(Reading time: 6 - 12 minutes)

தேவதைகள் அழுவதில்லை...!! - ஸ்வேதா

ரண்டு வருட மழலை அவள் கையில் எறும்பு கடிக்க "அம்மே ..." என்று அழ தொடங்கினாள். அயோ ராஜாத்திக்கு என்ன ஆச்சு என்று கேட்டப்படி ஓடி வந்தாள் சத்யா. சமாதனம் தொடங்கினாள் "என்னம்மா என்னடா எறும்பு கடிசிடுத்தா என் ஏஞ்சலை, அதுக்காக செல்லகுட்டி அழலாமா, போதும் நம்ப காக்காவை பார்க்கலாமா" சுருக்கென்ற புது வலியை மறக்க செய்ய அந்த தாய் பெரிதாக பாடுப்படவில்லை தான். அனால் அவளை தேவதையாக பாவித்த முதல் தருணம் அது.

இளநகையும் மெத்தென்ற அவள் கததப்பும் மனதில் இன்றும் ஆறுதலாக உணர முடிந்தது.

நான்கு வயது குழந்தை அவள், பார்த்துக்கொள்ளும் ஆயா அவளை அடிக்க "அம்மே” என்று அழுதுக்கொண்டே சத்யாவின் அறைக்குள் நுழைந்தாள். கம்பீரமும் அழகும் ஒன்றை அவள் அழகான சிற்பம் போல இருந்தாள். குழந்தையை பார்த்ததும் கழுத்தில் இருக்கும் ஸ்டெத்தை கழட்டி வைத்து விட்டு உடனே அவளை மேஜை மேல் அமர்த்திக்கொண்டு "ஏஞ்சல் அழலாமா, அப்படி அழுவது ஏஞ்சல் ஆகுமா, என் கருணா குட்டி அழகூடாது " என்று கண்டீப்பும் பாசமும் தெளிவாக வார்த்தையில் காட்டி அழுகையை நிறுத்தினாள் அவள்.

devathaigal azhuvathillai

பத்து வயதில் எவனோ ஒருவன் அவளை பார்த்து பொது இடத்தில் கண் அடித்து கிண்டல் செய்ததும் கண்களில் நீர் கோர்க்க சத்யா " பாதகம் செய்பவரை ஓங்கி மிதித்துவிடு பாப்பா என்று பாரதியார் சொல்லிருக்கார் கருணாகுட்டி இதுவெல்லாம் பார்த்து பயப்படலாமா என்ன??, போகிறான் பொறுக்கி" என்று அழகாய் கோபத்தையும் சமாதனத்தையும் ஒருங்கே காட்டி நம்பிக்கி ஊட்டினாள்.

யாருமற்ற அவளும் அவள் அன்னை மட்டுமே என்ற எண்ணம் நன்றாக மனதில் பதிந்து விட்டும் ஒரு சில நேரங்களில் அவளால் தனிமை உணர முடிந்தது. இருந்தும் கோபமோ, அழுகுயோ வரவில்லை. அவள் தேவதையல்லவோ அழுவதேன் கோபம் காட்டுவதேன். தேவதை என்றுமே கருணையின் வடிவம், பொறுமையின் எல்லை, பண்பின் உரு.

பின்னொரு நாளில் விவரம் தெரிந்த பின் இந்த அமைதியான தாயை எவன் ஏமாற்றிருப்பான். அல்ல அவள் பிறந்ததும் அவர் இறந்திருப்பாரோ. தோழிகளுக்கெல்லாம் உறவுகள் நிறைய இருக்க ஒரு கண்ணில் மருத்துவமும் இன்னொன்றில் இந்த  தேவதையும் மட்டுமே வைத்துக்கொண்டு வாழும் இவள் உயர்ந்தவள் என்ற எண்ணங்கள் எழ தேவதை அழகாகிபோனாள்.

பதினாறு வயதில் "அம்மா நான் மருத்துவம் படிக்கவா??, இலக்கியம் படிக்கவா?? பொறியியல் படிக்கவா??, நான் சிவில் என்ஜிநியரிங் படிக்கவா??" என்று அவள் கேட்க.     

"கருணாம்மா உனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தான் தெரியும்... உனக்கு தோன்றதை செய்.." சுதந்திரம் கட்டுபாட்டில் இல்லை அதை வாரி கொடுப்பதில் தான் இருக்கிறது கட்டுப்பாடு என்பதை அழகாக சொன்னாள், இல்லை புரிய வைத்தாள் அவள்.

பதினெட்டு வயதில் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து " அம்மா நான் ஆர்கிடெக்ட் ஆக போறேன் சரியா??கவுன்செல்லிங்கிற்கு நீங்களும் கூட வாங்கமா" கொஞ்சலாக கெஞ்சலாக அவள் அழைக்க "என் பெண்ணோட சந்தோஷத்தில் நான் இல்லாமலாடா தங்கம் " என்று கண்களில் நீருடன் உச்சி முகர்ந்தாள் அவள்.

ல்லூரி நாட்கள் அழகாய் ஆரம்பித்து ஆறு மாதமாயிற்று. அவள் செய்கை போலவே அந்த வகுப்பில் ஒரு பையனின் செயல்களும் இருந்தது. வித்தியாசம் கண்ணில் பட அவனுடன் பழகுகையில் வேறுபாடே தெரியவில்லை.

அம்மா என்று கூவி ஆச்சர்யமாக அவள் சொல்ல அர்த்தமாக புன்னகையுடன் "இது வயது கோளாறு கண்ணா " என்றார் அவர்.

"இல்லைம்மா அப்படி இல்லை இது" என்று சொல்ல விவாதம் அரங்கேறியது.

பத்துதொண்பதாம் பிறந்த நாளில் அம்மாவின் "என்ன கிப்ட் வேண்டும் என் செல்லத்திற்கு என்ற கேள்விக்கு" அவள் "தெளிவு வேண்டும், என் பிறப்பு பற்றி தெளிவு வேண்டும்" என்றாள்.

அதிர்ந்தாலும் தீர்க்கமான பார்வையுடன் சத்யா "எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் இருந்த ஒரு அனாதைக்கு வரமாக தூக்கி எறியப்பட்ட தேவதை கிடைத்தாள், வாழ்க்கை வரமாகி போனது"

அம்மா சொன்னதில் விஷயம் புரிந்து அழுகை தொண்டை அடைத்தாலும், துக்கம் நெஞ்சை அழுத்தினாலும் தேவதை அழுவதில்லை என்பது தோன்ற சோகம் சுகமாகி போனது.

சத்யா "கருணாகுட்டி ஒருவருக்கு வேண்டாத ஒன்று இன்னொருவருக்கு வேண்டியதாக இருக்கும். அதனால் யாரும் யாருக்கும் கெடுதல் செய்வதாக அர்த்தமில்லை." என்று சொல்ல

அவள் "அம்மா, எனக்கு உங்க நிம்மதி போதும் அது எனக்கு சந்தோசம் மற்றது பேசவேண்டாமே " என்று முற்றுப்புள்ளி வைத்து கிளம்பி விட்டாள்.

பெண்ணிற்கு பதினெட்டு முடிந்து விட்டதால் அந்த மருத்துவமனையை அவள் பெயருக்கு மாற்றி எழுதும் வேலையில் மும்மரமாகி விட்டாள் தாய்.

இரண்டொரு நாள் கழித்து சத்யா ,"அம்மா என் காலேஜ்க்கு நாளைக்கு என்னோடு வாங்கம்மா"  என்றாள்.

"சரி தங்கம் வரேன், என் காரிலே போகலாமா??"

"தாரளமாக அம்மா நான் தான் ஓடிட்டு போவேன்"

"ம்ம்ம் சரி"

டுத்த நாள், காரை விட்டு இறங்கி நடக்கையில் சத்யாவிற்கு அந்த பட்டுபுடவை பெண் தெரிந்தாள். அவர்கள் இருக்கும் இடம் நோக்கி நடக்கையில் சத்யாவிற்கு நெஞ்சம் படபடத்தது.

அந்த பெண் சத்யாவை பார்த்ததும் ஓடி வந்து "டாக்டர் ரொம்ப நன்றி டாக்டர் என் பெண்ணை வளர்த்து கொடுத்ததற்கு " என்று பரவசத்தோடு சொல்ல இருவருக்கும் திக்கென்றது.

தொடர்ந்து "உங்க கணவரிடமெல்லாம் சொல்லி எப்படி டாக்டர் உங்களால இது முடிந்தது" என்று அவரிடம் பேசிக்கொண்டே இப்பக்கம் "என் கண்ணே" என்று கருணாவை கொஞ்சினார்.

"என்னோடு வந்துவிடம்மா என் கண்ணே இனி என்னால் உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாதே" என்று சொல்லி அழுதார்.

அன்று பெண் குழந்தை பிறந்ததென திரும்பி கூட பார்க்காமல் சென்ற அந்த கணவன் இன்று கொஞ்ச தூரத்தில் இறுக்கமாக முகத்துடன் நின்றுக்கொண்டிருந்தான்.

"அயோ இதை இங்கே எங்கேனும் ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள் டாக்டர்" என்று இரட்டையில் பிறந்த ஆண் குழந்தையை மட்டும் தூக்கி சென்ற அந்த பணக்கார வீட்டு மருமகள் தான் இன்று பெண் வேண்டும் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறாள்.

த்யாவிற்கு உலகமே நின்று விட்டதுப்போல் ஆனது. பெற்றவள் கேட்கிறாள் கொடுத்து தானே ஆகவேண்டும். துயர் தாங்காமல் கண்களில் நீர் பார்வையை மறைக்க கைகள் நடுங்க நின்றிருந்தாள்.

எறும்பு முதல் எந்த கயவனும் அண்டி விடாமல் பார்த்துக்கொண்ட தாய் கை நடுங்க நம்பிக்கை, சுதந்திரம், விரிவான எண்ணம் என்றெல்லாம் கற்றுகொடுத்த அன்னை என்ன பேச என்று தெரியாமல் நின்றாள் கருணாவால் அதை காண சகிக்கவில்லை.

கருணாவிற்கு இதை ஏன் ஏற்பாடு செய்தோம். பேசாமல் இருந்திருக்கலாமோ. இந்த கிரண் அம்மா அப்பாவை ஏன் சந்தித்தோம் அவர்கள் உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கேட்டது என் கூட்டி வந்தோம் என்றாகி போனது அவளிற்கு.

அந்த பட்டு புடவை அம்மா பேச பேச சத்யா திருமணமே ஆகாதவள் என்பது புரிந்தது என்று யோசிக்க யோசிக்க கருணாவிற்கு பெற்ற பெற்றோர்கள் செய்த அநியாயம் புரிந்தது. மனதில் ஒரு ஓரத்தில் சத்யாவை தப்பாக நினைத்த நாட்களும் நினைவிற்கு வந்தது. கண்கள் கரித்தது.

தீர்கமாக சத்யா அருகே சென்றாள் "அம்மா போகலாமா, உங்க மகிழ்ச்சி கெடும் என்று நான் நினைக்கவில்லை" என்று சொல்லிக்கொண்டே பட்டு புடவை அம்மாவை பார்த்து "ஆன்டி நாங்க வரோம் அம்மாவிற்கு உடம்பு சரி இல்லை போல" என்று சொல்லிக்கொண்டு சத்யாவை தரதரவென்று இழுத்துக்கொண்டு கார் பக்கம் வந்தனர்.

பட்டு புடவை அம்மா பின்னோடு வந்தாள் "கருணா நீ என் மகள் அம்மா நீ என் மகள், என் ரத்தம், என் வயிற்றில் பிறந்தவள் " என்று சொல்லி அழுதுக்கொண்டே வந்தாள்.

அதை கேட்டு சத்யா இன்னமும் நடுங்க கருணாவால் அந்த தாயின் அவஸ்தையும் அன்பும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

கண்களில் நீருடன் சுயநினைவே இல்லது போன சத்யாவை உலுக்கி கண்களை துடைத்தாள்,"தேவதைகள் அழுவதில்லைம்மா " என்றாள் அவள் கரகரத்த குரலில்.

புரிந்தும் புரியாதமாகவும் தாயும் மகளும் கட்டி தழுவி கொண்டனர்.

பெண்மையும் தாய்மையும் வெவேரல்ல அவை ஒன்றுக்குள் ஒன்று.  பெண்மை பிறர் துக்கத்தை காண சகிக்காது. தாய்மை பிறர் துன்பத்தை தாங்கி பிடிக்கும்.

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.