Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

 நாட்டை விடுங்கள், நம் வீடுகளிலேகூட, குடும்பத்தலைவனுக்குள்ள அதிகாரமும், மரியாதையும் குடும்பத்தலைவிக்கு உண்டா?

 'இல்லை' 'இல்லை' என்ற பதில் குரல் பரவலாகவும் உரக்கவும் ஒலிக்கத் துவங்கி, நாளடைவில் வலுப்பெற்று, போர்க்குரலாகவே மாறிவிட்டது!

 கற்பகம் தன் உற்ற தோழிகளுடன் ஆலோசித்தாள்.

 தி.நகர் தொகுதியில், வாக்காளர்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல், பெண்கள். இத்தனை வருஷமாக, அவர்கள் வாக்களிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டனர். இந்த முறை தீவிர முயற்சி எடுத்து உற்சாகப்படுத்தி, அவர்களை வாக்களிக்க வைக்கவேண்டும்.

 தனது நான்கு காலனியில் வாழும் பெண்களின் மூலம், அவர்கள் குடும்பத்திலுள்ளோரின் அனைத்து வாக்குகளையும் தனக்கு சாதகமாக்கிக்கொள்ளவேண்டும்.

 எந்த அரசியல் கட்சியின் சார்பிலாவது நின்றால், ஒட்டுமொத்த ஆதரவு உடைந்துபோகும். மேலும், அந்தக் கட்சியின் தவறுகள் எல்லாம் வேட்பாளர் செய்ததவறுகளாக திரித்து பிரசாரமாகி, வாக்குகளை இழக்க நேரிடும். 

 அதனால், சுயேச்சையாக, எந்தக் கட்சியையும் சார்ந்திராமல், போட்டியிடுவதென தீர்மானித்தாள்.

 அடுத்தது, தேர்தல் பணியாற்ற உதவியாளர்களை கூட்டுவது! அந்தப் பணியை செவ்வனே செய்ய மாதர் சங்கத்துடன், வாக்காளர் சங்க நிர்வாகிகள், எழுத்தாளர்/பேச்சாளர் குழுக்களின் உறுப்பினர்கள் துடித்துக்கொண்டிருந்தனர்.

 தேர்தல் சின்னம்! சுயேச்சையானதால், கேட்டுப் பெற்றது, விமானச் சின்னம்!

 விண்ணைத் தொடப்போகுது, மாதர்குலம்!

 நடந்ததை மறப்போம், விண்ணில் பறப்போம்!

 அம்மா வந்தாச்சு! நல்லகாலம் பிறந்தாச்சு!

 இப்படி வீட்டுக்கு வீடு, ஆளுக்கு ஆளு கற்பகத்துக்கு ஸ்லோகன் மலையாக்க் குவித்தார்கள்.

 பொதுக்கூட்டம் பற்றி பேச்சு வந்ததபோது, தேர்தலுக்கு முன் பிரசாரத்தின் இறுதிநாளன்று மட்டும், ஒரு கூட்டம், பஸ் நிலயம் அருகில் போட்டால் போதும் என முடிவாகியது.

 வாக்காளர்களுக்கு மற்ற வேட்பாளர்கள் பணம்கொடுப்பதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

 வீடு வீடாக நேரில் சென்று கற்பகம் வாக்காளரை சந்தித்து பேசி ஆதரவு கேட்டுவந்ததின் பலனாக, தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்பே, கற்பகம் வெற்றி பெறுவது உறுதியானதோடு, மற்ற வேட்பாளருக்கு டிபாசிட் போய்விடும் என்றெல்லாம் மக்கள் பேசினர்.

 ஆளுங்கட்சி வேட்பாளர், கட்சி மேலிடத்தில் நிலமையை தெரிவித்து, உடனே ஏதாவது செய்யாவிட்டால், கட்சிக்கு பெருத்த அவமானம் என்று முறையிட்டார்.

 " நாம் தோற்பதுகூட பெரிய விஷயம் அல்ல; எப்படியாவது இரண்டாவது இடத்தைப் பிடித்து டிபாசிட் இழக்காமல் இருக்க, ஒரே ஒரு வழி, பெண்கள் வாக்குகளை எப்படியாவது இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதி கற்பகத்துக்கு வாக்களித்தாலும், மறுபகுதி நமக்கு கிடைக்க கற்பகத்தைப்பற்றி பெண்களிடையே மாறுபட்ட அபிப்பிராயம் உண்டாக, அவளைப்பற்றி அவதூறு கிளப்பவேண்டும்."

 நம்மவர்களுக்குத்தான் அவதூறு பேசுவது, அல்வா சாப்பிடுவதாயிற்றே, அடுத்த பத்து மணிநேரத்தில், அவரவர் இஷ்டத்துக்கு, கதை கட்டிவிட்டனர்.

 " உனக்குத் தெரியுமோ, கற்பகத்தின் தாத்தா நார்வே நாட்டைச் சேர்ந்தவர், பாட்டி இந்தியாவைச் சேர்ந்தவள், இவர்களுக்குப் பிறந்த மகனை மணந்தது, அமெரிக்கப் பெண்மணி! கற்பகத்தின் அப்பா நார்வே நாட்டைச் சேர்ந்தவர், அம்மா அமெரிக்கா பிரஜை! இவளையா இந்திய பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து, பிரதமராகவும் அமர்த்த ஆசைப்படுகிறீர்கள்?"

 இப்படி ஒருபக்கமும், மறுபக்கத்தில், " கற்பகத்தின் கணவர் யார், எங்கிருக்கிறார், என்று யாருக்காவது தெரியுமோ? அவளுக்குத் திருமணமே ஆகவில்லை, ஒழுக்கமில்லாதவள்! அவளை தேர்ந்தெடுத்தால், நம் வீட்டுப்பெண்களும் அவளைப்போல, ஒழுக்கமற்றவர்களாக மாறிவிடுவார்கள்" என வதந்தியை முடுக்கிவிட்டனர்.

 இம்மாதிரி வதந்திகள்தான் காற்றினும் வேகமாகப் பரவிடுமே!

 இவை கற்பகத்தின் காதுகளுக்கு எட்டி, அவளும் அவளுடைய ஆதரவுப் படையும் வாக்காளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பதற்குள், வாக்கெடுப்புநாள் பிறந்துவிட்டது!

 "நடப்பது நடக்கட்டும், எல்லாம் விதி!" என்று கற்பகம் முடங்கிவிட்டாள்.

 வாக்கெடுப்பு முடிந்து, மறுநாள் எண்ணிக்கை துவங்கியபோது, கற்பகமும் அவள் ஆதரவாளர்களும் அந்தப்பக்கமே தலைகாட்டவில்லை.

 ஆளுங்கட்சியினரோ, மிகுந்த உற்சாகமாக இருந்தனர். டிபாசிட் கிடைத்தால் போதும் என்ற நிலையிலிருந்து, கற்பகத்தின் பயத்தைப் பார்த்து, தங்களுக்கு அமோக வெற்றி கிட்டும் எனவும், கற்பகத்துக்கு டிபாசிட் போக, வாய்ப்பு அதிகம் என்று பூரித்தனர்.

 வாக்குகள் எண்ணிக்கை துவங்கி இரண்டு மணி நேரத்தில் முடிவு வெளியிட்டபோது, வாக்காளப் பெருமக்கள் அனைவருமே கற்பகத்தின் வீட்டுக்கு ஓடிப்போய் அவளை கட்டித் தழுவி முத்தமிட்டனர்.

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைhari k 2019-04-08 16:16
Very superrrr sir........nice to read (y) (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-08 17:28
Thanks Hari, for your profuse compliments!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைதங்கமணி சுவாமினாதன். 2019-04-07 12:54
பெண்களை மதிக்காத நாடு மேன்மையடையாது..
அருமையான படைப்பு..பாராட்டுகளும்..வாழ்த்துகளும்.. :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-07 13:28
முதல்முறையாக தங்களின் பாராட்டை பெற்றுள்ளேன். மிக்க நன்றி. தொடர்ந்து படித்து விமரிசனம் செய்யுங்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைmadhumathi9 2019-04-07 12:43
:hatsoff: to that guy.idhupol nallavargal innum niraiya per unmaiyaaga irukka vendum. :clap: (y) great story (y) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-07 13:27
இருக்கிறார்கள், மதுமதிம்மா! நாம் அவர்களை உற்சாகப்படுத்தி வெளிக்கொணரவேண்டும். மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைViji. P 2019-04-07 11:26
Ungal ovvoru sirukathaiyum verupatta kathaikalam.ava rompa pavampa kathai en kangalil neerai varavazaithathu. :yes: :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-07 11:30
விஜிம்மா! ஒரு எழுத்தாளனுக்கு. கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பரிசு, வாசகரின் கண்ணீர்! அதையே நீங்கள் அளித்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி! தொடர்ந்து பாராட்டுங்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைJebamalar 2019-04-06 18:01
பெண்களின் முன்னேற்றத்திற்கு பின்னால் ஆண்கள் இருக்கிறார்கள்... அவர்கள் நண்பன், அண்ணன், அப்பா, சகோதரன் என்று யாராகவும் இருக்கலாம்.. இன்னும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்... அப்படி பட்டவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... தங்கள் படைப்பு மிக அருமை ஐயா...
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - தாய்க்கு செய்த பிராயச்சித்தம்! - ரவைரவை 2019-04-06 18:59
ஜெபமலர் அவர்களே! நான் படிப்பதற்கு முன்பே படித்து உடனே மனமாரப் பாராட்டிய தங்கள் பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறேன். நன்றி
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top