Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவை - 5.0 out of 5 based on 1 vote

என்னை, சௌம்யா, தன் அப்பாவுக்கு பிடித்தவளின் மகனாகப் பார்க்கிறாளே தவிர, என்னை தனிமனிதனாக பார்த்ததே கிடையாது. அவளுக்கு என் தோற்றத்தைப் பற்றியோ, படிப்பைப் பற்றியோ, சமூக அந்தஸ்து பற்றியோ, திறமைகளைப் பற்றியோ, நினைப்பே இல்லை! 

சிறு வயதிலிருந்தே, எங்களிருவருக்கும் முடிச்சுப்போட்டு பேசிப் பேசி எல்லோருமே அவள் மனதை என்பக்கமாக திருப்பிவிட்டீர்கள். அதிலிருந்து அவளால் சுலபமாக வெளிவர முடியவில்லை.

நல்லவேளையாக, நான் சௌம்யாவை ஆரம்பத்திலிருந்தே தூரத்திலிருந்தே பார்த்து வருகிறேன், உறவுமுறைகளை கலந்து குழப்பிக்கொள்ளவில்லை, அவள் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்களைவிட சிறப்பாக தேர்வுகளில் மார்க் வாங்கியபோதும், பாட்டு, பேச்சுப் போட்டிகளில், முதல் பரிசு பெற்றபோதும், அவளுடைய திறமைக்கு தலை வணங்கியிருக்கிறேன். என்னால் பி.ஏ. படிப்புக்குமேல், படிக்கமுடியாமல் நிறுத்திக்கொண்டபோது, சௌம்யா எம்.ஏ. முதல் பிரிவில் தேறி, பின் ஐ.ஏ.எஸ். தேர்வில் ரேங்க் பெற்றபோதும், பெருமையிலும் பூரிப்பிலும் வானத்தையே தொட்டவன் நான்!

மற்றதை விடுங்கள், அவளுடைய பேரழகுக்கு ஈடானவனாக ஒருவனை தேடிக்கொண்டேயிருக்கிறேன். நிலைக்கண்ணாடி முன்னே நின்று சௌம்யாவின் பேரழகுக்கு நான் ஈடானவனா என்று எடை போட்டுப் பார்த்தேன். என் பிரதிபிம்பமே வயிறு வலிக்கச் சிரித்தது.

தவிர, கலெக்டரின் கணவனாக பெரிய சபைகளிலே கலந்துகொள்ளவும், ஊர்ஊராக அவளுடன் வாழ்வதற்கும், மந்திரிகள், பிரபலங்களுடன் பேசிப்பழகவும் எனக்கு தகுதி உண்டா என யோசித்தேன். ஏமாற்றமே பதிலாக கிடைத்தது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நான் ஒரு சாதாரண ஜவுளிக்கடை நடத்துகிற குடும்பத்துப் பிள்ளை. எனக்குத் தெரிந்ததெல்லாம், வியாபாரம் மட்டுமே! 

நான் ஒருக்காலும் சௌம்யாவுக்கு பொருத்தமானவனாக இருக்கமுடியாது.

தவிர, எனக்கு தனிப்பட்ட முறையிலே சில பொறுப்புகள் இருக்கு.

எங்க ஜவுளிக்கடை எங்க அப்பாவழி தாத்தா சின்னதா ஆரம்பிச்சு, பல வருஷங்கள் ஒருமுனைப்பா பாடுபட்டு இன்று பெரிய கடையா வளர்ந்திருக்கு!

அந்த தாத்தா, இறப்பதற்கு சில நாட்கள் முன்பு, என்னிடம் ஒரு ரகசியத்தை சொல்லிட்டுப் போனார்.

அவர், ஜவுளிக்கடை துவக்கியதற்கு காரணத்தை சொன்னார். உங்களுக்கெல்லாம் தெரியுமோ, தெரியாதோ, எங்கப்பாவுக்கு கான்ஜெனிடல் ஹார்ட் பிராப்ளம் இருக்காம். அதாவது பிறவியிலேயே அவருக்கு இருதயக் கோளாறு இருக்காம். அதை குணப்படுத்த முடியாதாம். ஆனா, அதிகமா உடலை வறுத்திக்காம கவனமா இருந்தா, சமாளிக்கலாமாம்.

எங்கப்பாவை கடையிலேயே உட்கார்த்தி வைத்துவிட்டு, வெளிவேலையெல்லாம், தாத்தா செய்தாராம்.

" பிரகாசம்! நல்லவேளையா, நீ பெரியவனாயிட்டே, நான் கண்ணை மூடறபோது! என் காலத்துக்குப் பிறகு, உங்கப்பாவை கண்ணுக்குள்ளே வைத்து, அவரைவிட்டு எங்கேயும் போகாம, பார்த்துக்க வேண்டியது, உன் பொறுப்பு! இது தாத்தா உனக்கு எழுதிவைக்கிற சொத்து! இதை நீ ஏத்துக்கணும். அப்பாவைவிட்டு எந்தக் காரணத்துக்காகவும் நீ பிரியக்கூடாது"

இப்படி சொல்லிட்டு, என்னிடம் சத்தியமும் வாங்கிண்டபிறகுதான் நிம்மதியா கண்களை மூடினார்.

அதனாலே, நான் எங்கப்பாவையோ, தாத்தா ஞாபகமாக நடத்துகிற ஜவுளிக்கடையையோ எந்தக் காரணத்தைக் கொண்டும், பிரியமாட்டேன்.

நான் சௌம்யாவை கல்யாணம் செய்துகொண்டால், ஒண்ணு, நான் சத்தியத்தை மீறி எங்கப்பாவை பிரியணும், ஜவுளிக்கடையை மூடணும், அல்லது, சௌம்யா வேலையை ராஜினாமா செய்துவிட்டு என்னோடு இந்த ஊரிலேயே தங்கணும். இரண்டுமில்லாம, உங்க ஆசைக்காக எங்க கல்யாணம் நடந்தா, நானும் சௌம்யாவும் காலமெல்லாம் பிரிந்தே வாழணும், என்னைப்பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனா நான் மனதுக்குள் பூட்டிவைத்த ஆராதிக்கிற என் இதயதெய்வம் சௌம்யா வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்கிறதை என்னாலே ஒருக்காலும் ஒப்புக்கொள்ளமுடியாது. ஏன்னா, ஐ லவ் ஹர்! நான் அவளை காதலிக்கிறேன். அதே சமயம் என் அப்பாவின் உயிருக்கு ஆபத்து வருவதற்கும், என்னைப் பெற்ற தாய் துன்பப்படுவதற்கும் நான் காரணமாக முடியாது.

மாமா! தங்கைமீதுள்ள பாசத்துக்காக, பெற்ற மகளின் வாழ்வை அடகு வைக்காதீங்க! சௌம்யா இன்னமும் குடும்பப்பாசம் என்கிற மாயவலையிலிருந்து விடுபடலை, நாம் எல்லோருமாகத்தான் அவளுக்கு எடுத்துச்சொல்லி, நல்ல வாழ்வு அமைத்துத் தரணும். 

எனக்குள்ள கட்டுப்பாட்டுக்குள்ளே, சௌம்யாவுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் சந்தோஷமா செய்வேன். என் சௌம்யா வானத்தில் சுடர்விட்டு பிரகாசிக்கிற தாரகையா உலகத்திலே உலா வரணும். அதைப் பார்த்து நானும் என் அம்மா அப்பாவும் பெருமைப்படுவோம். இல்லையாம்மா!......."

நீண்ட பேச்சில் இடைவெளி விட்டபோது, அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தம் எழுப்பிய ஒலி செவிகளை செவிடாக்கியது!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைAbiMahesh 2019-04-03 07:32
Nice Story Sir! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-03 08:09
Thanks a lot, Abhimahesh!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-02 19:14
மிக்க நன்றி, கர்ணா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைkarna 2019-04-02 14:12
அருமையான பதிப்பு அய்யா
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைmadhumathi9 2019-04-02 13:48
wow aangalilum purinthu kondu nadakka koodiyavargal irukkiraargale :hatsoff: great story.parantha manappaanmai kondavarthaan (y) :clap: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - காதலும் கல்யாணமும் - ரவைரவை 2019-04-02 13:53
மதுமதிம்மா! இப்ப இருக்காங்களோ, இல்லையோ, ஆனா கட்டாயம் இப்படித்தான் ஆண்களும் காதலும் இருக்கணும் என்பது என்ஆசை! மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top