Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவை - 5.0 out of 5 based on 2 votes

" இவ்வளவு பணத்தை எப்படி ......?"

" அதுவா? ஊருலே எனக்கு கொஞ்சம் நிலம், ஒரு ஓட்டு வீடு இருந்ததை விற்று இருபது லட்சம் சமாளிச்சோம், என் நாலு பிள்ளைங்க தலைக்கு ரெண்டு லட்சம் கொடுத்தாங்க, மீதி கடன்!"

" இப்ப சொல்லுங்க, எங்களாலே முப்பது லட்சம் புரட்ட முடியுமா? என் தாத்தாக்கள் யாருக்கும் சொத்துக்கள் கிடையாது, எங்கப்பா முப்பது வருஷ சர்வீஸிலே சம்பாதித்து சேர்த்துவைத்தது, 'ஒரு பைசா லஞ்சம் வாங்காத நாணயஸ்தர்' என்கிற பெயர்தான்! இதை புரிஞ்சிக்காம, மற்றவங்களுக்காக, ஊருக்காக, நாமும் செலவு செய்துதான் ஆகணும், வேற வழியில்லேன்னு பிடிவாதம் பண்றாங்க அப்பா, அம்மா! தாத்தா! இது சரியா?"

" ராகினி! நீ சொல்றது, ரொம்ப கரெக்ட்! நான் அவங்களிடம் பேசி சிக்கனமா செலவு செய்ய சொல்றேன், நீயும் ஒரு விஷயத்தை யோசிக்கணும்! நீ அவங்க பெற்ற ஒரே மகள் மட்டுமல்ல, ஒரே குழந்தையும்கூட! அவங்க வாழறதே உனக்காகத்தான்! உன் கல்யாணத்தை விமரிசையாக செய்ய அவங்க ஆசைப்படறது, இயல்புதானே?"

" அங்கேதான், தாத்தா! பிரச்னையே! முதல்நாள் நிச்சயதார்த்தம், மறுநாள் காலையிலே கல்யாணம், ஈவினிங் ரிசப்ஷன், அன்னிக்கி ராத்திரியே சாந்தி எல்லாம் செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிறா, எங்கம்மா, வைதீக சிரோன்மணியின் பொண்ணு!"

" இருக்காதாம்மா, ரத்தத்திலே ஊறின பரம்பரை நம்பிக்கைம்மா அது! "

" ஐயோ, தாத்தா! அந்த நம்பிக்கையை அடமானம் வைச்சு முப்பது லட்ச ரூபா புரட்டமுடியுமா? இல்லே, எங்கப்பா சம்பாதிச்சுருக்காரே, 'நாணயமானவர்' பட்டம், அதை வைச்சு புரட்டமுடியுமா?"

" கரெக்ட், ராகினி! சரி, உன் யோசனை என்ன?"

" இதுக்குத்தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்! 'டக்'னு பாயிண்டுக்கு வந்துட்டீங்க! தாத்தா! நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவளில்லை, வைதீகம் வேஸ்ட்னு சொல்றவளுமில்லே, நாலுபேருக்கு வாழ்க்கையிலே ஒரு சந்தர்ப்பத்திலே சாப்பாடு போடறது தப்புன்னும் நினைக்கலே, நான் பேசறது யதார்த்தம்!"

"நூறு சதவிகிதம் நான் உன் கட்சி! ரெண்டுநாள் சாப்பிட்டவங்களோ, 'பேஷ்,பேஷ்'னு கைதட்டினவங்களோ, நாளைக்கு நீங்க கடனை அடைக்கமுடியாம திண்டாடறபோது, ஒரு பைசா தரமாட்டாங்க! அடிப்படையிலே, லட்சக்கணக்கிலே கடனை வாங்கி எந்தக் காரியம் செய்தாலும், அது பைத்தியக்காரத்தனம், போலி வாழ்க்கை!"

" எக்ஸலெண்ட் தாத்தா! அநேகமா உங்க ஆதரவு கிடைத்தாச்சுன்னு நினைக்கிறேன், நான் சொல்றது இதுதான், கல்யாணம் என்பது தனிப்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டது, பர்ஸனல்! சட்ட விதிகளுக்காக, பதிவுத் திருமணம் செய்துக்கலாம், அப்பா அம்மா ஆசைக்கு ஒரு கோவில்லே, சாமி விக்கிரகத்துக்கு முன்பு, தாலி கட்டிக்கிறேன், நாலுபேருக்கு விஷயம் தெரிய, பத்திரிகையிலே சின்ன விளம்பரம் கொடுத்திடுவோம். அதிகபட்சமா இருபதாயிரம் ரூபா செலவாகும். சமாளிக்கலாம். சரிதானே, தாத்தா?"

" வாவ்! சூப்பர்! ராகினி! பதிவுத் திருமணத்திலே சாட்சி கையெழுத்து போட நான் ரெடி!"

" இப்பவே நீங்க என்கூட எங்க வீட்டுக்கு வந்து எங்கப்பா, அம்மாவிடம் பேசி அவங்களை சம்மதிக்க வையுங்க, தாத்தா!"

" ராகினி! அவசரப்படாதே! நாம ரெண்டுபேரும் சேர்ந்துபோனாலே, ஏதோ கட்சி சேர்த்துண்டு வராபாருன்னு உன்னை திட்டுவாங்க! அதனாலே, நீ இப்ப வீட்டுக்குப் போ! நீ வீட்டிலே இல்லாதபோது நான் உங்கப்பா, அம்மாவிடம் பேசறேன். அவங்க சொல்றதையும் தெரிஞ்சிண்டு முடிவுக்கு வரதுதானே நியாயம்!"

" ஓ.கே., தாத்தா! வெற்றிகரமா முடிச்சுக்கொடுத்துடுங்க! அச்சாரமா, இப்பவே ஒண்ணு கொடுத்துடறேன்" என்றவள், தாத்தாவின் கன்னத்தில் ஒரு 'இச்'சை பதித்துவிட்டு ஓடினாள்.

மறுநாள், ராகினி வேலைக்குப் போனபிறகு, தாத்தா அவள் வீட்டில் நுழைந்தார்.

" வாங்க, தாத்தா, வாங்க! நானே உங்களை வந்துபார்க்கணும்னு நினைச்சிண்டிருந்தேன், கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாமாதிரி, நீங்களே வந்துட்டீங்க! மாதவி! இங்கே வந்து பார், யார் வந்திருக்காங்கன்னு!"

ராகினியின் தாய் மாதவி வந்து பார்த்துவிட்டு, தாத்தாவின் காலைத்தொட்டு கும்பிட்டாள், அவளைத் தொடர்ந்து, சோமுவும் தாத்தாவின் காலில் விழுந்தார்.

" தாத்தா!........" என்று மாதவி பேசத் துவங்கியவளை, தடுத்து, " இருங்க, இருங்க, ராகினி என்னை 'தாத்தா'னு கூப்பிடறா, சரிதான்! உங்க ரெண்டுபேருக்கும்கூட நான் தாத்தாவா?" என்று சிரித்தார்.

" அதில்லே, தாத்தா! நீங்க இந்த காலனியிலே வசிக்கிற எல்லாருக்குமே தாத்தா! அப்படி அழைக்கிறதிலே ஒரு மரியாதை தருகிறோம். நீங்க பொதுவான மனிதர், ஒரு முறையிலே!இன்னொரு முறையிலே எல்லோரையும் நேசிக்கிற, எல்லாருக்கும் நல்லது, கெட்டது சொல்ற நெருங்கின சொந்தமும்கூட!"

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைAbiMahesh 2019-02-12 21:33
Great story Sir.. We need to conduct wedding/functions like this as per our capabilities. Great message from Rohini and Thatha..
Thank you Sir :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-13 07:10
Dear Abhimahesh,
Thanks. Apart from appreciating the story, all of you need to carry forward the message in the society, for the results!
Sure, your comments will spur the movement!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைmadhumathi9 2019-02-12 17:28
:hatsoff: to u sir.great story.niraiya per naduthara vargathinar idhey thappai seithu maattikkolgiraargal.intha yosanaiyai pin patrinaal kadan thollaiyilirunthu viduthalai thaan.superb idea :clap: :clap: (y) :GL: vaaltugal sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 17:40
Dear Madumathi madam,
Greatly pleased that you continue to support me!
பெண்கள் தங்களுக்கு நியாயமாக உரிய இடத்தை சமுதாயத்தில் பெற தடையாயிருப்பதில், துரதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆகவே முதலில் பெண்களின் பிற்போக்குத்தனத்தை போக்க பாடுபட்டாகவேண்டும்! ஒட்டுமொத்த பெண்குலமே ஒன்றுசேர்ந்துவிட்டால், அடுத்த கணமே வெற்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 18:25
Thanks a lot Madhumathi9!
சில்ஸீ பெண் எழுத்தாளர்கள், வாசகர்கள் பெருவாரியாக இந்தக் கதையை விமரிசிக்கவேண்டும். இது அவர்கள் பிரச்னை!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைAdharvJo 2019-02-12 16:15
:dance: good job grandpa….illati namba vera gift vanga mandai-a break seithu irukanum, uncle :D

100% fact fact fact :yes: People still don't understand the value of pouring money on wedding facepalm ore pullai kiri pullain parents dialogue adikuradhai eppo viduvangalo....2. when we don't have the potential to repay the loans we are not supposed to think abt loans and lavish spending 3. Rightly said it would be great insult and big burden. 4. apro elders kids solluradhu-k eppo pa value tharuvinga :yes: nangalum silla samyam arivaligal thaan petrorgale...thatha sonna inikidhu pethi sonna kasakudha what a pity. :sad: thank you for sharing your story with this much required message...its not just wedding we need to think before taking loans. :yes: and waste spending.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 16:40
I am your fan, Dear Jo!
Thanks for the woderful comments! En kadaiyai vida, unga comments suvaiya irukku!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைkarna 2019-02-12 14:14
அற்புதமான ஆழமான கதை நன்றி ஐயா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - புலியைப் பார்த்து பூனை......... - ரவைRaVai 2019-02-12 16:41
Dear Karna,
Thanks.
The choice of words reveals the level of your appreciation.
Keep supporting me, Karna!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top