(Reading time: 9 - 18 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

புண்ணியங்கஎல்லாத்தெயும் நம்பிட்டு வர்றேன்."

" அதெல்லாம் உண்மெயா இருக்கலாம்-- ஆனா தெரியாத அந்த உண்மெங்களெ நம்பி அனுபவிக்கறவாழ்க்கையெ அலட்சியப் படுத்திக்கலாமா? உனக்குமறுபடியும் சொல்றேன். மாமா தப்பு பண்ணினாமன்னிச்சுடு. புருஷனின் நல்ல குணங்களெ அனுபவிக்க வேண்டியது மனெவின்னா, கெட்ட குணங்களெயும்அனுபவிக்க வேண்டியது மனெவிதான். என்னெத்தப்பா நினெக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்! நீ ஒருபெண். அந்த எண்ணம் ஆணிடத்தலெ எப்போதும்இருக்கும். பொம்பளெ வாழை இலை. ஆம்பளெ முளுங்கற பழமொழி உனக்குத் தெரிஞ்சதுதானே?"

"ஆமாம் அண்ணா! வீட்டெக் காப்பாத்திக்கற்துக்குபொம்பளெதான் தனியா முயற்சி பண்ணனும். புனிதமான பாரத நாட்லெ நான் பின்பற்ற வேண்டிய அறிவுரெஇதுதானே!"

நான் பர்ஸிலிருந்து பத்து ரூபா நோட்டு எடுத்துக்கொடுத்துக்கொண்டே "வெச்சிக்கோ பானு! உனக்குஏதாவது தேவெ ஏற்படலாம்." என்றேன்.

"நல்ல ஆளுதான் நீ! எனக் கென்ன செலவு இருக்குது?" என்றாள் சிரித்துக்கொண்டு.

"உனக்கு என்ன செலவு இருக்குதோ எனக்குத்தெரியு மாவட்டும், மொதல்லெ வாங்கிக்கோ! இல்லேன்னாஎனக்குக் கோவம் வரும்."

"நல்லா இருக்குது. உனக்குக் கோவம் வந்தாவரட்டும்!"

"அப்படின்னா இனிமே நான் உங்க வீட்டுக்கு வரவேண்டிய தேவே யில்லேன்னு அர்த்தம்!"

"அதுக்கும் இதுக்கும் முடி போடாதே அண்ணா!"என்று சொல்லி---"சரி, வாங்கிக்கறேன்" என்று கூறிக்கொண்டே என் கையிலிருந்த நோட்டை வாங்கிக்கொண்டாள். "உன்கிட்டே யிருந்து பணம் வாங்கிக்கிட்டதுக் கில்லே. இந்த நிலெமெ வந்ததுக்காக வெக்கப்பட்றேன்" என்றாள் அந்தத் தன்மானத்தின் உருவம்.

"அதுக் கென்ன இப்பொ, வேறொண்ணும் நினெச்சிக்காதெ பானூ! உனக்குப் புடவெங்க இருக்குதா?"

அப்படிக் கேட்பதற்கு எனக்கே வெட்கமாக இருந்தது. பானு வியப்போடு பார்த்தாள். "ஏன்.....?"

"சொல்லு பானூ!"

"இருக்குது"

"உண்மெயெச் சொல்லு"

"உண்மெதான் அண்ணா! அம்மா வாங்கித் தர்றாங்கஇல்லே!"

"இருந்தா சரிதான்! ஆனா என்னெ நம்பு பானூ!எனக்கு உயிர்னு ஒண்ணு இருந்தா அது நீதான்! நீவேதனெப்பட்டா எனக்கு அமைதி கிடையாது. உனக்குஎன்ன வேணும்னாலும் என்கிட்டெ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.