(Reading time: 5 - 10 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 15 - சரோஜா ராமமூர்த்தி

2.15. காதல் வேகம் ...!

  

ங்கே வீட்டில், சுவாமிநாதன் ராதாவைப் பற்றிக் கவலையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சென்னை நகரின் பிரபலமான ஹோட்டல் அறை ஒன்றில் ராதாவும் மூர்த்தியும் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அடையாறு பக்கம் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கக் கிளம்பியவர்கள், மழை பிடித்துக் கொள்ளவே நேராக டவுனுக்குச் சென்று, ஹோட்டல் ஒன்றில் நுழைந்தார்கள். அங்கே விதம் விதமாகத் திரியும் ’நாகரிகம்' மிகுந்த ஆடவர்களும், பெண்களும் கூட்டங் கூட்டமாக வளைய வந்தனர். பீங்கான் கோப் பைகளின் சத்தமும், கலீரென்று எழும் சிரிப்பும், 'கம்' மென்று எழும் வாசனையும் அதை சுவர்க்க லோகமாக மாற்றி இருந்தது . அண்மையில் சாக்கடை ஓரங்களில், மழைத் தண்ணீர் சொட்ட வாடும் மக்களும் இருக்கிறார் கள் என்பதை ஹோட்டலுக்குள் இருந்த ஒரு சிறு கூட்டம் அறவே மறந்து இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

  

மூர்த்தியும் ராதாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். சற்றுத் தொலைவில் நாகராஜன் தன் வியாபார நண்பருடன் பேசிக்கொண்டே ஒரு மேஜை அருகில் உட்கார்ந்திருந்தான். ராதா இரண்டடி பின் வாங்கினான்.

  

"இப்படி வாருங்கள். அவர் என் அண்ணாவுக்குத் தெரிந்தவர். நாம் இப்படி வெளியில் சுற்றுவதைப் பார்த்தால் ஏதாவது..." என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள் ராதா மறுபடியும்.

  

"ஓகோ! யார் அவர்?" என்று கேட்டான் மூர்த்தி.

  

'கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறார். ரொம்பவும் தெரிந்தவர்: அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். விதவை. பார்ப்ப தற்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள்....பாவம்..."

  

"அப்படியா? இவ்வளவு 'சோஷியலாக' இருக்கிற மனுஷர், தங்கைக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக் கூடாது?" |

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.