(Reading time: 9 - 18 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

அழுகையைச் ச‌மாதான‌ப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌தா? அத‌னால்தான் அர‌சாங்க‌மே ந‌க‌ரைக் காலி செய்யுமாறு எல்லாரையும் கேட்டுக் கொண்டிருக்கிற‌து. யுத்த‌ முய‌ற்சிக்கு உத‌வ‌ முடியாத‌வ‌ர்க‌ள் முட்டுக்க‌ட்டை போடாம‌ல் இருப்ப‌தே பெரிய‌ உப‌கார‌ம்தான்!"

  

"அப்பா! நீங்க‌ள் சொல்வ‌து ரொம்ப நியாய‌ம்! கிழங் க‌ட்டைகள், குழந்தைகள் நகரைவிட்டு வெளியேற‌ வேண்டிய‌துதான். ஆனால் என்னைப் போல்‌ இள‌ம் வ‌ய‌துக்காரி உட‌ம்பில் ச‌க்தி உள்ள‌வ‌ள் யுத்த‌ முய‌ற்சிக‌ளில் ப‌ங்கெடுத்துக் கொண்டு உத‌வ‌ வேண்டுமே த‌விர‌ ஒதுங்கிக் கொண்டா உத‌வுவ‌து?"

  

" நீ என்ன‌த்தைய‌டி கிழிக்க‌ப் போகிறாய்?" என்றாள் காமாட்சி.

  

"ஏன் கிழிக்க‌ மாட்டேன்? வேறு எதுவும் இல்லையானால் பாண்டேஜ் துணியையாவ‌து நுனியில் கிழிச்சுக் க‌ட்டுப் போடுவேன். அடிபட்ட சோல்ஜர்களுக்கு நர்ஸாயிருந்து சேவை புரிவேன்.ஏர் ரெயிட் வார்டனாக இருந்து பணியாற்றுவேன். இன்னும் எத்தனையோ விதங்களில் உதவலாம். மனசு வைக்கணும்.தைரியமும் இருக்கணும்.அவ்வள‌வுதான்." "சிவ சிவா, வெள்ளைக்கார சோல்ஜர்களைத் தொட்டுக் கட்டுப் போடவா? புத்தி போகிறதே, உனக்கு?"

  

"வெள்ளைக்காரா மட்டும்தானா அம்மா? எத்தனையோ இந்திய சிப்பாய்கள் உயிரைத் திரணமாக மதித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்களே, அவர்களுக்கு உதவிவிட்டுப் போகிறேன்."

  

"கமலா! நீ சொல்வது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் யோசித்துப் பார். நம்மை அடிமைப்படுத்தியிருக்கிற ஆட்சிக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?" என்றார் தந்தை மாசிலாமணி.

  

"உஷ்! மெள்ள‌ப் பேசுங்க.பஸ் பிரயாணிகளிலேயே யாராவது சி.ஐ. டி.இருந்து வைக்கப் போகிறான்" என்ற காமாட்சி அம்மாள், நாலா புறமும் மிரள மிரளப் பார்வையைச் செலுத்தினாள்.

  

"அப்படி நீங்கள் நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்பா. இப்போது உத்தரவு கொடுங்கள். எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய்

One comment

  • முதல்தர எழுத்தாளர் என்பது, படித்தவுடன் விளங்கியது. ஆம், அமர்ர் கல்கி! நடந்த கதைப் போல, நடை! வயதுக்கேற்ற உரையாடல்! நாட்டு நடப்பு தொடர்பும்கூட!<br />வணங்கி மகிழ்கிறேன்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.