(Reading time: 6 - 12 minutes)
Vata malli
Vata malli

சொன்னான்.

  

மெடிகல் காலேஜ் ஹாஸ்டலுக்குப் போகலாம்.”

  

முடியாது... அவ்வளவு பேசிட்டு எந்த முகத்தோட போறது.”

  

அப்போ உங்க சுயமரியாதைக்காக இவனை இங்கேயே சாக விடுறதா?”

  

மாணவர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே சுயம்பு மருத்துவ மாணவர் விடுதிக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கே அதட்டிய வாட்ச்மேனை பல குரல்கள் அதட்டின. உடனே அவன் பயந்துபோய் விடுதி மாணவர் செயலாளர் டேவிட்டின் அறையைக் காட்டினான். கூடப் போக உதறல்.

  

டேவிட் அறை முன்னால், சுயம்புவைத் தரையில் கிடத்தினார்கள். மாணவர்களின் கூச்சலில், டேவிட் கதவு தட்டப்படாமலேயே வெளியே வந்தான். துள்ளத் துடிக்கக் கிடந்தவனைப் பார்த்துக் குனிந்து நாடி பிடித்தபடியே கேட்டான்.

  

எப்படி இது. ஏதாவது மருந்து கொடுத்தீங்களா...”

  

நீங்க சொன்னது மாதிரி டாக்டர்கிட்ட கூட்டிப் போனோம். ‘டிரான்குலை’சர்னு எழுதிக் கொடுத்தார். நைட்ல ஒண்ணுதான் கொடுக்கச் சொன்னார். நாங்க இவன் அதிகமா உளறுறான்னு கூட ஒரே ஒரு மாத்திரையைத்தான் போட்டோம். இப்படி ஆயிட்டான்.”

  

நாங்க எப்படி என்ஜினியராகக் கூடாதோ, அப்படி நீங்களும் டாக்டராகக் கூடாது. ஒரு மாத்திரையையே தாங்க முடியாது. இதுல வேற ரெண்டா. கவலைப் படாதீங்க. ஆளு சாகப் போறது மாதிரி அந்த மாத்திரை அடம் பிடிக்கும். வெறும் மிரட்டல் தான். நாம சண்டை போட்டோமே, அப்படி ஒரு பொய்ச் சண்டை. சரி, சரி பிரிஸ்கிரிப்ஷனை எங்கே. ஏன் அப்படி கைய விரிக்கீங்க. போய்க் கொண்டு வாங்க. நான் கீழே டிஸ்பென்சரிக்குப் போறேன். அங்க கொண்டு வந்துடுங்க. இவர் இங்கய இருக்கட்டும்.”

  

சுயம்புவை அங்கே கூடிய மருத்துவ மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சக பொறியியல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.