(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 10 - சரோஜா ராமமூர்த்தி

2.10. கண்டான் ராதாவை .....

  

ன்றிரவு நாடகம் பார்த்து விட்டு வந்த மூர்த்திக்கு வேறு எதிலும் மனம் செல்லவில்லை. ராதையின் எழில் உருவம் அவன் மனத்தில் நிறைந்திருந்தது. தன்னைக் கோபிகையாக பாவித்துக் கொண்டு மீரா கண்ணனுடன் கனவில் விளையாடிய காட்சி அவன் மனத்தில் பதிந்து போயிற்று. அவளுடைய அழகிய முகத்தில் எத்தனை விதமான பாவங்கள் வெளிப்பட்டன! அவள் கணீர், கணீர் என்று பேசியும் பாடியும் சபையோரிடம் வாங்கிய பாராட்டுக்களை நினைத்து மூர்த்தி மனம் களித்தான். எல்லோரும் தான் சிரிக்கிறார்கள். ஆனால் ராதா சிரித்தால் அதில் ஒரு தனி அழகு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. இப்படி எதையோ நினைத்துக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவும் மூர்த்தியை அவன் நண்பன் கோபி கவனித்தான்.

  

"என்னப்பா இது! குட்டி போட்ட பூனை மாதிரி அலைகிறாயே, சரியாகச் சாப்பிடுகிற-தில்லை, தூங்குகிற தில்லை. மூன்று நாட்களாக ஆபீஸ் வேலைக்கு மட்டம் வேறே!" என்று கேலி செய்தான் கோபி.

  

"அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா, அந்தப் பெண் யார்? எங்கிருக்கிறாள் என்பது ஒன்றும் தெரிய வில்லையே?" என்று கூறினான் மூர்த்தி. கோபிக்கும் அந்த விவரங்கள் ஒன்றும் தெரியாது.

  

"ஓஹோ! அதுதானா விடியம்? என்னவோ என்று பார்த்தேன்" என்று கூறிவிட்டு அவன் காலேஜூக்குப் புறப்பட்டார்.

  

மூர்த்திக்குத் தனியாக அந்த அறையில் இருப்புக் கொள்ளவில்லை. உடுத்திக் கொண்டு வெளியே புறப் பட்டான். நேராக சைனா பஜாருக்குச் சென்று தன் காரியாலயத்தில் நுழைந்து, டெலிபோன் அறைக்குள் சென்றான். ஜேபியிலிருந்த நாடக நோட்டீசை எடுத்து எந்தக் கல்லூரி மாணவியர் அன்று நாடகம் போட்டார்கள் என்று கவனித்து விட்டு, அந்தக் கல்லூரிக்குப் 'போன்' செய்தாள்.

  

காலேஜ் பிரின்ஸிபால் பேசினார்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.