(Reading time: 3 - 5 minutes)

தவறான இடம் - கவிதாசன்

Book

ரியாதை என்ற சொல்லுக்கு பொருளை கண்களால் காணவேண்டுமெனில் மனிதரின் செயலே காட்டிவிடும். மரியாதைக்குரிய மனிதரை கண்டவுடன் கையெடுத்து வணங்குவது, அமர்ந்திருந்தால் எழுவது, சிலர் கைகட்டுவதையும் காணலாம், சற்று குனிந்து நிற்பது, அவர் பேசும் போது குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அமைதி. இப்படி மரியாதைக்கு பல நடத்தைகள் உள்ளனவாய் காட்டுவார்கள்.

இன்று நானும் அவ்வாறே மரியாதை நிமித்தமாக,  தனியார் பள்ளியில் படிக்கும் தனது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து இருந்தார் அரசு ஆசிரியர், குறுக்கிடாமல் வீட்டின் வெளியே காத்திருந்தேன் நான் கொடுத்த புத்தகத்தை வாங்குவதற்கு. 

என்ன புத்தகம்? ஏன் அந்த புத்தகத்தை அந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு கொடுத்தேன்? 

என் வாழ்க்கையில் இது வரை நான் காணாத, கண்டும் பெரிதாக கவனிக்காமல், அதை பற்றி உணராமல் சென்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவை. படித்த புத்தகத்தில் “எது நல்ல பள்ளி” புத்தகம் ஒரு பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எளிய நடையில் படிக்கும் வாசகர்களுக்குள் பல கேள்விகளை எழுப்பும் திரன் கொண்டது. என் புள்ள ஸ்கூல மொத மார்க் எடுக்கணும், அப்றம் டாக்டர் ஆயி பெரிய ஆளா வளரனும். அதுக்கு நல்ல ஸ்கூலா, பீஸ் அதிகம் வாங்கினாலும், என் புள்ள இங்கிலீஷ் பேசுற மாரி இருக்கனும். 

இப்படி கனவு காணும் பெற்றோர் மத்தியில் நானும் ஒருவன். நல்ல படிக்கனும், அதுக்கு தனியார் பள்ளியில் சேர்கனும் என்ற எண்ணம் என் மிடில் கிளாஸ் தாண்டி அப்பர் கிளாஸ்சுக்கு போனது. என் பிள்ளை நல்ல படிக்கனும் னு நினைத்த நான், நல்ல பள்ளிக்கூடம் என்றால் என்ன என்பதை சிந்தனையில் சிறிதளவும் சட்டை செய்யவில்லை. பாடம் மட்டும் இல்லாமல் விளையாட்டு, கலை, அறிவியல் ஆய்வு இருக்குமா? என் பிள்ளையை படி படி என்று அடிப்பார்களா? மற்ற மாணவர்கள் பார்க்க மைதானத்தில் முட்டி போட சொல்வார்களா? தாய்மொழியில் கற்பிக்கபடுமா? பள்ளி சிறைச்சாலை போல் இருக்குமா? நூலகம் இருக்குமா? இருந்தாலும் புத்தகம் படிக்க விடுவார்களா இல்லை எடுத்தால் கிழிந்து போகும் என்று காட்சி பொருள் போல் இருக்குமா? ஆசிரியர் திறன்பட இருப்பாரா? இப்படி பல முக்கிய கேள்விகளை எண்ணாமல் என்னென்னவோ எண்ணினேன். 

இத்தனை அருமையான புத்தகத்தில் நான் கற்றதை பகிர வேண்டும் என்ற துடிப்பில், யாருக்கு கொடுக்கலாம் என்று யோசிக்கையில் பக்கத்து வீட்டு ஆசிரியர் நினைவுக்கு வந்தார். உடனே கொண்டு கொடுத்தேன். ரொம்ப நல்லா இருந்தது, உங்களுக்கு கொடுக்கனும்னு தோனுச்சி. இந்தாங்க…

வாப்பா… 

அந்த புக் வேணும்.. 

அட டா இன்னும் படிக்கலையே… ஏம்மா, அந்த புக்க எடுத்து குடு… 

அவர் மனைவி புத்தகத்தை சமையல் அறையில் இருந்து கொண்டு வந்தார்… 

தவறான மனிதரிடம் கொடுத்தேனா….? இல்லை அவர் தவறான இடத்தில் வைத்தாரா…..? 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.