(Reading time: 12 - 24 minutes)
Irulum oliyum
Irulum oliyum

என்பது போல் அவன் தைரியமாக இருந்தான்.

“அண்ணா... அண்ணா...” என்று விம்மினாள் மல்லிகா. கந்தசாமி அதிர்ந்து போனான்.

“என்னம்மா... நீ... பச்சைக் குழந்தை மாதிரி... இப்போ இன்னாதான் நடந்துட்டுது? உன் பேரு, அனாவசியமாய் கெடுமேன்னுதான் அந்த கம்மனாட்டிய அத்தோட விட்டேன். அயாதம்மா... இந்தாபாரு, நீ அயுறதப் பார்த்துட்டு... அம்மா அயுவுது, அப்பால எனக்கும் கண்ணீர் வருது...”

எல்லோரும், ஒரு வித திடுக்கிடும் எதிர்பார்ப்புடன் இருந்த போது, ஒரு டாக்சியில் இருந்து, இரண்டு போலீஸ்காரர்களும், சப் இன்ஸ்பெக்டரும், வீட்டுக்காரியும், ரமணனும் இறங்கினார்கள். வீட்டுக்காரி, “இவன் தான். இவள் காலரைப் பிடித்தாள். அதோ அவள் கழுத்தை நெரித்தாள். இந்த செல்லம்மா தான் தூண்டி விட்டது. இவளத்தான் மொதல்ல உதைக்கணும்” என்றாள். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு.

சப் - இன்ஸ்பெக்டர், பேசாமல் கோபத்தோடு நின்ற போது, போலீஸ்காரர்களில் ஒருவர், கந்தசாமியை நெருங்கினார்.

“ஏண்டா சோமாறி... நீ பெரிய ரவுடியா...”

“நான் பெரிய ரவுடியும் இல்ல. சின்ன ரவுடியும் இல்ல. சாதாரண மனுஷன் சார்.”

“எதிர்த்தா பேசுறே கயிதே.”

“உன்னை என்ன பண்றோம் பாரு... இந்தாப்பா, இவன் கையை மடக்கிக் கட்டு” என்றார் சப்-இன்ஸ்பெகடர் கோபமாக.

ஒரு போலீஸ்காரர், கந்தசாமியின் கைகளை வளைத்துப் பிடிக்கப் போனார்.

மல்லிகா, நடப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்தாள். ஏதோ ஒன்று, அவளுள் பிறந்து, அவளுள் வளர்ந்து, அவளுள் நின்று, அவளை விட பெரிதானது போல் தோன்றியது. கல்லூரி மேடைப் பேச்சின் போது நிற்பாளே... அப்படிப்பட்ட கம்பீரம்... அப்படிப்பட்ட அஞ்சாப் பார்வை.

“எக்ஸ்க்யூஸ் மீ... நீங்க சப் - இன்ஸ்பெக்டர் தானே...”

“பார்த்தால் எப்படித் தெரியுது?”

“சார்... இந்த அகங்காரமான பேச்சு வேண்டாம். நீங்கள் நடந்ததை விசாரிக்காமலே ஒருத்தரை மட்டும் உதைக்கப் போகிறது சட்ட விரோதம். அந்த அம்மாவோட அண்ணன் இன்ஸ்பெக்டர். அவரோட செல்வாக்குல நீங்கள் வந்திருகீங்கன்னு தெரியும். இவன்... என்னைக் கெடுக்க வந்தான். என் அண்ணா அவனை தற்காப்புக்காக அடித்தது உண்மைதான். நான் இப்பவே புகார் எழுதித் தர்றேன். கெடுக்க முயற்சி செய்கிறவனை நீங்கள் பதினைந்து நாள் காவலில் வைக்கணும். நான் வேணுமுன்னாலும் ஸ்டேஷனுக்கு வாரேன். இப்படி இல்லாமல், அண்ணனை மட்டும் நீங்க கூட்டிக்கிட்டு போறதாய்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.