Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - நீ நீயாக இரு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - நீ நீயாக இரு! - ரவை

be-yourself

"மீரா! இன்று இந்த ஆண்டின் இறுதிநாள்! நாம் இருவரும் நிதானமாக யோசித்து, இந்த ஆண்டில் என்னென்ன தவறு செய்தோம் என்று அலசிப்பார்த்து, பட்டியலிட்டு, அவற்றை அடுத்த ஆண்டிலிருந்து தவிர்த்துவிடுவோம், வா! உட்கார்!"

" பலே பலே! வாழ்க்கையிலே முதல் முறையா இன்னிக்குத் தான் தப்பு செய்ததை ஒத்துக்கொண்டிருக்கீங்க..."

" இன்னிக்குக்கூட, நீ ஒத்துக்கமாட்டியா?"

" செய்யாத தப்பை செய்ததா ஒப்புக்கச் சொல்றீங்களா?"

" துவக்கமே சரியில்லையே! மீரா! தவறு செய்வது, மனித இயல்பு! தவறு செய்யாதவர்களே கிடையாது, மகாத்மா காந்தி உட்பட எல்லோரும் தப்பு பண்ணியிருக்கிறோம், ஆனா அதை பிறகு உணர்ந்து திருத்திக்கொள்வதுதான் மனிதனை மேம்படுத்தும். நான் முதல்லே, சொல்றேன், நான் செய்த தப்பை! சரியா? அதை நீ கேட்டுக்கொண்டே யோசி! ஏதாவது தப்பு செய்திருக்கியான்னு யோசி!"

" இத பாருங்க! நீங்க ஏதோ மனசிலே திட்டம் போட்டு, சுற்றி வளைத்து, என் வாயைக் கிளற பார்க்கிறீங்க! நான் சொல்றதை கேளுங்க! வாழ்க்கையை பாதிக்கிறாமாதிரி, நாம ரெண்டு பேருமே எந்தப் பெரிய தப்பும் செய்யலே, நேரம் போச்சுன்னா, திரும்பக் கிடைக்காது, இருக்கிற ஒவ்வொரு வினாடியும் ஜாலியா சிரிச்சுப் பேசி மகிழ்ந்திருப்போமே!"

" மீரா! நீ சொல்றதுகூட சரியா இருக்கும்போலிருக்கே! இப்ப என்ன செய்யலாம்?"

" என்னை கூப்பிடறதுக்கு முன்பு என்ன செய்துகிட்டு இருந்தீங்க?"

" என்ன செய்யலாம்னு யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், இது தோன்றியது, அதையும் சென்சார் பண்ணிட்டே, இனிமேல்தான் யோசிக்கணும்........"

" எனக்கு சமையல் வேலை பாக்கியிருக்கு, அதை முடித்துவிட்டு வருகிற வரையிலும், என்னை எப்படி சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம்னு யோசியுங்க!"

" இரு, இரு, ஒரு நிமிஷம்! உனக்கு என்னென்ன விஷயம் சந்தோஷத்தை கொடுக்கும்னு சொல்லிட்டுப் போயேன், உதவியாயிருக்கும்........"

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" இத்தனை வருஷமா சேர்ந்திருக்கிறோம் கணவன்-மனைவியா! இன்னும் உங்களுக்கு அது தெரியலேன்னா, இனிமேல் சொன்னாலும் பயனிருக்காது, நான் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்! வந்தவேளை அப்படி!"

" மீரா! உன்னை சந்தோஷமா வைச்சுக்க என்ன செய்யணும்னு கேட்பதே, உனக்கு வருத்தத்தை, கோபத்தை, சலிப்பை கொடுத்தா, .....கடவுளே! என்னை காப்பாத்தமாட்டியா?"

" ஆங்! இப்ப கூப்பிட்டீங்களே யாரையோ, அவர் யாரு, எங்கே, எப்படி இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார்னு யோசியுங்க! நான் சமையலை முடிச்சிட்டு வரேன்!"

 இந்தப் பெண்களே இப்படித்தானோ! வலியப்போய் சமரசமா பேசினா, பிகு பண்ணிக்கிறாங்க! 

 நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, நம்ம காரியத்தை நாம பார்ப்போம்!

 அவன் டி.வி. ரிமோட்டை கையில் எடுத்தான். இங்கிலீஷ், தமிழ், ஷேர் மாரக்கெட், விளையாட்டு, கன்னடம், மலையாளம் எல்லா சேனல்களையும் ஒரு முறை வலம் வந்தான். மனம் எதிலும் ஒன்றவில்லை. 

 ஏதாவது புத்தகம் படிக்கலாமென்று, ஷெல்ஃபை நோட்டம் விட்டான்.

 ஓஷோ புத்தகங்கள் வரிசையாக இருந்ததில், சற்று கனமாக இருந்த ஒன்றை வெளியில் எடுத்து, புரட்டினான். கண்ணில் பட்டது, " நீ நீயாக இரு!" அத்தியாயத்தின் தலைப்பு! 

 இதென்ன புதுசா கண்டுபிடிச்சாமாதிரி, நீ நீயாக இரு! நீயாக இல்லாமல் நானாகவா இருக்கமுடியும்? 

 என்ன சொல்கிறார், ஓஷோ! பார்க்கலாமா!

 "பிறந்ததிலிருந்து தாயும் தந்தையும் சொல்வதைக் கேட்டு நடக்கிறாய், மற்ற குழந்தைகளைப் பார்த்து நடக்கிறாய், சற்று வயதானபிறகு ஊரிலே, உலகத்திலே நடக்கிறதைப் பார்த்து நடக்கிறாய், சாமியார்களும், அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும், கூடப் பழகுபவர்களும் சொல்வதை, செய்வதை பார்த்து, கேட்டு நடக்கிறாய், கல்யாணமானதும் மனைவி, பிறகு பெற்ற குழந்தைகளின் விருப்பப்படி நடக்கிறாய், பகவத் கீதை, பைபிள், குர்ஆன், கிரந்தம், புராணங்கள் படித்து அதன்படி நடக்கிறாய், மகாத்மா காந்தி, பாரதியார், சாயிபாபா, சங்கராச்சாரியார், சொல்றபடி நடக்கிறாய், எப்போதாவது நீ உன் உள்மனம் அதாவது உன் விருப்பப்படி நடந்திருக்கிறாயா?

 அப்படி ஒன்று இருப்பதையாவது உணர்ந்திருக்கிறாயா? அதனுடன் பேசியிருக்கிறாயா? அது சொல்வதை கேட்டிருக்கிறாயா? 

 நீ, உண்மையிலே நீயில்லை, உன்னைத்தவிர, மற்ற அனைவரும் சொல்வதை, செய்வதை பார்த்து கேட்டு நடக்கிற ரோபோ, நீ!"

 ஓஷோ சொல்வது உண்மைதான் போலிருக்கிறதே! 

 இப்போது கூட நான் மீராவிடம் ஏன் மன்றாடினேன்? எனக்கு தோன்றியதை செய்யவேண்டியதுதானே! 

 இனி நான் நானாக இருக்கப்போகிறேன்! எனக்கு தோன்றியதை செய்வேன், சொல்வேன், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை! 

 சரி, உள்மனமே! இப்போது நான் என்ன செய்யவேண்டும், சொல்! 

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைAdharvJo 2019-04-07 16:42
very true and you have penned the truth very elegantly uncle :clap: :clap: We got to be ourselves but there is always a lot to learn from others too.....need to make wise choice. I liked the way you ended the story :D pavam bulb kuduthitingale :P

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைரவை 2019-04-07 17:48
Dear AdharvaJo! Immensely liked the way you enjoyed the story. Thanks a lot.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைJebamalar 2019-04-06 17:04
மிக யதார்த்தமாக இயல்பான வாழ்க்கை நடையை விவரித்துள்ளீர்கள்... இதுதான் சரியா இருக்குமோ என்று ஒவ்வொரு விஷயத்தையும் செய்ய முயற்சிக்கிறோம்... இறுதியில் மற்றொருவரின் கருத்துக்கு feedback கொடுத்து விட்டு அடுத்த கருத்தை ஆராய தொடங்கி விடுகிறோம்... நீங்கள் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கருத்தை ஆராய வைத்து விடுகிறீர்கள் :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைரவை 2019-04-06 19:53
மிக்க நன்றி, ஜெபமலர் அவர்களே! தங்களைப் போன்றவர்களின் மனமார்ந்த பாராட்டுதான் என்னை ஊக்குவிக்கின்றன.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைkarna 2019-04-05 21:49
அருமையான பதிவு.ஹாஸ்யமாக சொன்னாலும் அதன் உட்பொருள் ஆழமாக உள்ளது.ரொம்ப யோசிக்கவே கூடாது :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைரவை 2019-04-06 06:36
தங்கள் பாராட்டு எனக்கு ஆனந்தம் தருகிறது. நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைShanthi S 2019-04-05 19:45
nice story. Meera is pretty smart :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைரவை 2019-04-05 21:41
Yes, Shanthi, women by and large are smart. They need opportunities to show their talent. Thanks
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைmadhumathi9 2019-04-05 11:28
:grin: sila pengalai vaay pechilvella mudiyathu wow vaarthai jaalam vilaiyaadudhu. :clap: nalla kathai sir (y) vaaltugal.naam naamaaga irukka mudiyuma sir? Ungalidam intha kelvi ketkkiten.bathil kodungal.enakku eppadi endru vilakkamum thevai.innoru kathaiyaaga koduthaal ellorum padippaargal. (y) :clap: :thnkx: 4 this story. :GL: sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - நீ நீயாக இரு! - ரவைரவை 2019-04-05 12:37
மதுமதிம்மா! நிச்சயமாக தாங்கள் விரும்புகிற கதையை தருகிறேன்! இந்தக் கதை நகைச்சுவையாக நாம் எல்லோரும் நம்மை அறியாமலே, செய்கிற பிழையை சுட்டிக்காட்டத்தான்!
ஆனால், ஓரிரு மாதங்கள் பொறுத்திருக்கவேண்டும், என் புதிய கதை சில்ஸீயில் வெளிவர! நன்றி!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top