(Reading time: 10 - 20 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

'இல்லெ, இல்லெ - ஆண் சிங்கங் கெல்லாம் முக்காடு போட்டுட்டு சன்னியாசம் வாங்கிக்க வேண்டியதுதான்! எந்தச் சிநேகிதன் வீட்லே சீட்டாட்டம் போட்டாலும் அந்த வீட்டுப் பொம்பளெங்க காபி போட்டுத் தர்றாங்க.'

 

'துர்ப்பாக்கியசாலிகள்! வேறெ என்ன செய்ய முடியும்? அடிமெங்க!'

 

'அது அவங்க துர்ப்பாக்கிய மில்லெ. உனது! சரி உன் தலெவிதி! சந்தோஷமா நானே உலன் பாண்ட் தச்சிக்கிறேன்.'

 

'கடவுளே உனக்குக் கோடி நமஸ்காரங்க!' மெதுவா பெருமூச்சு விட்டேன். பிடிவாதத்துக்காக அவரே புடவெ வாங்கிவந்து கட்டியாகணும்னு கட்டாயப் படுத்தினா மறுக்கக் கூடிய சக்தி இருக்குமா? கடிதம் எழுதிக்கிட்டே உக்காந்திருந்தேன்--

 

'என்ன எழுதிகிட்டிருக்கே?'

 

திடீர்னு என்னவோ பட்டுது. 'கதெ!'

 

'என்ன கதெ!' ஆச்சரியத்தோடு.

 

'புருஷன் சீட்டாட்டத்துக்குப் போனா மனெவி அழறகதெ!'

 

'ஏன்? தன்னே கூட அழைச்சிட்டுப் போகல்லேன்னா? உன் திமிறும் நீயும்! வீட்டுக்கு வர்றதுக்குள்ளே ஏதாவது தகராறு! சீட்டாடற்து தப்புன்னு எந்த முட்டாள் சொல்றானோ வரச்சொல்லு பாக்கறேன். நானென்ன குடிச்சிட்டுக் கூத்தடிக்கிறேனா? பொறத்தியார் வீட்லே போய் காவல் காக்கறேனா? நீ என்ன நினெச்சிட்டிருக்கே?'

 

'குடிச்சாலும், கூத்தடிச்சாலும், திருடினாலும், கொலெ பண்ணாலும் யார் செய்ற வேலையையும் அவங்கவங்க சரின்னு தான் சொல்வாங்க. அதெல்லாம் தப்புன்னு நீங்க விளக்கம் தர்றது...' மானத்துக்காகக் கண்ணீர் விடாம கன்னத்தெப் புடிச்சிக்கிட்டு பொழக்கடெ பக்கம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.