உருவமில்லை உணரமுடியும் - ப. இரசல்
உலகின் நிலை மாறுபாட்டால் ஒவ்வொரு முறையும் பஞ்சபூதங்களின் ஒன்றால் பேரழிவை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலும் அழிவை நோக்கி தான் போய்கொண்டிருக்கிறது. கடவுள் காப்பாற்றி விடுவார் என்ற கால பேச்சு மாறி உன்னை நீயே தான் காப்பாற்றிகொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தனை கொள்ள வேண்டும்" என்று சுற்றுபூர சூழல் மாசுபாட்டை பற்றிய பேச்சை முடித்தார் சமுக ஆர்வலர் திரு.அருணகிரி அய்யா அவர்கள். கைதட்டல்கள் பலமாய் ஒலித்திட மேடையில் இருந்து இறங்கி தன்னுடைய இரு சக்கர வாகனம் நோக்கி நடந்து சென்றார்.
அவர் பின்னரே கூட்டத்தில் இருந்து ஓடிவந்த பெருமாள் அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று தன்னை ஒரு பகுதி நேர அர்ச்சகர் என்று அறிமுகம் செய்து கொண்டான். பார்க்க படித்த பட்டதாரி ஆனால் பகுதி நேர ஊழியம் அர்ச்சகராய் என்ற மனதில் ஓடிய கேள்வியால் "ஹ்ம்ம் சொல்லுப்பா என்ன கேள்வி?" என்று வினவினார்.
பெருமாள் அவரிடம் "உங்களுக்கு கடவுள் பக்தி இருப்பது போல் தெரிகிறது.. ஆனால் உங்கள் பேச்சு முற்போக்கு சிந்தனையாளரை போல தோன்றுகிறது".
அருணகிரி பதிலளித்தார் "உண்மை தான் எனக்கும் கடவுள் பக்தி இருக்கிறது ஆனால் என் பேச்சு மக்கள்சுற்றுபூரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அதனால் அந்த உதாரணம் கொடுத்தேன்" என்றார்.
பெருமாள் அமைதியாக "உங்களிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி இதுதான்.. கடவுளாலும் காப்பற்ற முடியாது இப்பொழுது இருக்கும் கால மாற்றங்களால் அதை தானே கூறினீர்"
"ஆமாம்!", என்றார்
"உருவாக்கியவருக்கு அதை அழிக்கவும் தெரியும் காக்கவும் தெரியும் அல்லவே உங்கள் கடவுள் பக்தி உண்மையென்றால்?" பெருமாள் வினவினான்.
சற்றே சிந்தித்தார் அருணகிரி, மெல்லிய புன்னகையோடு "இந்த தலைப்பு பல ஆண்டுகளாகவே நிருபித்தும் நிருபிக்க படாமலும் இருக்கிறது. ஆனால் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சுய புத்தியை தன்னையும் தன் சுற்றத்தையும் பாத்துக்க தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். நாம் மேலும் பேசலாம் மீண்டும் சந்திக்கும் பொழுது" என்று தனது வண்டியை கட்ட ஆயுத்தம் ஆனார்.
பெருமாள் "நன்றி ஐயா! நான் இதே கட்டிடத்தில் மேற்பார்வையாளராகவும் மாலையில் அந்த கோயிலில் தான் அர்ச்சகராய் இருக்கிறேன். மீண்டும் நீங்கள் வரும் போது சந்திக்கிறேன் " என்று விடைகொடுத்தான்.
அருணகிரி தன் வண்டியில் செல்லும் போது நடந்த உரையாடலே கேட்டு கொண்டிருந்தது. இடையில் போக்குவரத்து சிக்னல் விழவே வண்டியை நிறுத்தி எதிர் திசைகளில் இருந்து வரும் வண்டிகளை பார்த்து யோசித்து கொண்டிருந்தார். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே தன் அருகில் இருக்கும் இடங்களில் ஓட்ட பட்டிருக்கும் படங்களை ஒரு நோட்டம் விட்டார். விநாயகர்,முருகன்,சிவன்,பெருமாள்,அம்மன்,இயேசு,முஸ்லிம் எழுத்துக்கள் என பார்க்கும் இடமெல்லாம் எதாவது ஒட்டி இருப்பதை கண்டார்.
மெதுவாக பச்சை விளக்கு எரிந்தவுடன் யோசித்து கொண்டே தன் வீட்டிற்க்கு வந்தடைந்தார். தன் மனைவியும் குழந்தைகளும் ஊரில் இல்லாததால் தானே கதவை திறந்தவருக்கு பளிச் வெளிச்சம் அவரையும் அவர் முகத்தையும் மறைத்தது. வெறும் வெளிச்சம் மட்டும் தான் நடக்க தொடங்கினார், புரிந்துகொள்ளவே முடியாத அமைதி, தன் ரத்தத்தின் ஓட்டம் என எல்லாம் அவருக்கே கேட்டுக் கொண்டிருந்தது. கண்களை மூடி கசக்கி நன்றாக விழித்தவர்க்கு எல்லாம் மாயமாய் மறைந்தது.
தன் நாட்குறிப்பில் கண்ட காட்சியையும் உரையாடலையும் பதிவு செய்தார். முடிவில் கடவுளால் உலகத்தை படைத்தல்,காத்தல், அழித்தல் என மூன்றுமே முடியும் ஆனால் அவருக்கு உருவமில்லை உணரமுடியும். ஆனால் அதை உணர மனிதனின் உயிரோட்டம் மிக முக்கியம் சுற்றுபூரத்தை சுத்தமாய்வைத்தால் தான் நோய்நொடி இல்லாமல் வாழமுடியும். உன்னை காப்பாற்ற மருத்துவர்கள் இதுவரை கண்டுபிடித்ததை வைத்து தான் முயற்சி செய்ய முடியும் ஆனால் மாசுபாட்டால் மனிதனையே காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று எழுதி முடித்தார்.
கோயிலில் அர்ச்சகர் பெருமாள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கல்லாய் கடவுள் அருள் கூர்ந்த வண்ணம் மக்களுக்கு தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.