(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

போகிற இடத்துக் கெல்லாம் நீ வர முடியுமா என்று தாம் சற்று முன் கேட்டதைப் புரிந்து கொண்டு, எவ்வளவு சமர்த்தாக நடந்து கொள்கிறாள் ஜெயஸ்ரீ என்று மனதுக்குள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.

  

காரை வெளியில் நிறுத்தி விட்டு அவர் உள்ளே நுழைந்ததும் நாகராஜனின் மகள் சுமதி எதிரே ஓடி வந்தாள். கைகளைக் குவித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு , ”டாக்டர், ஜெயஸ்ரீ வரவில்லையா?" என்று கேட்டாள்.

  

முதலில் வருகிறேன் என்று தான் சொன்னாள் அம்மா. பிறகு வரவில்லை என்று சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை போ. காரணம் என்னவாக இருக்கும்? நீ சொல் பார்க்கலாம்.........? ரைட்... அம்மா எங்கே? மாடியில் இருக்கிறாளா?" என்று கேட்டுக் கொண்டே படிகளில் ஏறி மாடிக்குச் சென்றார்

  

ஸ்ரீ தரன்.

  

சுமதி குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள். “அத்தை! அத்தை! டாக்டர் மாமா வந்திருக்கிறார். கை அலம்ப சோப்பும், வென்னீரும் வேண்டுமாம்" என்று கூவிக் கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள் அவள்.

  

பவானி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்தாள். சோப்பை நறுக்கி எடுத்துக் கொண்டே, “சுமதி! உன்னாலே இவற்றை எடுத்துப் போய் மாடி:பில் கொடுக்க முடியுமா?" என்று கேட்டாள். சிறிது நின்று யோசித்து விட்டு, ”அந்த கோபாலன் பொருந்தி வேலை செய்கிறதில்லை. பெண்டாட்டியை சினிமாவுக்கு அழைத்துப் போகிற ஜோரில் பாதி வேலைகளைப் போட்டு விட்டுப் போய் விட்டான். வென்னீர் சுடப் போகிறது. நானே எடுத்து வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டு மாடிக்குப் போனாள் பவானி.

  

கோமதியின் உடம்பு பவானி வந்த பிறகு எவ்வளவோ தேறியிருந்தது. வெள்ளை வெளேர் என்று வெளுத்துப் போயிருந்த கன்னங்களில் செம்மை படர ஆரம்பித்திருந்தது. நாலைந்து பவுண்ட் நிறை கூட ஏறி இருப்பதாக ஸ்ரீதரன் கூறினார். கை - நாடியைப் பரிசோதித்து விட்டு அவர், ”பலவீனம் ரொம்பவும் குறைந்து விட்டது. இன்னும் மூன்று ஊசிகள் போட்டால் போதும். பிறகு தேவையில்லை. மாடியிலேயே இப்படி அடைந்து கிடக்காதீர்கள், காற்றோட் டமாக

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.