! அவளுக்குக் கல்யாணமாகி இரண்டு வரு ஷம்தான் ஆச்சு. அவள் சமத்தைப் பாத்துக்கோ... அவளண் டைகேட்டுத் தெரிஞ்சுக்கோடி புருஷன் கிட்டெ எப்படி நடந் துக்கிறதுன்னு அவன் வேணும்ங்கச்சே நீ வேண்டான்னு இருப்பே. நீ வேணுங்கச்சே அவன் வேண்டாம்னு இருப்பான் போல இருக்கு. ஏறக்கொறைய எங்கதைதான்... பண்ணின

  

பாவம். என் தலைலே இப்படி விடிஞ்சிருக்கு'

  

நர்மதா பூரணியிடம் நாத்தனார் பேசுவதைச் சொல்லி அழுதாள்.

  

"சீ.. சீ... அந்த அம்மாவுக்கு நீ இன்னும் 'உண்டாகலை' யேன்னு இருக்கு. கல்மிஷமில்லாத

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.