Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

ஹாய் ஹனி! என்ன பிரச்சினை?” என்று கேட்டான் மைக்.

“என்ன.. என்ன… கேட்டாய்?” இது ஹனிகா.

“ம்… ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டேன்? ஒரு மாதிரி குழம்பிப்போய் இருக்கிறாய்”

இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள். எப்படி இருந்தாலும் ‘வாவ்’ பாட்டர்ன் ப்ரிண்ட் ஆனதை காட்டியே ஆக வேண்டும். ஆனால், அவள் சொல்வதை நம்புவானா?

“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்… சிரிக்ககூடாது”

“ஹனி வித்தியாசமாக பேசுகிறாயே? என்னவென்று சொல்லு”

“இந்த ப்ரிண்டை பார்…” அவள் பேப்பரை நீட்டினாள். மைக் அதைபார்த்து விட்ட்டு,

“புதுவிதமான பாட்டர்ன் வந்திருக்கே. என்ன இது? ட்ரான்ஸ்லேட் செய்துவிட்டாயா?””

“நான் மொழிபெயர்ப்பு செய்துட்டேன். இதற்கு இணையாக ஆங்கில வார்த்தை ‘வாவ்’ என்று காட்டுகிறது”

“யாரோ ஸ்பேஸ்ஷட்டிலில் போனபோது இந்த ஒலியை பரப்பி இருப்பார்களோ?”

“நானும் அப்படித்தான் நினைச்சேன். அடுத்த ஸ்பேஸ் சென்டரில் விசாரித்தேன். இந்த வரிசையில் இருக்கும் அத்தனை ஸ்பேஸ் செண்டரிலும் இந்த பாட்டர்ன் பதிவாகவில்லை”

“அப்படியென்றால்…?”

“நம்முடைய பீக்கான் அருகில் மட்டும் வந்து யாரோ இதை சொல்லி சென்றிருக்க வேண்டும். நம்முடைய பீக்கான் தொடர்பில் மட்டும் ஒரு ஒலியலை பதிவாகி இருக்கிறது என்றால், அந்த ஒலியின் சோர்ஸ் ஒரு நொடி அளவில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு  நேரத்தில் வந்து சென்றிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த பீக்கானில் இது பதிவாகாது. அவ்வளவு விரைவாக பயணிக்கும் விண்கலம் இருக்கிறதா என்ன?”

“எனக்கும் தெரியவில்லை. ஆண்டரமீடாவின் ஷட்டிலே 0.67% ஒளிவேகத்தில்தானே செல்கிறது. ம்..  நீ சொல்லும் வேகம் இன்க்ரடிபிள். அது சாத்தியமே இல்லை!”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அதுமட்டும் அல்ல, நான் ஒரு காட்சியையும் பார்த்தேன். ஒரு உருவம் நம்முடைய டெலஸ்கோப்பின் திரையில் தெரிந்தது. அதுவும் சில நானோ செக்கண்ட்தான் இருக்கும்”

“ஹனி, உனக்கு ஒன்றும் இல்லையே. கனவு கண்டாயா?”

“சீரியஸா சொல்றேன் மைக். நான் சொல்வது நிஜம்தான்”

“உன்னுடைய தாத்தா காலத்து காமிக்ஸ் எதையாவது படித்தாயா? கற்பனை திறன் அசத்துகிறதே”

“உங்கிட்டபோய் சொன்னேனே…” அவள் தலையில் கைவைத்துக் கொண்டாள்.

“கோபிக்காதே சும்மா உன்னை சீண்டினேன். ம்…  நம்பறேன்ப்பா.. இப்போதைக்கு இதை அப்படியே ஹோல்ட் செய்து வைப்போம். மீண்டும் இதுபோல் நடந்தால் ஸ்டெப் எடுக்கலாம். இதுபோல் நடப்பதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று பார்ப்போம். ஓகே”

“ஓகே மைக்… நாளை சந்திப்போம்… நீ கொஞ்சம் அலர்ட்டாக இரு!”

“சரிம்மா…. குட்நைட்”

வீடு திரும்பிய பின்னும் அந்த ‘வாவ்’ ஒலி அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை அவளுடைய அண்ணி நௌமிகா கவனித்து விட்டார்.

“ஹனி… என்னடா… ஏதோ யோசனையாக இருக்கிறாய்?”

“நத்திங்… இன்றைக்கு ஒலிவியாவிற்கு திருமண அனுமதிக்கு இண்டர்வியூ வந்திருந்தது. அதுபற்றி மைக்கிடம் விசாரிக்காமல் வந்து விட்டேன்மா” அண்ணன் விஸ்ரா இறந்தபின் ஹனிகாவிற்கு அவளுடைய அண்ணிதான் அம்மா. ஏனெனில் ஹனிக்கு பெற்றோர் கிடையாது.

“ஓ… இது தப்பாச்சே… சில சமயம் நாம் இப்படித்தான் நடந்து கொள்கிறோம். சரி, நாளைக்கு விசாரித்து விடு. ஹனி போனில் விசாரிக்காதேம்மா. அது மரியாதையானது அல்ல”

“சரிம்மா, ஹைந்தா எங்கே?”. பத்து வயது ஹைந்தா அவளுடைய அண்ணன் மகள். அண்ணன் ஸ்பேஸ் கார்டாக இருந்தவர். ஒருநாள் ஆன்ட்ரமீடா ஏலியன்களை துரத்திக் கொண்டு போனவர்… ஸ்பேஸில் காணாமல் போய்விட்டார். அப்போது ஹனிகாவிற்கு பதினைந்து வயதுதான் இருக்கும்.

அண்ணன் மறைந்த செய்தியை அவருடைய ஸ்பேஸ் கார்ட் ஆர்மியிலிருந்து ஜெனரல் ஸ்மித்தின் அனுமதி கார்டுடன் வந்தது. அந்த அனுமதி கார்டு சில வசதிகளை தரும்.  ஹைந்தாவின் படிப்பையும்  நௌமிகாவிற்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்., ஹனிகாவிற்கு அவளுடைய பெற்றோர் சேமித்து வைத்த பணம் இருந்தது. அதை வைத்து அந்த சிறிய குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீனுவின் "மழையின்றி நான் நனைகின்றேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

இரவு உணவு அருந்தியபின் ஹனிகா ஜன்னல் வழியே விண்வெளியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே ஹைந்தா வந்தாள். கையில் ஒரு புத்தகம் இருந்தது.

“அத்தை எனக்கு இந்த பாடத்தை சொல்லித் தருகிறீர்களா?”

“என்ன பாடம் ஹைதி…” அவளுடைய புத்தகத்தை பிரித்து பார்த்தாள். “ஓ.. இது விண்வெளியியல்… சரி உனக்கு என்ன புரியவில்லை?”

“சூரிய குடும்பம் என்றால் என்ன… அதில் அப்பா.. அம்மா எல்லாம் இருப்பார்களா?”

“அது ஃபேமிலி கிடையாது ஹைதி! நாம் வாழும் உலகம் பற்றிய அடையாளம். இப்ப உன்னுடைய அட்ரஸ் என்ன?”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்madhumathi9 2019-03-13 07:12
:clap: nice epi.interesting aaga irukku. wormholennu solli irukkenga.but blackhole kelvi pattirukkiren.wormhole unmaiya? Enakku theriyaamal thaan ketkkiren.thappaaga enna vendam.dhiyaanam seibavargalukku intha blackhole theriyum endru kelvipattirukkiren.so adhnaalthaan ketkiren. :thnkx: 4 this epi. :GL: (y) :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்Srivi 2019-03-12 20:19
Ada, Hero introduction acha.. Christopher Nolan rasigaiya neenga.. oru interstellar padam, pototeenga.. aduthu 5d padam kaminha.. Super sis
Reply | Reply with quote | Quote
# MamKamalavelraj 2019-03-12 19:14
Nice story
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்AdharvJo 2019-03-12 19:13
facepalm adhukula enga escape agitaru :Q: Ani oda bro uyirodu thaan iruparo :Q: very strange!! Cool and Interesting update Ms Sagampari :clap: :clap: Space la kuda population adhigama panitangala :eek: there also sight adiching?? what a pity what a pity :D anyway population control pana nala thittam thaan :D good one!! Waiting to see what happens next...thank you and keep rocking. kudos to ur R&D (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 02 - சாகம்பரி குமார்ரவை 2019-03-12 18:53
Respected sakambari kumar! You belong to a different category of intellectuals to believe it is possible to teach us space and astronomy through fiction! A great effort! This is worthy of global recognition! Kudos!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top