Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவை

mom

"ங்கள் வாக்கு, கற்பகத்துக்கே"

என்ற சுவரொட்டி பாரதிநகர் தெருக்களில் சுடர்விட்டன. அன்றுகாலை ஒவ்வொரு வீட்டிலும் செய்தித்தாளுடன் " கற்பகத்துக்கு ஓட்டுப் போடுங்கள்" என்ற துண்டுப் பிரசுரமும் வினியோகிக்கப்பட்டன.

பாரதிநகர் வாக்காளர் சங்கத்தின் பொதுக்கூட்டம், அதன் தலைவர் சபாபதி வீட்டில் புதன்கிழமை காலை பத்து மணிக்கு நடக்கும் என்று அறிவிப்பு வந்ததிலிருந்து, பாரதிநகரே விவாதமேடை ஆகியது!

 இதில் வேடிக்கை என்னவெனில், பாரதிநகர் என்ற பெயரில் ஒரு காலனி உருவாகியே ஓராண்டுதான் ஆகிறது.

 அந்த காலனியில் புதிதாக எழுந்துள்ள முன்னூறு கட்டிடங்களையும் உருவாக்கிய பில்டர் மன்னார் கம்பெனியின் ஓனர் கற்பகமும், அந்த காலனியில்தான் வாழ்கிறாள்.

 அவள் ஆர்கிடெக்சர் பட்டம் பெற்று, பத்து ஆண்டுகளில், தென் சென்னை தியாகராயநகர் தொகுதியில் மட்டுமே, மங்கம்மாநகர், கஸ்தூரிநகர், வள்ளியம்மைநகர், பாரதிநகர் என நான்கு காலனிகளை உருவாக்கியிருக்கிறாள்.

 எல்லா வீடுகளுமே, மத்தியதர வர்க்கத்தினருக்காக குறைந்த பரப்பளவு கொண்ட குடியிருப்புகளாக கட்டப்பட்டவை!

 தவிர, பாதி விலையை, தவணை முறையில் பெறவும் கற்பகம் சம்மதித்தாள். ஆங்காங்கே, பெரிய ஆழ்கிணறு தோண்டி, பூமியடியிலிருந்து குடிநீர் எடுத்து, பெரிய டேங்குகளில் ஏற்றி, அதிலிருந்து எல்லா வீடுகளுக்கும் பைப்லைன் கனெக்‌ஷன் கொடுத்திருக்கிறாள்.

 நான்கு காலனிகளிலும், குடியிருப்போர் நல சங்கம், வாக்காளர் சங்கம், மாதர் சங்கம், உடற்பயிற்சி கழகம், தமிழ் இலக்கிய மன்றம் என்று பல்வேறு தரப்பட்ட மக்களை சமூக நலனில் ஈடுபடுத்தியதெல்லாம், கற்பகம் தேர்தலில் போட்டியிடப்போவதின் முன்னேற்பாடுகளே!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 இதை மோப்பம் பிடித்த எல்லா அரசியல் கட்சிகளும், அவளை தங்கள் கட்சியின் சார்பில் நிறுத்த, முயற்சி செய்தனர். எல்லோருக்கும், அவள் கொடுத்த பதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், முடிவு எடுக்கப்படும் என்பதே!

 கற்பகம் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே, பெண் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், ஆட்சியில் பெண்களுக்கு சம பங்குக்காகவும், போராடியவள், வாதாடியவள், கொடி பிடித்தவள்!

 அவளைச்சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். குறிப்பாக, தேவி, ஜோ, பத்மினி, மதுமதி, அனிஷா என்ற பிரபல எழுத்தாளர்களும், ரம்யா, அஸ்ரிதா, பிந்து போன்ற நாவன்மை படைத்த பேச்சாளர்களும் கற்பகத்தின் தலைமையில் ஒரு மாதர் படையை உருவாக்கியிருக்கிறார்கள்.

 அவர்களுடைய திட்டம், ஜெயலலிதா, ம்மதா, இந்திராகாந்தி போன்று கற்பகத்தையும் எப்படியாவது அடுத்த பத்தாண்டுகளில், பெரிய தலைவியாக்கிவிடவேண்டும் என்பதே!

 ஏன் முடியாது? என்று தேவி கேட்டதின் மறு ஒலிபரப்பாக, ரம்யா, பிந்து, ஶ்ரீ, அஸ்ரிதா, அனுஷா, என மற்றவர்களும் ஆமோதிக்கவே, கற்பகம் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பிரதமராவதற்கு தன்னை தயார்ப்படுத்திக்கொண்டாள். 

 முடியுமா? என்று பெற்ற பிள்ளைகளே கேட்டபோது, அவள் தந்த பதில், 'ஏன் முடியாது?" என்பதே!

 அவளுடைய கூர்மையான அம்புகள், குறித்த இலக்கை அடைந்து, பெண்குலமே அவள் பின்னே நின்றது!

 " பாதிக்குப் பாதி, மக்கட்தொகையில் உள்ள பெண்களுக்கு, பதவிகளிலும், படிப்பிலும், பணத்திலும், சரி பாதி கொடுக்கப்பட்டிருக்கிறதா?

 இதுவரையில் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதியரசியாக, ஒரு பெண் இருந்ததுண்டா?

 இந்திராகாந்தியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணாவது பிரதமராக ஆனதுண்டா?

 பிரதமராவதை விடுங்கள், பெண்களுக்கு பாராளுமன்றத்தில் முப்பத்துமூன்று சதவிகித இட ஒதுக்கீடு பத்து வருஷமாகப் பேசப்படுகிறதே, சட்டம் ஏன் நிறைவேறவில்லை?

 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியாவது தலைவராக தற்சமயம் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்திருக்கிறார்களா?

 புராணங்களில், ஒருவனைத் தவிர, இன்னொருவனை ஒரு பெண் மனதால் நினைத்தால்கூட, கற்பிழந்தவள் என பட்டம் சூட்டுகிற ஆண்கள், இருதாரம், பலதாரம் கொண்ட ஆண்களை தெய்வமாக ஏற்பது ஏன்? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?

 இன்றும்கூட, ஒரு பெண் தான் காதலித்தவனை சுதந்திரமாக திருமணம் செய்துகொள்ளமுடிகிறதா? பெற்றவர்களும், உடன்பிறந்தோருமே, அவளை கொலை செய்கின்றனர், அவளைக் காதலித்த பாவத்துக்காக காதலனை நடுத்தெருவில் பட்டப்பகலில் எல்லோர் முன்னிலையிலும், பகிரங்கமாக கண்டதுண்டமாக வெட்டிச் சாய்க்கின்றனர்.

 நிர்பயா, ஸ்வாதி, போன்ற எத்தனையோ வழக்குகள் பல்லாண்டுகளாக நிலுவையில் இல்லையா?

 விளையாட்டுகளில் கூட, ஆண்களுக்கு அதிக பணம், பெண்களுக்கு குறைந்த பணம் தரப்படுகிறதே, இது நியாயமா?

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைhari k 2019-04-08 16:16
Very superrrr sir........nice to read (y) (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-08 17:28
Thanks Hari, for your profuse compliments!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைதங்கமணி சுவாமினாதன். 2019-04-07 12:54
பெண்களை மதிக்காத நாடு மேன்மையடையாது..
அருமையான படைப்பு..பாராட்டுகளும்..வாழ்த்துகளும்.. :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-07 13:28
முதல்முறையாக தங்களின் பாராட்டை பெற்றுள்ளேன். மிக்க நன்றி. தொடர்ந்து படித்து விமரிசனம் செய்யுங்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைmadhumathi9 2019-04-07 12:43
:hatsoff: to that guy.idhupol nallavargal innum niraiya per unmaiyaaga irukka vendum. :clap: (y) great story (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-07 13:27
இருக்கிறார்கள், மதுமதிம்மா! நாம் அவர்களை உற்சாகப்படுத்தி வெளிக்கொணரவேண்டும். மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைViji. P 2019-04-07 11:26
Ungal ovvoru sirukathaiyum verupatta kathaikalam.ava rompa pavampa kathai en kangalil neerai varavazaithathu. :yes: :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-07 11:30
விஜிம்மா! ஒரு எழுத்தாளனுக்கு. கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பரிசு, வாசகரின் கண்ணீர்! அதையே நீங்கள் அளித்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி! தொடர்ந்து பாராட்டுங்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைJebamalar 2019-04-06 18:01
பெண்களின் முன்னேற்றத்திற்கு பின்னால் ஆண்கள் இருக்கிறார்கள்... அவர்கள் நண்பன், அண்ணன், அப்பா, சகோதரன் என்று யாராகவும் இருக்கலாம்.. இன்னும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்... அப்படி பட்டவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... தங்கள் படைப்பு மிக அருமை ஐயா...
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-06 18:59
ஜெபமலர் அவர்களே! நான் படிப்பதற்கு முன்பே படித்து உடனே மனமாரப் பாராட்டிய தங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன். நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top