(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அடேடே! எனக்கெதற்கப்பா வாங்கினாய்? என்றான் நண்பன்.

  

பரவாயில்லை, போய் விட்டு வரலாம்" என்று மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினான்.

  

பெண்கள் விடை பெற்றுக் கொண்டு அந்த அறை மயக் கடக்கும் போது ஒருத்தி சொன்னாள். ”அடி ராதா! நீ வந்திருக்காவிட்டால் எங்களால் பத்து டிக்கெட்டுகள் கூடவிற்றிருக்க முடியாது. கெட்டிக் காரியடி நீ!"

  

ராதா கல கலவென்று சிரித்தாள். ”பூ! இதென்ன பிரமாதம்? நீ தான் கட்டுப் பெட்டி மாதிரி தலையை குனிந்து கொண்டு நின்றாய், பேசுகிற விதத்தில் பேசினால் ஒருவர் இரண்டு டிக்கெட்டுகள் என்ன நாலைந்து டிக்கெட்டுகள் கூட வாங்கிக் கொள்வார்"

  

என்றாள்.

  

இருந்தாலும். ராதாவின் கண்களுக்கு அடிமை ஆகாமல் ஒருத்தர் இருக்க முடியுமா?" என்று சொல்லிக் கொண்டே மற்றொரு பெண் செல்லமாக ராதாவின் கன்னத்தில் தட்டினாள்.

  

சீ! போடி?" என்று சொல்லிக் கொண்டே ராதா மறுபடியும் கலகலவென்று சிரித்தாள். மூர்த்தி ஜன்னல் ஓரமாக நின்று கீழே தோட்டத்தில் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அந்தப் பெண்களின் மத்தியில் போய் ராதாவைக் கண் இமைக்காமல் பார்த்தான். அவர்கள் அவன் பார்வையை விட்டு மறைந்ததும் அறைக்குள் திரும்பி, ”கோபி! கட்டாயம் இந்த டிராமாவை 'மிஸ்' பண்ணக்கூடாதுடா!?" என்று சொல்லிக் கொண்டே டிக்கட்டுடன் அவர்கள் கொடுத்த நாடக நோட்டீசை எடுத்துப் பார்த்தான், நடிப்பவர்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்பட்டன. முதலில் மிஸ் ராதா, பி. ஏ. மீரா' என்று போடப்பட்டிருந்தது.

  

மனிதன் சிந்திக்கும் சிந்தனைகள், செய்கைகள் யாவுமே புனிதமானவை என்று சொல்ல முடியாது. தன்னால் கூடுமான வரையில் நல்லவைகளையே செய்து நினைத்து வாழ்ந்தானாகில் அவன் வாழ்க்கையில் ஓரளவு உண்மையாக வாழ்ந்தவன் என்று சொல்லலாம். அப்படி இராமல் அவன் எண்ணும் எண்ணமெல்லாம், செய்யும் செய்கைகள் எல்லாம் பிறர் மனத்தை நோகச் செய்வனவாகவும் இழிவானவை-களாகவுமே இருந்தால்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.