தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 04 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
“எங்கேம்மா அவ? அப்பா கூட ஆஸ்பிட்டல் போயிருக்காளா? என்ன செய்யுது ரம்மிக்கு?” கேள்விகளை அடுக்கிய சத்யாவிடம்,
“மாடில அவ ரூம்ல தான் இருக்காப்பா! காலையில இருந்து வயிறு வலிக்குதுன்னு சொல்லி அழுதுட்டு இருந்தா! அங்கே தான் படுத்துட்டு இருக்கா! போய்ப் பாரு! என்று சொல்லவும், சத்யா விறுவிறுவென்று மாடிக்குச் சென்றாள்.
அங்கிருந்த அறையில் தனது படுக்கையில் முகம் புதைத்துப் படுத்திருந்தாள் ரம்யா. சத்யா வரவும் துள்ளி எழுந்தவள், வா சத்யா என்று அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“என்ன ரம்யா? என்ன உன் உடம்புக்கு? போன வாரம் தான் உனக்குப் பல்வலின்னு அம்மா சொன்னாங்க!இப்போ வயிறு வலிக்குதுன்னு அழுதியாமே?என்னதான் பண்ணுது உனக்கு? பீரியட் பெயினாடி? ரொம்ப வலிக்குதா? வேற எங்கேயாவது பெயினா ரம்மி?அம்மாகிட்ட சொல்ல முடியலன்னு நினைச்சா என்கிட்டயாச்சும் சொல்லுடி!”
“என் பெயின் ஹார்ட்லன்னு நினைக்கிறேன் சத்யா!”
“ஹார்ட்ல என்ன பண்ணுது?” அப்பாவியாக சத்யா கேட்கவும்,
“எனக்கு என்ன பண்ணுதுன்னு எனக்கே தெரியலடி சத்யா!’
“என்ன சொல்ற? உனக்கே தெரிலனா, அப்புறம் என்னதான் பிரச்சினை உனக்கு!”
“எனக்கு சரியான தூக்கமில்ல, எதையும் சாப்பிடவே புடிக்கல!” அம்மா சாப்பிடச் சொல்லி ரொம்ப வற்புறுத்திக்கிட்டே இருக்கிறதால் பல்வலி, வயிறுவலின்னு சொல்லி சமாளிச்சேன்!”
“அடிப்பாவி, அப்போ உண்மையிலேயே உனக்கு வயிறு வலிக்கலயா?”
“ம்ம்ஹூம்! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு! அதனால் தலைதான் வலிக்குது!”
“என்ன தான் உன் தலைவலிக்குக் காரணமான குழப்பம்டி?அதையாச்சும் சொல்லித் தொலையேன்!”
“என்கிட்டே லவ் ப்ரொபோஸ் பண்ணானே தினேஷ்!” “அவனைப் பத்தின நினைவாவே இருக்குடி! அவனைப் பார்க்கணும்னு போல இருக்கு. அவன் முகத்தைத் திரும்ப எப்போ பார்ப்பேன்னு தவிப்பா இருக்கு. அவன் குரலைத் திரும்பக் கேட்கணும்னு தோணுது.எந்நேரம் பார்த்தாலும் அவன்கிட்ட இருந்து போன்கால் வரணும்னு எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்டி. எனக்கு சில நேரம் பைத்தியம் புடிச்சிருச்சான்னு தோணுது!”
என்ன ஆச்சு ரம்மி உனக்கு? அம்மா அப்பா எவ்வளவு நம்பிக்கையோட உன்னை கோ-எட் காலேஜ்ல படிக்க வச்சிட்டு இருக்காங்க. நீ இன்ஜினியரிங் டிகிரியை நல்லபடியா முடிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போணும்னு உன் இலட்சியத்தை மறந்துட்டியா? இந்த மாதிரி நினைப்பெல்லாம் அதுக்கு ஒரு பெரிய தடைகல்லா வரும். ப்ளீஸ் ரம்யா! அமைதியா