(Reading time: 11 - 21 minutes)
Muthu Sippi
Muthu Sippi

நினைத்தான். மருட்சியோடு மிரளும் அந்தக் கண்களில் குறும்பும். பரிகாசமும் மிதக்க வேண்டிய காலமல்லவா இது! அவை சதா சோகத்திலும், சஞ்சலத்திலும் ஆழ்ந்து நிற்பது

  

அவனுக்கு வேதனையாக இருந்தது.

  

பெண்தான் தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ள முடிகிறது! காதலொருவனைக் கைப் பிடித்தவுடன் அவளுடைய சிரிப்பிலே, பேச்சிலே, நடையிலே அவள் செய்யும் ஒவ்வொரு வேலையிலே புது மாதிரியான, மாறுதல்களைச் சிருஷ்டித்துக் கொள்கிறாள். பள்ளிப் பெண்ணாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வெடுக் வெடுக்கென்று பேசித் திரிந்தவள் பேச்சிலே இப்போது இனிமை மிதந்து செல்கிறது. கலகல வென்று சிரித்துக் கும்மாளமிட்ட கன்னி, காதலனைக் கண்டவுடன் புன்சிரிப்புச் சிரித்து அவன் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள். எத்தனையோ புதுமை பெண்கள் நிமிர்ந்து நடப்பவர்கள் எல்லாம் காதலனைக் கண்டால் கடைக் கண்ணால் தான் பார்க்கிறார்கள். ஆனால்... பெண்ணைத் துயரம் பற்றிக் கொள்ளும் போது அவள் எப்படி மாறி விடுகிறாள்?

  

பவானியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு கன்னத்தில் வழிவதைப் பார்த்தான் மூர்த்தி.

  

”நீங்கள்..." என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டு முடித்தான்.

  

"ஆமாம். பாலுவுக்கு அப்பா இல்லை. அதனால் தான் அவனை ஊரில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஒன்றுக்குப் பத்தாக அவன் மேல் குற்றங்கள் வருகின்றன. அதற்கு நான் என்ன செய்யட்டும்?" என்றாள்.

  

அதற்கு மேல் பவானியின் கண்களிலிருந்து பிரவாகம் பெருகியது.

  

அடுப்பங்கரையிலிருந்து அவள் விசும்புவது. வெகு நேரம் வெளியே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.