Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Login

Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவை - 5.0 out of 5 based on 1 vote

" அதில்லேம்மா! நீ சொன்ன ரெண்டு மாசம் முடிஞ்சுபோச்சே, இப்ப என்ன நிலமை?"

" அதையேன் கேட்கிறீங்க! 'நீ சொன்ன யோசனையை நீ முதல்லே செய்துகாட்டு, பிறகு நாங்களும் செய்யறோம்னாங்க, நியாயம்தானேன்னு எங்க வீட்டு வேலைக்காரியை நிறுத்தினேன்......"

" அதான், யூனியனில்லையே, வேலைக்காரி என்ன செய்யமுடியும்?"

" அப்படி நினைச்சுத்தான், நிறுத்தினேன், ஆனா, அடுத்த நிமிஷமே, எல்லா வேலைக்காரிகளும் ஸ்டிரைக் பண்ணிட்டாங்க........."

" அதெப்படி, யூனியன் இல்லாதபோது.....?"

" மெம்பர்ஸ் இல்லாதபோது, யூனியனாலே ஸ்டிரைக் பண்ணமுடியாது, ஆனா, யூனியன் இல்லாம, தொழிலாளிங்க ஒண்ணா கூடி முடிவெடுக்கலாமே......"

" அவ்வளவு ஒற்றுமையா?"

" எல்லா வேலைக்காரிகளும் வாட்ஸ் அப்பிலே பேசிக்கிறாங்க, தீ பரவுகிற மாதிரி, செயல்லே இறங்கிட்டாங்க...."

" அவ்வளவு ஒற்றுமையா!....."

" நீங்கவேற, வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க, .......இதை கேளுங்க! மற்ற வீட்டுக்காரங்க அடுத்த நிமிஷமே எனக்கு வாட்ஸ் அப்பிலே பேசிட்டு, நேரிலேயும் வந்து, தர்ணா பண்றாங்க........"

" அவங்க சொல்லித்தானே, நீ வேலைக்காரியை நிறுத்தினே, இப்ப எப்படி உன்னை குற்றம் சொல்லலாம்?"

" இந்த நியாயத்தைப் பேச அங்க ஆளே இல்லே, பதிலா, அவங்க என்ன கேட்கறாங்க தெரியுமா? 'உன் பேச்சைக்கேட்டுத் தானே, சம்பளத்தை இருமடங்காக்கினோம், இப்ப எங்க பணமும் போச்சு, பிரச்னையும் பெரிசாயிடுச்சு'ன்னு என்னை குற்றம் சொல்றாங்க.......இப்ப நான் என்ன பண்றது?"

" ஆமாம், அதைப்பற்றி யோசிக்காம, ரவையை திட்டறதுக்கு இங்க வந்து நின்னு உன் டயத்தை ஏன் வேஸ்ட் பண்றே!"

" பெரிசு! சும்மா ஒரு பேச்சுக்குத்தான் ரவையை திட்டறதுக்கு வந்ததா, சொன்னேன், உண்மையிலே, நான் வந்த காரணமே வேறே.........."

" தமிழரசி! நானும் ஆரம்பத்திலிருந்து கவனிக்கிறேன், 'சும்மா ஒரு பேச்சுக்கு'ன்னு, நீ எல்லாரையும் ஏமாற்றிக்கிட்டே வரே......."

தமிழரசி தலை குனிந்தாள்.

" சரி, போகட்டும், திட்டறதுக்கு வரலைன்னா, வேற எதுக்கு வந்திருக்கே?"

" நான் இப்ப பொறியிலே மாட்டிண்ட எலிபோல என்ன செய்வதுன்னு தெரியாம, முழிக்கிறேன்,.....பெரிசு! நீதான் ரவைகிட்ட........."

"அந்த மேதாவிகிட்ட........."

" பார்த்தியா, பார்த்தியா, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா...அதையே சொல்லிக்காட்டறியே, நியாயமா?"

" மறுபடியும், 'சும்மா ஒரு பேச்சுக்கா'?"

" உன் காலிலே வேணும்னா விழறேன், நீதான் ரவைகிட்ட சிபாரிசு பண்ணி என்னை காப்பாற்றணும், ப்ளீஸ்!"

"இதை சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றியா, இல்லே நிஜமாவே சொல்றியா?"

தமிழிரசி அவர் காலில் விழுந்தாள்.

" எழுந்திரு, எழுந்திரு! சரி, பிரச்னை என்ன? நீ உன் வேலைக்காரியை மறுபடியும் வேலைக்கு சேர்த்துக்கிட்டா, எல்லாரும் வேலைக்கு திரும்பிடுவாங்களே......."

" பெரிசு! இது எனக்குத் தெரியாதா? அதைச் செய்தேனே, தீர்வு கிடைக்கலையே..........."

" அடப்பாவிங்களா! வேறென்ன வேணுமாம்?"

" வேலைக்காரிங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு ரெண்டு கன்டீஷன் போடறாங்க......."

" கன்டீஷனா?"

" வெட்கக்கேடு! ஒண்ணு, நான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமாம்........"

" அது நியாயந்தானே, கேட்டுட்டா போச்சு........"

" கேட்டேனே, அது போதாதாம், இனிமேல் என் வீட்டுக்கு மட்டும் ஒரு வேலைக்காரியும் வரமாட்டாங்களாம்..."

" அதெப்படி ஒப்புக்கொள்ளமுடியும்?"

" பெரிசு! உனக்குத் தெரியுது, நியாயம்! ஆனா, மற்ற வீட்டுக்காரங்களுக்கு தெரியலியே........"

" ஏன், என்ன சொல்றாங்க?"

" அத்தனை பேரும் சுயநலவாதிங்க! என்னைக் காலை வாரிவிட்டுட்டாங்க!"

" என்ன சொல்றே?"

" ஆமாம், பெரிசு! அவங்க அந்த ரெண்டாவது கன்டீஷனுக்கு ஒத்துக்கிட்டு, வேலைக்காரிங்களோட சமரசமாயிட்டாங்க......"

" இவ்வளவுதானா, உங்களுக்குள்ளே ஒற்றுமை? வேலைக்காரிங்க பரவாயில்லே, போலிருக்கே!"

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைMohana santhosh 2019-05-17 16:33
Ravai sir ungar stories Ellaam super sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைabimahesh 2019-03-28 21:44
Nice Story Sir!! And Good point also :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-29 06:49
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைmadhumathi9 2019-03-28 14:18
:clap: :grin: nice story. (y) vaaltugal sir. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-28 16:26
மிக்க நன்றி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைJebamalar 2019-03-28 10:25
உங்களோட கதை திறன் மிக அருமை... சுவை நயத்துடன் கதையின் கருத்தையும் அழகாக கூறியுள்ளீர்கள்.. Super :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-28 11:37
ஜெபமலர் அவர்களே! உங்கள் பாராட்டு மழையில் நான் மேலே மேலே உயரே உயரே பறக்கிறேன். மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைchitra 2019-03-28 08:35
Cute story sir ,unmaiyum kooda ,ithai naan summa oru pechukku sollalai :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சும்மா ஒரு பேச்சுக்கு... - ரவைரவை 2019-03-28 09:57
Dear Chitra! உங்கள் பாராட்டு எனக்கு அளவிலா மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top