நெற்றி. அதில் படிந்த சுருட்டைக் கூந்தல். எடுப் பான மூக்கு. வைரம் மின்னியது. மூக்குத்தி சில பேருக்கு டம்போடு பிறந்த மாதிரி ரொம்பப் பொருந்திப்போய் விடுகிறது.
கங்கம்மா தம்பியையிம், தம்பி மனைவியையும் ஆசைதீரப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பு கட்டிவிட்டது.
“வலது காலை எடுத்து வைச்சு வாம்மா-"
நர்மதர் உள்ளே வந்தாள். கூடத்தில் பளபளவென்று சங்கிலிகள் கோத்த ஊஞ்சல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. சுவர் நிறைய தஞ்சாவூர் படங்கள். எதிர் பக்கத்து அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. புது மெத்தைகள் சுருட்டி வைத்திருந்தார்கள்.
"உள்ளே வாம்மா... மொதல்லே காப்பி சாப்பிடு...அப்பு றமா வீட்டைச்சுத்தி பாக்கலாம்" என்று பரிவோடு கங்கம்மா நர்மதாவை உபசரித்தாள்.
நுரை ததும்பும் காப்பி கொண்டுவந்து வைத்தாள். பட்டப்பா இவளைக்கவனிக்காமல் என்னவோ பேசிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.
சமையலறையிலிருந்து கம்மென்று பாயசம் மணத்தது. கசகசர் தேங்காய் அரைத்த பாயசம். கூடவே நெய்யும் விட் டிருப்பார்கள் போலிருக்கிறது.
நர்மதா குளிக்கப் புறப்பட்டாள். ஊர் நாட்டுப்புறம் மாதிரி இருந்தாலும், கங்கம்மா தன் வீட்டில் எல்லா வசதிக ளும் செய்திருந்தாள். குளியலறை வசதியாக இருந்தது. அங்கே. அம்மா ஊரில் விடிய நாலு நாழி முன்பே எழுந்தி ருந்து யாரானும் வராளா வராளான்னுபார்த்துண்டு அவசர அவசரமா குளிச்சுட்டு வந்து பழக்கம். ஆசை தீர ஜலமா கொட்டிண்டு குளிக்கணும்னு அங்கே தொட்டியில் தளும்பிய தண்ணீரைப் பார்த்ததும் நினைத்துக் கொண்டாள் நர்மதா. கிணற்றிலிருந்து இரைத்துக் கொட்டினால் உள்ளே தொட்டி யில் குபு குபுவென்று ஜலம் விழும்படி கட்டி இருந்தார்கள்.
பட்டப்பா உள்ளே இருந்து 'பாரின்' சோப்புக்கட்டி ஒன்று எடுத்து வந்தான். ரேழியிலேயே அந்தச்