(Reading time: 8 - 15 minutes)

குடும்பம் - சந்தியா சக்திவேல்

ந்த நாகரிகமான நகரத்தில்இவளும் ஒருத்திமுதலில் , கதையின் பத்திரங்களை அறிமுகப்படுத்திவிடுகிறேன் . நிஷா பார்பதற்கு மாநிறம் என்றாலும் எப்போதும் சிரிப்புடன் இருக்கும் விளையாட்டு பெண் .....நிஷாவோடு சேர்த்து அவளின் தங்கை தேவி நிஷாவை விட இரண்டு வயது சிறியவள் . செண்பகம் நிஷாவின் தாய் . ஊரார் பிள்ளைகளை தன் பிள்ளையை போல் நினைக்கும் தாய்மைக்கே உரிய சிறப்பு குணத்தை அதிகம் பெற்றிருப்பவள் . நிஷாவின் தந்தை வேலன்.... யார்? இல்லை என்று கூறினாலும் வாரி வழங்கும் மனம் உடையவர் .இப்படி அமைதியாக சென்றிருந்த இவர்களின் குடும்ப வாழ்கையில் ஒரு புயல் வந்ததுதற்போது அநேக குடும்பங்களை நாசமாக்கி கொண்டிருக்கும் குடி தகாத நண்பர்களின் பழக்கத்தினால் வேலனையும் அதற்கு அடிமையாக்கியது . சீட்டுகளில் கட்டிய வீட்டை ஒரே மூச்சில் ஊத்தி சரிப்பதைப்போல் இவர்களின் வாழ்க்கைத்தரமும் சரிந்துவிட்டது

தன் குடுப்பம் இப்படி நாசமகிவிட்டதே என்று மனமுடைந்து அழுது கொண்டிருந்த செண்பகத்தின் கண்ணீரை பார்த்து நிஷா தன்னுடைய விளையட்டுதனத்தை எல்லாம் மூடைக்கட்டிவிட்டு படிப்பில் ஆழ்ந்தாள் . நன்றாகவும் படித்தாள் .... இனி உங்களுடன்சேர்ந்து நானும் இந்த கதையில் பயணிக்கிறேன் ..........

அம்மா ... அம்மா...

kudumbam

சொல்லு நிஷா

அம்மா நா +2ல 976 மார்க் எடுத்துருக்கேம்மா ....... என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க .

நல்லா இரும்மா எழுந்திரி நாம கஷ்டப்பட்டதுக்கு நல்ல பலன் கிடைச்சுருச்சு .....

நிஷா அடுத்து என்னடி படிக்க போற?

இல்ல தேவி நா காலேஜ்ல சேர போறே .....

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த செண்பகம் ...... என்ன நிஷா சொல்ற முன்னாடி மாரி இல்ல அப்பா வேற வேலைக்கு போகாம குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கறாரு...நா வீட்டு வேலைக்கு போய் மாசம் கிடைக்கற 1500 ரூபாய் பத்தாமதா நாம மூணு பேரும் பூகட்டி கிடைக்கற பணத்தையும் வெச்சுதா இந்த குடும்பம் ஓடுது இதுல எங்க உன்ன காலேஜ் படிக்க வெக்கறது

என்னமா சொல்றீங்க என்னவிட மார்க் குறைவா வாங்குன பொண்ணு எல்லாம் காலேஜ்ல சேர போகுது நா மட்டும் ஏம்மா சேரகூடாது ....

நிஷா சொல்றத கொஞ்சம் அழாம பொறுமையா கேளும்மா நீதா இந்த வீட்டுக்கு மூத்த பொண்ணு உன்ன அதிகமா படிக்க வெச்சுட உனக்கு அப்றம் உன் தங்கச்சிய யார்மா படிக்க வெக்கறது .6மாசமா வீட்டுவாடகை குடுகலன்னு வீட்டுக்காரர் வேற வீட்ட காலிபண்ண சொலிட்டாரு அத வேற பாக்கணும் புரிஞ்சுகமா அம்மாவ . உங்க அப்பாவ இனி நம்பி பயன் இல்ல வீட்டுல இருக்கறது எல்லாத்தையும் அடகு வெச்சே குடிச்சு அழிச்சுருவாறு ...

அதுக்கு நா ஏம்மா படிக்க கூடதுன்னுசொல்றீங்க ?

நிஷா நீ படிக்க வேண்டாம்னு சொல்ல காலேஜ் படிக்க வேண்டாம்னுதான் சொல்றே ,...

என்னம்மா சொல்றீங்க ....

ஆமா நிஷா காலேஜ் படிச்சுமுடிக்க 3 வருஷம் ஆகும் அதனால நீ நர்சிங் கோர்ஸிலசேந்து படி நீயும் படிச்சமாறியும் இருக்கும் சீக்கரமா வேலைக்கு போய் இந்த குடும்ப பாரத்த கொஞ்சம் கோரச்ச மாறியும் இருக்கும் .

( மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அம்மாவிற்காக நிஷா நர்சிங் கோர்ஸில்சேர்ந்து படித்தாள்)....

ம்மா வீடு பாத்துடிங்களா? சாய்ந்தரம்தான் வீட்டுக்கார தாத்தா வந்து சத்தம் போட்டுட்டு போனாரு.

ம்ம்ம் பாத்துட்டேன் தேவி நாளைக்கு வீடு மாத்திரலாம் ..

(நிஷாவும் அவளுடைய குடும்பத்தாரும் வீடு மாற்றி புது வீட்டிற்குள் நுழைகிறார்கள்.......)

அம்மா என்ன இது ? இவளோ சின்ன ரூம்ம வாடைகைக்கு பாத்துருக்கீங்கஉங்களுக்கு வேற ரூம் ஏதும் கிடைக்கலையா ?

தேவி நாம இப்ப இருக்கற வசதிக்கு இந்த ரூம் போதும்மா .

போம்மா எப்ப பாத்தாலும் இதவே சொல்ற என்னால இந்த வீட்டுலலா தங்க முடியாது .

( மகளின் வார்த்தைகளை கேட்டு செண்பகத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது ).

ஏ....... தேவி என்ன ஓவரா பேசற பாரு உன்னால அம்மா அழறாங்க .... இன்னும் கொஞ்சநாள் தான் அதுக்கப்பறம் நாம வேற வீட்டுக்கு குடி போயிறலாம் இப்ப ஒழுங்கா உள்ள வந்து இந்த பாத்தரத்த எல்லாம் அடிக்கி வை வா .........

நிஷா அம்மாவின் அருகில் வந்து அம்மா அழாதிங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் எல்லாம் சரி ஆயிரும் வாங்கம்மா உள்ள ...

பொழுது விடிந்தது நிஷா நர்சிங் காலேஜ்க்கு கிளம்ப ஆரம்பித்து விட்டாள் . தேவியும் பள்ளிக்கு செல்ல தயார் ஆனாள்....

அம்மா ...

என்ன தேவி

இங்க எப்டி நா டிரஸ் மாத்தறது அப்பா வேற அங்கதூங்கிட்டு இருக்கறாரு நா எப்போ டிரஸ் மாத்திட்டு ஸ்கூல்-க்குபோறதாமா ?

தேவி இவளோ தான அம்மா இந்தாங்க இந்த போர்வைய அந்த பக்கமா நீங்க புடிங்க நா இந்த பக்கம் புடிக்கறேன் ம்ம்ம் இப்ப நீ மாத்திக்கோ தேவி ........

இப்படியே வரும் கஷ்டங்களை எல்லாம் சமாளித்தே காலங்கள் ஓடின . நிஷாவிற்குதனியார் மருத்துவமனை ஒன்றில் தற்காளிவிதமாக வேலை கிடைத்தது . தேவி இந்த வருடம் +2 தேர்வு எழுதி865 மதிப்பெண் பெற்றாள். அவளுடைய மதிப்பெண்கள் குடும்பத்தில் யாருக்கும் மன நிறைவை தரவில்லை ...... பெரிய திருப்பங்களுக்கு பிறகு நிஷாவின் வேண்டுகோளால் தேவியை காலேஜில் சேர்க்க செண்பகம் அனுமதி கொடுத்தாள்.........

(தன் கனவுதான் நடக்கவில்லை தன் தங்கையின் கனவாவது பலிக்கட்டும் என்ற நோக்கில் நிஷா தேவியை காலேஜில் சேர்த்தால் ....புதிய இடம் பலவித நண்பர்களைகண்டு தேவி தன் வீட்டின் நிலையை மறந்து படிப்பில் ஆர்வம் இன்றி ஒவ்வொரு வகுப்பையும் கேலியும் கிண்டலுமாக கடத்தினாள் முதற் பருவத் தேர்வு கல்லூரியை நெருங்கியது . தேர்வுக்கு முன்னதாக 2 நாட்கள் விடுமுறை வழங்கபட்டிருந்தது )

தேவி நாளைக்கு பரீட்சையை வெச்சுடு என்ன டிவி பாத்துட்டு இருக்கற ...

அம்மா அதலா ஏற்கனவே படிச்சதுதா எனக்கு எல்லாமே தெரியும் கொஞ்சம் பேசாம இருங்க .

நிஷா நீயாவது தேவிய படிக்க சொல்லு

அம்மா அதா அவ படிச்சுடேனு சொல்றாள விடுங்கம்மா ......

சரி என்னமோ பண்ணட்டும் மார்க் வராம இருக்கட்டும் அப்பறம் இருக்கு அவளுக்கு ......

தேர்வு முடிந்தது தேவியின் கல்லூரி விடுமுறையும் முடிந்தது முதல்நாள் கல்லூரிக்கு சென்றாள். வழக்கம் போல் இனிதாகவே அந்தநாளும் முடிந்தது . இரவு 10 மணி இருக்கும் செண்பகத்தின் கைபேசி மணி ஒலித்தது அதில் தேவியின் தோழி கீதா தேவி தன்னுடைய பதிவு எண்ணை கூறி ரிசல்ட் என்னவென்று கேட்டாள்..

கீதா நல்லா பாத்தியா?நல்லா பாத்துதான் சொல்றே தேவி ..

ன்னாச்சு தேவி ரிசல்ட் என்ன ?

அம்மா அதுவந்து

என்ன வந்து போய்னு சொல்ற என்ன மார்க் வாங்கிருக்க

அம்மா எனக்கு 2 பேப்பர்ல போய்டுச்சு .

என்னடி சொல்ற நா அப்பவவே சொன்னன்ல படி படின்னு ....... எனக்கு எல்லாமே தெரியும் தெரியும்-னு இப்டி வந்து 2 பேப்பர்ல போயிடுச்சுன்னு சொல்ற ? இதான் நீ படிச்சா லச்சணமா?

அம்மா இல்லம்மா இதுக்குமேல ஒரு வார்த்த பேசிறாத...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.