(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

பெண்ணும் பி. ஏ. பாஸ் பண்ணிவிட்டு ஆபீஸுக்குப் போய் உத்தியோகம் பண்ணுகிறதாமே! 'ஏண்டி புருஷாள் எல்லாம் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறாளே, நீ ஆபீஸுக்குப் போய்ச் சம்பாதித்துத்தான் ஆகவேண்டுமாடி?' என்று கேட்டால், 'எதற்கெடுத்தாலும் புருஷன் கையை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?' என்று கேட்கிறாளே! அதிசயந்தாண்டி அம்மா. என் காலத்திலே புருஷனுக்குத் தெரியாமல் நாலு காசு வைத்துக்கொள்ளத் தெரியாதே எனக்கு?" என்று சொல்லி மிகவும் அதிசயப்பட்டாள் பாட்டி.

இதல்லாம் ஒன்றும் அதிசயம் இல்லை பாட்டி. நீ அத்தையுடன் வடநாட்டுக்குப் போய் அங்கே நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காமல் காப்பியையே விட்டுவிட்டு வரப்போகிறாயே, அது தான் ரொம்பவும் அதிசயம் பாட்டி! காசிக்குப் போனால் தனக்குப் பிடித்தமான பண்டம் எதையாவது சாப்பிடுவதில்லை என்று விட்டுவிட வேண்டுமே. காப்பியை விட்டுத் தொலைத்து விடேன்" என்று சீதா பாட்டியைக் கேலி செய்தாள்.

பாட்டியும், பாலத்துடன் காசி க்ஷேத்திரத்தைத் தரிசிக்கப் புறப்பட ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள். 'அங்கே போனால் கோதுமை ரொட்டிதான் சாப்பிடவேண்டும்' என்று சாவித்திரி பயமுறுத்தினாள் பாட்டியை. 'நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காது' என்று சீதா பயமுறுத்தினாள். 'எச்சில், விழுப்பு ஒன்றும் பார்க்கக்கூடாது' என்று சந்துரு மிரட்டினான்.

"நீ பேசாமல் இரு அம்மா. அதுகள் தமாஷுக்குச் சொல்லுகிறதுகள்" என்று பாலம் தாயாரைச் சமாதானப்படுத்தினாள். மாமியாரும், நாத்தனாரும் ஊருக்குக் கிளம்பியதுமே வீடு வெறிச் சென்று போய்விட்டது மங்களத்துக்கு. இன்னும் இரண்டொரு மாதங்களில் சாவித்திரியும் புக்ககம் கிளம்பிவிடுவாளே! மங்களம் இதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.

அம்மாவுக்குப் பாட்டியின் துணப்பன் இல்லாமல் பாத்த, பாசு இருக்காது போல் இருக்கிறது" என்று சந்துரு தாயைக் கேலி செய்தான்.

பாட்டியும், பாலமும் ஊருக்குச் சென்ற ஒரு மாதத்துக்கு அப்புறம் சம்பந்தி வீட்டாரிடமிருந்து ராஜமையருக்குக் கடிதம் வந்தது. அதில் சாவித்திரியை நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.

"எல்லோரும் இப்படி ஒரேயடியாய்க் கிளம்பிவிட்டால் நான் எப்படி ஒண்டியாக இருக்கிறது இந்த வீட்டில்? சந்துரு அவன்பாட்டுக்கு மாடி அறையில் உட்கார்ந்து இருப்பான். சீதாவுக்கு ஹிந்தி வகுப்புக்குப் போகவும், சங்கீதப் பள்ளிக் சுடத்துக்குப் போகவுமே பொழுது சரியாக இருக்கிறது. கொட்டுக் கொட்டென்று வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு எப்படி இருக்கிறது?" என்று மங்களம் அலுத்துக்கொண்டாள்.

கடிதத்தின் வாசகத்தை உரக்க ஒரு தரம் மனைவியிடம் படித்துக் காண்பித்தார் ராஜமையர் :

அன்புள்ள மாமா அவர்களுக்கு ரகுபதி அநேக நமஸ்காரம். உபய க்ஷேமம். சௌ.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.