(Reading time: 7 - 14 minutes)

நினைவெல்லாம் நீ தானே... - நந்தினி.S

ச்சோ வென மழை கொட்டித்தீர்த்திருந்தது. அமைதியும் சில்லென வீசும் ஈரக்காற்றையும் அனுபவித்தபடி பஸ்ஸிற்கு காத்திருந்தாள் ஜனனி.

எதையோ நினைத்து தன்னை மறந்து நின்றவள் பஸ் ஸ்டாப்பில் நின்று பின் நகர்ந்ததை கவனிக்கவில்லை. சட்டென சிலிர்த்து  அய்யோ ச்ச!!! என பஸ்ஸை நோக்கி ஓடி இருக்கையில் அமர்ந்தாள்.

அப்படியே நகர்ந்து கொண்டிருக்க " ஹேய், ஜனனி என்னடி உம்முனு இருக்க? என ஜனனியின் அருகில் வந்தமர்ந்தான் ராம். ராம் "வாடா இல்ல  ஃபீவரா இருக்கு குளிர் தாங்க முடியல ராம் " என்றாள். ஏய் லூசு இப்ப ஏன்டி வெளில வந்த சரி என் தோள்ல சாஞ்சு படுத்துக்கோ டி. சரிடா என சாய்ந்தவள் பட்டென சரிந்து பின் விழித்தெழுந்தாள்.

நினைவெல்லாம் நீ தானே....

ச்ச வழக்கம்போல பிரம்மை தான்ல ராம் என்ன விட்டு போய் இன்னையோட ஒரு வருசம் ஆச்சு  "லவ் யூ டா ராம் லவ் யூ சோ மச்" என்ன இப்டி அழவச்சிட்டு வேடிக்க பாக்குறியே டா என அழுது கொண்டே பேருந்தின் ஓரம் சாய்ந்தாள்...

நினைவுகள் அவளை பின்னோக்கி கூட்டிச் சென்றன..

னனி BA ( english ) இரண்டாமான்டு படித்துக்கொண்டிருந்தாள். அடாவடி, அரட்டை என துரு துருவென்று இருப்பவள். அவளைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் தான். ஜனனியின் உயிர்த்தோழி  ரம்யா. இருவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக படிப்பவர்கள். ரம்யாவின் அண்ணன் தான் ராம்.

காலையில் தோழிகள் அனைவரும் பேருந்தில் வருவது வழக்கம். மாலை மட்டும் ரம்யாவை அழைத்து போக கல்லூரி வருவான்.  

இன்று தான் ராமும் ஜனனியும் சந்திக்க வேண்டும் என விதி நிர்ணயித்திருந்தது போல. எப்பொழுதும் ரம்யாவை பின் கேட்டின்  வழியாக தான் கூட்டிச்செல்வான் ராம். இன்று எதோ வேலயாக சென்றவன் முன் கேட்டில் காத்திருந்தான். இது தெரியாமல் ரம்யா பின் கேட்டில் காத்துக்கொண்டிருந்தாள். ராமை ஜனனியும் சக தோழியரும் இது வரை பார்த்ததேயில்லை.

எக்ஸ் க்யூஸ் மீ  ஏங்க பிங்க சுடிதார்..!! என அந்த வழியே சென்ற ஜனனியை அழைத்தான்.  " ஹலோ  எனக்கு ஜனனினு பேரு " என்ன விசயம்னு சொல்லுங்க என்றாள். கோவப்படாதீங்க, ரம்யா BA (eng lit) 2 இயர்ங்க நான் அவ அண்ணன் கொஞ்சம் சொல்றீங்களா அவள்ட்ட ப்ளீஸ் என்றான். ஓஓ அப்பிடியா நான் அவ க்ளாஸ்மேட் தான் நீங்க பேக் கேட்டுக்கு வருவீங்கனு வெயிட் பண்ணிட்டு இருப்பா இருங்க வர சொல்றேன்.  ரொம்ப தாங்க்ஸ் ங்க என்றான்.

ஆமா நீங்க எந்த ஏரியா என கேட்க,  ஏன் " தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வைக்கப் போறீங்களா " என நக்கலாக கேட்டாள். ஒன்னுமில்ல தாயே போமா போ என நாக்கை கடித்து கொண்டான். ஹ்ம் அது என நகர்ந்தாள் ஜனனி. சிரித்தபடியே ரம்யாவிடம் சென்றாள்.

பின்னொரு நாள் ரம்யாவை கல்லூரி விட வந்தவன் ரம்யாவை இறக்கிவிட்டு ஆமா ஜனனி எங்க பாக்கவே முடியல ?? 'எனக் கேட்டான். டேய் கிளம்பு ஒத வாங்கப்போற நீ என்றாள் நக்கலாய் கடிந்து கொண்டாள். 

முதல் சந்திப்பிலே இருவருக்கும் பிடித்துவிட்டது ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.   பைபாஸ் வழியே ராம் சென்றுகொண்டிருந்தான். பஸ்டாப்பில் ஜனனியை பார்த்ததும் வண்டியை நிறுத்தினான்.  "ஹேய் ஜனனி இங்க என்ன பண்ற ?? சும்மா ஃபிரண்ட பாக்க வந்தேன் ராம் ஆமா நீ என்ன இந்தப்பக்கம் சுத்திட்ருக்க எந்தப் பொண்ணுக்குடா லிஃப்ட் குடுப்போம்னு சுத்துரியோ என நக்கலாய் கேட்டாள். அம்மா தாயே ஏன் மா ஏன் ? சரி வா எந்த ஏரியா வா நான் டிராப் பண்றேன்.  ஜனனிக்கும் ஆசை தான் ராமுடன் பயணிக்க. சரி ராம் பக்கத்துல தான் வா போலாம் என அமர்ந்து கொண்டாள். ராமிற்கோ இனம் புரியா உணர்வு பறப்பது போல் இருந்தது ஒருவரிடம் ஒருவர் காட்டிக்கொள்ளாமல் தங்களுக்குள்ளேயே சந்தோசத்தில் மிதந்து கொண்டார்கள்.  

எதுவும் பேசாமல் வந்தவள் ராம் லெஃப்ட்ல ஃபர்ஸட் கட் தான் என் ஸ்ட்ரீட் நீ இங்கயே விட்ரு யாராவது பாத்தா ஏதாவது நெனப்பாங்க என்றாள். என்ன நெனப்பாங்க ஜனனி?? என்ன னா என்ன சொல்ல என்றாள். சரி அத விடு என்னப் பத்தி என்ன நெனைக்கிற ? எனப் பட்டென கேக்க நான் கொளம்புறேன் பாக்கலாம் என சட்டென விரைந்தாள். ஜனனி, என்ன ராம்  என் நம்பர் நோட் பண்ணிக்கோ என்றான் ராம். வேணாம்ப்பா எப்பவோ ரம்யாட்ட வாங்கிட்டேன் என சிரித்துக் கொண்டே ஓடினாள். அடிப்பாவி இந்தப் பொண்ணுங்க ரொம்ப ஃபார்ஸ்ட் டா சாமி என தனக்குள்ளேயே பேசி நகர்ந்தான்.

வீட்டிற்கு சென்றவன் தூங்கவே இல்லை. என்னப் பொண்ணுடா என்ன கண்ணு ச்ச அவட்ட ஏதோ இருக்கு முதல் பார்வையிலயே என்ன சாச்சுட்டா அவ கூட இருந்தா உலகமே என் கைக்குள்ள இருக்குற மாதிரி தோணுது. டேய் ராம் உன்னையும் ஒருத்தி சாச்சுட்டா இந்த லவ் டிஸீஸ் எனக்கும் வந்துருச்சே என தனக்குக்தானே பேசி தூங்கிவிட்டான்.  காலையில் எழுந்ததும் குறுஞ்செய்தி எழுந்து ஃபோனை எடுத்தவனுக்கு ஆச்சரியம் ஆம் குறுஞ்செய்தி அனுப்பியது ஜனனியே தான். ராம் நா ஸ்ரீ நகர் பஸ்டாப்ல வெயிட் பண்றேன் என்ன பிக்அப் பண்ணிக்கோ 8.30 வந்துரு என்பது தான் அது.  வேகமாய் தயாராக சென்ற இவன் தங்கையையும் மறந்தான் அவள் தோழிகளையும் மறந்தாள்.

அன்று புளூ கலர் சல்வாரில் நின்றிருந்தவள் ராமின் கண்கள் நகராமல் அவளையே பார்த்தது. ராம் என்ன அப்டி பாக்குற, இல்ல ஜனனி எவ்ளோ அழகா இருக்க சொல்ல வார்த்தையே இல்ல என்றான். வெட்கம் கலந்த புன்னகையை உதிர்த்து சரி கெளம்பு போலாம் என்றாள் ஜனனி.

ராம் காலேஜ்க்கு டைம் இருக்கு காஃபி ஷாப் போலாமா என்றாள் ஜனனி.சரி மா போலாம் என அருகில் இருந்த காஃபி ஷாப்பில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்கள். 

ரெண்டு கோல்ட் காஃபி என ஆர்டர் செய்தான். இன்னைக்கே சொல்லிடலாம் ஜனனிக்கிட்ட.

"ஜனனி இவ்ளோ நாள் உன்கிட்ட பழகிருக்கேன். நீ என் கூட வாழ்க்கை முழுக்க வரனும்"  நீ இருந்தா ரொம்பவே சந்தோசமா இருப்பேன். " உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசப்படுறேன்"  லவ் யூ சோ மச் ஜனனி.  உனக்கும் என்ன ரொம்ப புடிக்கும்னு தெரியும் சொல்லு ஜனனி ,

ராம் உன்ன முதல்ல பாத்த உடனே புடிச்சு போச்சு. எனக்கே தெரியாம உன்ன லவ் பண்ணிட்டு இருந்தேன் டா.  " லவ் யூ ராம் " என்றாள்.

இருவருக்கும் இருந்த சந்தோசம் வானைத் தாண்டியது.

ஃபோன், குறுஞ்செய்தி, சந்திப்பு என அவர்கள் உலகம் வேறாகிப் போனது. இப்படியே பத்து மாதங்கள்  ஓடிவிட்டது. 

ரு நாள் இரவு எதோ கனவு கண்டு விழித்தவள் ராமை தொடர்பு கொண்டாள். 

" ராம்... ராம் அது... ராம் " என திணறினாள் ஜனனி. ஏய் பொறுமையா பேசு என்னடி ஆச்சு ஆர் யூ ஓகே நான் வேணும்னா கெளம்பி வரட்டுமா ?? என்னாச்சு மா

" ராம் ஒரு கனவு கண்டேன் எனக்கு ரொம்ப பயமா இருக்கு நாம பிரிஞ்சுருவோம்னு "   

நாளைக்கு நாம முதல்ல மீட் பண்ண நாள் நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ராம்.

மார்னிங் 8.30 சிக்னல் க்கு இந்தப் பக்கம் உனக்காக காத்திட்டு இருப்பேன் வந்துரு டா என்றாள் ஜனனி. 

நீ எதுவும் நெனைக்காம தூங்கு. நாளைக்கு நமக்கு கண்டிப்பா கல்யாணம் டி என்னால நம்பவே முடியல " லவ் யூ டி ஜனனி ",,  லவ் யூ டா ராம் .

றுநாள் காலை :

அழகான பட்டுப்புடவையில் தேவதையாய் கிளம்பினாள். ராமை தொடர்பு கொண்டாள் ராம் கெளம்பிட்டியா?  கெளம்பிட்டேன் டி சிக்னல் கிட்ட இருக்குற ரெஜிஸ்டர் ஆபிஸ்ல  ஃபிரண்ட்ஸ் வெயிட் பண்றாங்க அப்டியே உன் ஃபிரண்டும் வெயிட் பண்றா என சிரித்தான். " டேய் ரம்யா கிட்ட எப்ப சொன்ன ??"  அய்யோ என்ன கொல்லப் போறாடா 

சரி டி வா பாத்துக்கலாம். என்ற தொடர்பை துண்டித்தான்.

ஜனனியும் காத்திருந்தாள் சிக்னல் அருகே,  தூரத்தில் ராம் "ஜனனி, இங்க பாரு வந்துடுறேன்  வெயிட் " என குரல் கொடுத்தான். 

ச்ச தேவதை மாதிரி இருக்கா ஆனா ஏதோ ஒன்னு குறையுது  " ச்ச  பூ இல்ல , அருகில் ஒரு பூக்கடைக்கு சென்று பூ வாங்கிக் கொண்டான் ".

ஜனனி அவனயே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிக்னல் விழுந்தது, ராம் வேகமாய் கடந்து வர  சற்றும் கவனிக்காத நேரத்தில் வேகமாய் வந்த ஆம்புலன்ஸ் சட்டென ராமை இடித்து தூக்கி வீசியது. "ஜனனிஇஇஇஇஇ" எனக் கத்தியபடி சிக்னல் கம்பத்தில் அடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்தான்

அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த ஜனனி சட்டென காற்று மோத சிலிர்த்து விழித்தாள்.

" ராம்ம்ம் எனக் கத்திக்கொண்டே அவனை நோக்கி ஓடியவள் வாரி அணைத்து மடியில் வைத்துக் கதறினாள்" .

கடவுளுக்கும் கொஞ்சம் ஈரம் இருந்தது போலும்,

ராம் உயிருடன் தான் இருந்தான்.

" ராம் உனக்கு ஒன்னும் ஆகாதுடா நான் இருக்கேன் என்று கதறி அழுதாள் "   ஜனனி இந்த பட்டுப்புடவைல ரொம்ப அழகா இருக்கடி, உன் மடில  இருக்கேன் இந்த ஜென்மத்துக்கு இந்த சந்தோசம் போதும் லவ் யூ டி பொண்டாட்டி இங்க வாயேன் எனத் திணறி திணறி பேசினான். அவளும் அழுது கொண்டே அருகே வர நெற்றியில் முத்தமிட்டு உயிர் பிரிந்தான். அவன் உயிர்பிரிய  ஆம்புலன்ஸ் வந்து அவனைத் தூக்கியது. அவள் கதறி அழுதது அத்தனை பேரயும் கலங்க வைத்தது.

" ம்மா அண்ணா நகர் இறங்கலயா நீ என கண்டக்டர் குரல் குடுக்க, சட்டென விழித்து எழுந்தாள்  ஆமானா இறங்கனும் என சொல்லிவிட்டு இறங்கி நடந்தாள்".

நீ என் கூட தான் இருக்க ராம் என் உயிரில கலந்தவன் நீ உன்ன என்கிட்ட இருந்து பிரிக்கமுடியாது "லவ் யூ டா " என தனக்குள் சொல்லி மனதை தேற்றிக்கொண்டு பள்ளிக்குள் நுழைந்தாள். ஆம் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையாய் வாழ்க்கையை நினைவுகளுடன் எதிர் நோக்கி போய்க்கொண்டிருந்தாள்.

" இறந்தாலும் வாழும் அது தான் காதல்"  நினைவுகள் மட்டுமே சொந்தமாகிப் போனது ஜனனிக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.