(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - எறும்பு வீடு - சு. ராம்கபிலன்

ன்று காலையில் படுக்கையைவிட்டு எழுவதற்கே சலுப்பாக இருந்தது. ஒரு பக்கம் தலைவலி மறுபக்கம் மார்கழி மாதப் பணியின் குளிரால் கம்பிளிப் போர்வைக்குள் மழைப் பாம்பு போல் நெளிந்து கொண்டிருந்தேன்..

செல்போனில் பார்த்த போது மணி 8:49 am, அன்று உலகை இருளில் இருந்து மீட்க கிழக்கில் இருந்து சூரியன் வரவில்லை..

அறைத்தூக்கத்தோடு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போது தான் அதனை கவனிக்க தொடங்கினேன்...

கட்டிலுக்கு கீழே உள்ள டைல்ஸ் தரையில் யாருக்கும் தெரியாமல் மெளனமாகவும், சத்தமில்லாமலும் சிலர் நடந்து சென்றனர்...

கண்களை கைகளால் தேய்த்து விட்டு மறுபடியும், பார்த்தேன். மனிதர்களைவிட மிகவும் நேர்த்தியான வரிசையில் ஒவ்வொரு எறும்புகளும் ஒவ்வொரு ரயில் பெட்டிகள் மாதிரி அழகான வரிசையில் சென்று கொண்டிருந்தது..

இரண்டு டைல்ஸ் பதிந்திருக்கும் இடத்தின் நடுவே உள்ள மெல்லிய கோடுதான் ,இவர்களுக்கான தண்டவாளம். கூட்ஸ் ரயில் போல மிகவும் நீண்டமான இரயில் அது...

தீடிரென ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இரயில்கள் வந்தது. மிகப்பெரிய ஆபத்து இருக்குமென்று நினைத்தேன். இரண்டும் மோதிக் கொண்டது நல்லவேளை யாருக்கும் எந்த சேதமும் இல்லை..

ஆனால் மோதிக் கொள்ளும் பொழுது இரண்டு இரயில்களும் , எனக்கு கேட்காதவாறு ஏதோ பேசியது..

முன்பு, யாரோ கூரிய கதை ஞாபகத்திற்கு வந்ததும், உடனே தண்டவாளத்தில் என் கைகளை வைத்து இரண்டு பெட்டிகளுக்கும்(எறும்புகளுக்கும்) நடுவே உள்ள தடையங்களை உமிழ் நீரால் அழித்தேன்.கதையில் கூறியது போல சற்று நேரம் வழி தெரியாமல் வட்டமிட்டு கொண்டிருந்த பெட்டிகள் மீண்டும் வேகமாக முன்பு சென்ற பெட்டிகளோடு இனைந்தது..

அந்த கூட்ஸ் இரயிலுக்கு ஓட்டுநர் இருந்தார். ஆனால் கடைசி பெட்டியில் டீட்டியார் இல்லாததால் நான் பெயர் கொடுத்துவிட்டு இரயிலுக்கு காவலாலியாக பின்னாடியே சென்றேன்..

போகப்.. போக இரயிலின் வேகம் அதிகரித்தது..

ஒவ்வொரு பெட்டிகளிலும் வித்தியாசமான பொருட்கள் இருந்தது.

முதலில் இருந்த பெட்டிகள் காலியாகவே இருந்தது. அடுத்து அடுத்து இருந்த பெட்டிகளில்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.