(Reading time: 6 - 12 minutes)
Lock Down
Lock Down

“அப்படில்லாம் வர முடியாது அத்தை... எங்களை நம்பித்தான் பல உயிர் இருக்குது... ராகுலுக்கு இப்போ எப்படி இருக்குது... ரொம்ப முடியலைன்னா நீங்க இங்க கூட்டிட்டு வர்றீங்களா....”

“டாக்டர் தொழில் பத்தி தெரியாதா நீரஜா...  ராகுல் ரொம்ப கஷ்டப்படறான்...  மூச்சு விடவே ரொம்ப சிரமப்படறான் நீரஜா...  அவன் மூச்சு வாங்குறதை பாத்தா கஷ்டமா இருக்கு...”

“அத்தை நீங்க வீடியோ கால் வாங்க... நான் அவனை அப்படியே பார்க்குறேன்....”

நீரஜா சொல்லியபடியே வீடியோ கால் வந்த அவளின் மாமியார் ராகுலை அலைபேசித் திரையில் காண்பித்தார்....

பார்த்தவுடனேயே அவனுக்கு ஆஸ்த்துமா அட்டாக் வந்திருப்பது நீரஜாவிற்கு புரிந்தது....

“அத்தை நான் சொன்ன ரெண்டு மருந்தும் கொடுத்தீங்களா...”

“கொடுத்துட்டேன் நீரஜா...  அதும் பிறகு கொஞ்ச நேரம் தூங்கினான்...  ஒரு அரைமணி நேரம் இருக்கும்... wheezing ஆரம்பிச்சுடுச்சு....”

“ஹ்ம்ம் அத்தை நான் சொல்ல சொல்ல, நீங்க அதே மாதிரி அந்த nebulizer மெஷின்ல மருந்து போட்டு ராகுல் முகத்துல வைங்க....”, நீரஜா சொல்ல சொல்ல அதை அப்படியே அவரின் மாமியார் செய்தார்...

“சாரி அத்தை... என்னால உடனே வர முடியாம உங்களைத் தொந்தரவு பண்ணுறதுக்கு...”

“சாரிலாம் எதுக்கும்மா... என் பேரனுக்கு செய்யறது தொந்தரவா... உன் வேலை பத்தி புரியுது நீரஜா...  சாதாரண காய்ச்சலா இருந்தா நானே பார்த்துப்பேன்...  மூச்சிழுக்கவும் கொஞ்சம் பயமா இருக்கு... நீ முடிஞ்சவரை சீக்கிரம் வரப் பாரேன்....”

“கண்டிப்பா இன்னும் ஒரு ஒரு மணி நேரத்துல வரப்பார்க்குறேன் அத்தை...  அதுக்கு முன்னாடி ராகுல் ரொம்ப கஷ்டப்பட்டான்னா அவனைக் கூட்டிட்டு இங்க ஹாஸ்பிட்டல் வந்துடுங்க....”

நீரஜா சொல்ல அதற்கு தலையசைத்து அலைபேசியை வைத்த அவளின் மாமியார் ராகுலின் அருகில் சென்று அமர்ந்து, மருந்து சுவாசக் கருவியின் உதவியுடன் உள்ளிறங்குவதை பார்த்தபடி இருந்தார்....

மருந்து முடிந்தவுடன் சற்று வெது வெதுப்பான நீரை பருகச் செய்து அவனை உறங்க வைத்து கொண்டிருக்க, எதிர் அறையில் கணிணியில் பள்ளிப்பாடம் படித்துக்கொண்டிருந்த அவரின் பேத்தி, நீரஜாவின் மூத்த மகள் அழுதபடியே அவர் இருந்த அரை நோக்கி வந்தாள்....

தொடரும்

Next episode will be published on 3rd Feb. This series is updated weekly on Wednesdays.

Go to Lock down story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • Achacho facepalm news la padichadhi, ketadhu parthadhu podhadhunu ningaluma nattamai :sad: I trust you will save the remaining cast ji :yes: <br /> :hatsoff: rombha realistic aga move panuringa..... <br /><br />Thank you.
  • Good morning, dear Jai!<br />இதைவிட betterஆ இன்றைய நிலமையை சொல்லமுடியாது! சூபரோ சூபர்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.