(Reading time: 7 - 13 minutes)
Couple

 " அப்ப நீ சொன்னது தவறுன்னு ஒப்புக்கிறியா?"

 " தவறு, சரி என எதுவுமில்லை. அவரவர் பார்க்கிற பார்வையை பொறுத்தது. இரு கருத்துகளுமே முழுவதுமே சரியாக இருக்கலாம். இரண்டுமே பகுதி சரியாகவும் பகுதி தவறாகவும் இருக்கலாம்......பிரபு! எனக்கு இப்படிச் செய் என உத்தரவு போடுகிற அதே மகாசக்திதான் அம்மாவுக்கும் உத்தரவு போடுகிறது...."

 " அதெப்படி? அது மகாசக்தியா, நாரதரா, கலகம் மூட்டிவிட?"

 " பிரபு! உட்கார்! அந்த ரகசியத்தை விளக்கமா சொல்றேன்........"

 " ஜூட்! எனக்கு ஆபீஸ்க்கு போக நேரமாயிடுத்து, உன் காலட்சேபத்தை அம்மாவிடம் நடத்து!"

 பிரபு நகர்ந்ததும், மீரா கணவனைப் பார்த்து சிரித்தாள்.

 " மீரா! நீ உட்கார்! அந்த பரம ரகசியத்தை உனக்கு சொல்றேன்......."

 " காலட்சேபத்தை கேட்டுண்டிருந்தால், யார் சமையலை கவனிக்கிறது? பத்து நிமிஷத்திலே, பிரபு டேபிளிலே சாப்பிட உட்காருவானே, சாப்பாடு போடவேண்டாமா? வேற யாராவது கிடைப்பாங்களான்னு தெரிவிலே இறங்கி தேடுங்க!"

 பிரபு, மீரா இருவருக்குமே சபேசன் 'ஒருமாதிரி' இருப்பது புரியவேயில்லை!

 ஆனால், அவரால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. அது மட்டுமல்ல, மற்றவர்கள் அவரை தொந்தரவு செய்தாலும், அதனால் அவர் பாதிக்கப்படவே மாட்டார். எப்படி அவரால் அப்படி இருக்க முடிகிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

 அன்றொரு நாள், அவருடைய நண்பர் ஒருவர், வீட்டுக்கு வந்திருந்தபோது சபேசனிடம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.

 " டேய்! சபேசா! எவனாவது முட்டாள்தனமா பேசினாலோ, தவறாக நடந்தாலோ, என்னாலே சகித்துக் கொள்ள முடியவில்லை, உடனே அவனுடன் மல்லுக்கு நிற்கிறேன், இறுதியில் பலன், எனக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானதுதான் மிச்சம்! சபேசா! எனக்கு கொஞ்சம் அட்வைஸ் கொடேன், எப்படி என்னை மாற்றிக் கொள்வதுன்னு சொல்லிக் கொடேன்!"

 கேட்கவேண்டுமா? சபேசனுக்கு இப்படி ஒரு சான்ஸ் யார் தருவார்?

 வரிந்து கட்டிக்கொண்டு, கோதாவில் இறங்கினார். தூரத்திலிருந்து மீராவும் பிரபுவும் அந்த நண்பரின்மீது பரிதாபம் கொண்டனர்.

 "ரித்விக்! எப்போது நீ என்னிடம் அட்வைஸ் எதிர்பார்த்து வந்துவிட்டாயோ, அப்போதே நீ விடுதலை பெற, முதலடி எடுத்து வைத்துவிட்டாய். கங்கிராட்ஸ்!

 டேய்! அமெரிக்கா பிரெசிடண்ட் ட்ரம்ப் பேசறதும் செய்வதும், உலகத்திலே பிடிக்காத

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.