(Reading time: 10 - 19 minutes)
Aval Vizittiruntal  - Caroja Ramamurti
Aval Vizittiruntal - Caroja Ramamurti

  

"போயிட்டு வரேன் . "

  

'சரி' என்று தலையசைத்தாள் கிழவி. கன்னங்களில் கோடாகக் கண்ணீர் வழிந்தது. அவசரமாகப் பூ விற்றவளிடம் இரண்டு முழங்கள் பூ வாங்கி அவளிடம் கொடுத்தாள்.

  

அம்மா தூரத்தில் புள்ளியாக மறைந்துபோனாள். தன்னை மறந்து சிறிது நேரம் நர்மதா வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

  

அன்று வந்திருந்த பட்டப்பாவை அவ்வளவு தூரம் விரட்டி இருக்க வேண்டாம் என்று அவளுக்குத் தோன்றியது. அவனிடம் அந்தக் குறை ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவளிடம் உயிராக இருக்கிறான்.

  

பஸ் ஏதோ ஊரில் நின்றது. அவளுக்கு பஸ்ஸின் உள்ளே திரும்பியவுடன் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

  

பாலு ஏறிக்கொண்டிருந்தான். அவனும் அதிர்ச்சியடைந்தான்.

  

"கோபம் தீர்ந்து வறாப்லே இருக்கு'' என்றான் அவன் பக்கமாக நின்று கொண்டு. அவனுக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்னாடி ஒரு கிராமத்தான் தூங்கி வழிந்தான்

  

"கோபமா? யார் சொன்னது?"

  

"பட்டப்பாதான். அவரமாகச் சாப்பாடு போட்டு விரட்டிட்டான்னான். பாவம்!'"

  

நர்மதாவின் பக்கத்தில் இருந்த பெண் இறங்குவதற்கு எழுந்தாள்.

  

"உட்காரலாமா?" என்று கேட்டான் பாலு.

  

''உம்" என்று நகர்ந்து உட்கார்ந்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.