Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 22 - 5.0 out of 5 based on 4 votes

22. மனம் விரும்புதே உன்னை... - Aadhi

Manam virumbuthe unnai

"கே கீதா இப்போவே அம்மா கிட்ட பேசவா இல்லை ஈவ்னிங் பேசவா? இப்படி இவங்க பொண்ணெல்லாம் பார்ப்பாங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை..."

பதில் சொல்லாது அமைதியாக இருந்த கீதாவை ஆச்சர்யமாக பார்த்தான் ராஜீவ். உடனேயே கேட்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தவள் இப்போது அமைதியாக இருப்பது, அதுவும் காஞ்சனா பெண் பார்ப்பது எல்லாம் தெரிந்தும் இப்படி அமைதியாக இருப்பதன் காரணம் அவனுக்கு புரியவில்லை. சோபாவில் அவள் பக்கம் சென்று அமர்ந்தவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவள் முகத்தில் வழக்கமாக இருக்கும் மலர்ச்சியை காணவில்லை.

"ஏன்டா இப்படி டல்லா இருக்க? நீ இவ்வளவு பீல் செய்ற மாதிரி இப்போ என்ன நடந்தது? நான் தான் எல்லாத்தையும் சரி செய்றேன் சொல்லிட்டேன்ல?"

"ப்ச்..."

"இது என்ன அடம் கீதா... நான் தான் கவனிச்சுக்கிறேன்னு சொல்லி ஆச்சுல? இந்து தான் சஞ்சீவோட வைப் இதில் எந்த மாற்றமும் இல்லை..."

"ப்ச்... வேண்டாம் ராஜ்... நீங்க எதுவும் செய்ய வேண்டாம்..."

"எதை செய்ய வேண்டாம்????" என்றான் ராஜீவ் குழப்பத்துடன்.

"இந்துக்காக, எனக்காக எதுவும் செய்ய வேண்டாம் அப்படியே விடுங்க..."

"ஹேய் இது என்ன புதுசா? இந்துக்காக, உனக்காகன்னு மட்டும் இல்லை சஞ்சிவுக்காகவும் தான்... அவன் என் தம்பி தானே?"

"அவருக்காக செய்வதா இருந்தா, அவருக்கு பிடிச்சதா செய்யுங்க..."

"என்னை குழப்பாதே கீதா..."

"அவர் தான் எந்த பொண்ணா இருந்தாலும் சரின்னு சொல்லிட்டாரே..."

"ஓ! இது தானா விஷயம்? அவன் அம்மா கிட்ட இருந்து எஸ்கேப் ஆக சொல்லி இருக்கலாம்..."

"மத்தபடியும் அவருக்கு இந்துவை பிடிச்சிருக்குன்னு உங்க கிட்ட சொன்னாரா?"

"ம்ம்ம்.."

"நான் சொன்னது தானே??? இப்போ எனக்கே சந்தேகமா இருக்கு..."

"என்னை ரொம்ப குழப்புற..."

"இல்லை ராஜ், அவருக்கு ஏதாவது உதவி வேணும்னா செய்யலாம் ஆனால் தேவை இல்லாமல் நாம ஏதாவது செய்ய கூடாது தானே?"

"ம்ம்ம்ம்... ஆனால் இந்துவுக்கு..."

"அது வேற விஷயம் ராஜ்... ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா தானே?"

"இல்லை கீதா இந்துவுக்கு நாம ரெண்டு பெரும் கடமை பட்டிருக்கிறோம்..."

அவனை பேச விடாமல குறுக்கிட்டு,
"ப்ளீஸ் ராஜ் இந்த மாதிரி பேசாதீங்க... நீங்க என்னை விரும்புனீங்க, என்னை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு உறுதியா இருந்தீங்க, அப்போ இந்து நமக்கு உதவி செய்ததில் ஒரு அர்த்தம் இருக்கு..."

"இப்போ நீ என்ன சொல்ற கீதா?" என்றான் ராஜீவ் குழப்பத்துடன்.

"இப்போ நாம எதுவும் அத்தை கிட்ட கேட்க வேண்டாம்... தேவை பட்டால் அப்புறம் பார்த்துக்கலாம்..."

வாடி போயிருந்த அவள் முகத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்து விட்டு,
"சரி இப்போதைக்கு பேசலை... சரியா? ஆனால் நீ ஏன் இப்படி இருக்க?"

"ப்ச் ஒண்ணுமில்லை...."

அவள் சலிப்புடன் சொல்லிய போது, அவள் எதிர்பாராத விதமாக குனித்து மென்மையாக அவள் இதழ்களில் முத்தமிட்டான் ராஜீவ். திகைத்த போதும், அவளையும் அறியாமல் அவள் முகத்தில் வெட்கம் கலந்த சின்ன புன்னகை தோன்றியது.
"ஏமாத்திட்டீயே கீதா, உன் முகத்தில் ஸ்மைல் வரும் வரைக்கும் உம்மா கொடுக்கலாம்னு நினைச்சேன்..."

"போதும் ராஜீவ்... கிளம்புங்க ஆபிஸ்க்கு நேரம் ஆச்சு..."

"இந்த ஒரே டையலாக்கை கரெக்டா சொல்லு... நீ இப்படி முகத்தை வச்சிருந்தா நான் எப்படி ஆபிஸ் போறது... மனசெல்லாம் என் கீதா செல்லம் டல்லா இருந்தாளேன்னு அடிச்சுக்கும்..."

அவனின் அன்பில் நெகிழ்ந்து, "ஓ ராஜீவ்..." என்றபடி அவனை அணைத்துக் கொண்டாள் கீதா.
அவன் மார்பில் சாய்ந்து, அவனின் இதய துடிப்பைக் கேட்டபடி,
"ஐ ஆம் வெரி லக்கி ராஜ்... ஐ லவ் யூ!" என்று மெதுவாக முனுமுனுத்தாள்.

அதுவரை அவளின் அணைப்பில் இருந்தவன், கைகளை விடுவித்து மனைவியை தன் அணைப்பில் கொண்டு வந்தான்.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# mvukokila Rajaram 2012-12-27 21:59
when l u update mvu 23
Reply | Reply with quote | Quote
# RE: mvuThenmozhi 2012-12-28 07:20
Sorry, next part is updated now, please check it out :-)
Reply | Reply with quote | Quote
# Next PartManju22 2012-12-27 17:32
update enga Aadhi? I'm waiting 8)
Reply | Reply with quote | Quote
# RE: Next PartThenmozhi 2012-12-28 07:20
Sorry, next part is updated now, please check it out :-)
Reply | Reply with quote | Quote
# haisupriya 2012-12-27 10:36
today thursday. y no updation yet? asap upload it
Thanx
Reply | Reply with quote | Quote
# RE: haiThenmozhi 2012-12-28 07:19
Sorry, next part is updated now, please check it out :-)
Reply | Reply with quote | Quote
# Next partela 2012-12-26 18:41
yeppa Aadhi next publish panna poringa? :D
Reply | Reply with quote | Quote
# RE: Next partThenmozhi 2012-12-28 07:19
Sorry, next part is updated now, please check it out :-)
Reply | Reply with quote | Quote
-2 # Manam Virumbuthey Unnaimalathimarianandan 2012-12-15 05:27
Hi Aadhi,

இன்னும் பிரச்சனை முடியவில்லையா?

இந்த அப்டேட் -ல ஏதாவது ஒரு முடிவு வரும் என்று எதிர்ப்பார்த்தேன்.

ஏமாத்திட்டீங்களே.
Reply | Reply with quote | Quote
-1 # RE: Manam Virumbuthey UnnaiThenmozhi 2012-12-15 12:11
:-) Wait pannunga ippadi avasara pattaal eppadi :-)
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 22 (2)Admin 2012-12-13 18:03
Hmm.. ivvoru vaaram fight aduthu udane samaadhanam... so indhuvum sanjeevum eppo samaadhaanam aaga poraanga???
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 22 (2)Thenmozhi 2012-12-14 05:46
Sari oru fight-aavathu innum konja naal pogattumennu thaan :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top