(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - இலவசம் - பிரீத்தா

free

பொழுது விடிந்த உடன் வீதியில் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்துவிட்டனர். குழந்தைகளை எழுப்பி விட்டு, பள்ளிக்கு அனுப்ப தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டு, டிபன் பாக்சை மூடி பையில் வைத்தாள் வினோதினி.

“அக்கா, அக்கா” எனக் கத்தியவாறு கேட்டைத் தட்டினாள் எதிர் வீட்டு கமலா.

“என்ன கமலா? வேலையெல்லாம் முடிச்சிட்டியா?”

“முடிச்சிட்டேன் கா. பிள்ளைகளை ஸ்கூல் வேன் ஏத்தி விட்டுட்டு அப்படியே வந்துரு. நான் போய் லைன்ல நிக்கறேன்”.

“சரிடி. எதுக்கும் எனக்கும் ஒரு பை கொண்டு போ. கடையில ஆள் லைனா, பை லைனா தெரியலையே” என்றபடி மஞ்சப்பையை கமலாவிடம் நீட்டினாள்.

“சீக்கிரம் வந்துடு கா. ரொம்ப லேட் பண்ணுனா அப்புறம் உனக்கு லைன்ல நடுவில இடம் குடுக்க மாட்டாங்க” என்றபடி பையை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்தாள்.

குழந்தையைக் குளிக்க வைத்து, யூனிபார்ம் மாட்டி, டிபன் ஊட்டி, ஷு போடும் போது ரெடியாகி வந்தான் அவளது கணவன் பாலன்.

“இன்னைக்காவது டோக்கன் வாங்கிருவியா?” எனக் கேட்டான்.

“வாங்கிரலாம்னு தான் நினைக்கிறேன். பார்த்தீங்கள்ள விடிஞ்சும் விடியாததுமா மக்கள் எப்படிப் போய் க்யூல நிக்கறாங்கன்னு” என எதிர் கேள்வி கேட்டாள் வினோதினி.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“பின்ன சும்மாவா? ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுன்னா எவன் விடுவான்? அந்தப் பணத்தை வாங்கி எனக்கா தரச் சொல்றேன். பொங்கலுக்கு உங்கம்மா வீட்டுக்கு அதுலயே ஸ்வீட்ஸ் வாங்கிக்கோ” என்றவனை முறைத்தாள் வினோ.

“அடடா, ரொம்பத் தான் விட்டுக் குடுக்கறீங்க. காலங்கார்த்தால வாயைப் புடுங்காதீங்க. குழந்தைகளை வேன்ல ஏத்தி விட்டுட்டு கிளம்புங்க. நானும் கிளம்பறேன்” எனக் கூறியபடி அவர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பி வீட்டைப் பூட்டினாள்.

தெருவில் இறங்கி வாகன இரைச்சலுக்கு இடையே வேகமாக நடந்து ரேஷன் கடைக்கு வந்தாள். இனிப்பை நோக்கி நகரும் எறும்புக்கோடு போல் நிண்ட வரிசை தெரிந்தது. எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்து நிற்கிறார்கள். இவர்களுக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, சமையல் செய்யனு வேலை இருக்குமோ, இருக்காதோ என எண்ணியவாறு கமலாவைத் தேடினாள்.

தூரத்தில் கமலா கட்டியிருந்த புடவை கலர் தெரிந்தது. வேகமாக கமலாவிடம் நடந்தாள். இவளைப் பார்த்ததும்,

“வாக்கா, பாத்ரூம் போயிட்டு வர இத்தனை நேரமா?” எனக் கேட்டவுடன் புரிந்து கொண்டவளாய்,

“ஆமாண்டி, வீடு வரைக்கும் போயிட்டு திரும்ப வர வேண்டாமா? அதான் லேட் ஆயிடுச்சு” எனக் கூறியபடி லைன் நடுவே புகுந்து கமலாவின் பின் நின்று கொண்டாள்.

இவள் நடுவே புகுந்து நிற்பதைப் பார்த்ததும் பின் வரிசையில் ஒரு பெண் சத்தம் போட்டாள்.

“ஏம்மா, இப்ப தானே வந்தே. அதுக்குள்ள நடுவுல புகுந்து போறே. பின்னால போம்மா”

“இவங்க எங்கூடத்தான் வந்தாங்க. பாத்ரூம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் போனாங்க. உனக்கு போகணும்னா நீயும் போயிட்டு வந்து நில்லு. யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எத்தனை மணிக்கு வந்தோம். நாள் பூரா லைன்ல நிக்கறோம். எப்ப பணம் தருவாங்கனு தெரியலை. இதெல்லாம் வந்தா அடக்கவா முடியும்?” எனக் கத்தினாள் கமலா. இவள் போட்ட சத்தத்தில் அடங்கிப் போனாள் அந்தப் பெண்.

“ஏய், போதும் விடுடி” என்றாள் வினோ.

“சும்மாயிருக்கா, எப்பவும் நாம முந்திக்கிட்டு கத்துனாத்தான் இவளுங்க அடங்குவாங்க. இல்லைன்னா அவ்வளவு தான்” என்றாள். மேலும், அந்தப் பொம்பளை பேரைச் சொல்லிக்கிட்டு ஏற்கனவே ரெண்டு பேர் லைன்ல குறுக்கே வந்துட்டாங்க. இவ நம்மளைச் சொல்றா” என்றாள் கோவமாக.

கமலா எப்பவுமே அப்படித்தான். வாய்த்துடுக்காக பேசுவாள். பிறரிடம் டக்கென்று சண்டை போடுவாள். ஆனால் மிகவும் நல்லவள். வீதியோரம் குப்பை போடுபவர்களை திட்டுவாள். வேகமாக வண்டியில் போகிறவர்களை குழந்தைங்க விளையாடும் போது மெதுவா வரத் தெரியாதா, வீடு இருக்கிற இடத்துல இத்தனை வேகமா போகலாமா? என ஒரு பிடி பிடித்து விடுவாள்.

தப்பென்று தெரிந்தால் வீதிக்கே கேட்கும்படி கத்துவாள் என்பதால் எங்கள் தெருவில் யாரும் வீதியில் குப்பை கொட்ட மாட்டார்கள்.

“எதுக்கு கமலா எல்லார்கிட்டயும் சண்டை போடறே. இப்படி நின்னு கத்திக்கிட்டு இருக்கே. பார்க்கிறவங்க அசிங்கமா நினைக்க மாட்டாங்களா?”

“வீதியில் குப்பை கொட்டறவங்களை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா, அதையே நான் தப்புனு சொன்னா என்னை அசிங்கமா நினைப்பாங்களா? அடப் போக்கா, நான் இப்படித்தான்” என்று கூறுவாள். அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.