திடீரென்று “ஏய் யார் இது தேவா?.....தினமும் சேட் பண்ணிருக்கே…..உன் எஃக்ஸ் பாய் ஃப்ரெண்டா?.......”
அதுதான் ஆரம்பம் ….அப்புறம் இது யாரு? அது யாரு?
“என் கூடப் பேசிக்கிட்டு இருக்கற அதே நேரத்துலே அவன் கிட்டே பேசிக்கிட்டிருக்கே….”
“எப்போ பார்த்தாலும் ஏன் பச்சை லைட்டை எரியவிட்டுட்டு இருக்கே நீ ஆன்லைன்லே இருக்கேன்னு உலகம் முழுக்க சொல்லணுமா?”
“ஏன் எல்லார்கிட்டேயும் பேசுறே?”
நேற்று ராத்திரி ஏன் ஒருமணி நேரம் ஆன்லைன்லே இருந்தே? என்ன பண்ணிக்கிட்டு இருந்தே?
“ஆஃப்லைன்லே வேலை பார்க்க முடியாதா?”
இப்பிடித் தினம் ஒரு பிரச்னை
விடிஞ்சதும் முதல் வேலையா அவளின் மெயிலைத் திறந்து நேற்று யாரோடு பேசியிருக்கிறாள் ….யார்கிட்டேருந்து மெயில் வந்துருக்குன்னு பார்ப்பதே வேலையாகிப் போனது.
அப்படித்தான் ஒருநாள் ஷைனியின் அப்பா காலையில் கண் விழித்ததும்
“ஷைனி என்னம்மா விடிய விடிய ஆன்லைன்லேயே இருக்கே? முழு நேரம் கண் விழித்தால் உடம்புக்கு என்னாகும்?.....என்ன தயா கூடப் பேசிட்டிருந்தியா ? ஒண்ணும் தப்பில்லே ஆனால் இப்படி ராத்திரி முழுக்க பேசிட்டிருந்தா எப்பிடி காலைலே வேலைக்குப் போக முடியும்?”
“நான் நேற்று ராத்திரி கண்முழிக்கலியேப்பா? நல்லாத் தூங்கினேன் தயாகிட்டேதான் தினமும் ஃபோன்லே பேசுறேனே…அப்புறம் ஆன்லைன்லே வேற என்ன பேச?”
சரிம்மா…ஒடம்பைப் பார்த்துக்கோம்மா “என நம்பாத மாதிரி சொல்லி விட்டு குளிக்கப் போனார்.
அதெப்பிடி நான் நேற்று ஆன்லைன் போகவேயில்லியே…….திடீரென நினைவு வந்தவளாக தயா ஒருவேளை ராத்திரியில் தன் மெயிலைத் திறந்து வேவு பார்க்கிறானோ என்ற எண்ணம் வந்தது.
பத்து நிமிடத்தில் தயாராகி தயாவின் முன் நின்றாள் ஷைனி.
ரொம்ப நல்ல பிள்ளை போல “அட என்னா அதிசயம் ? மழை கொட்டப் போகுது இன்னிக்கு ….நான் கூப்பிடாமலே ரூமுக்கு வந்துருக்கு என் செல்லம் “ என்றவாறு கன்னத்தைக் கிள்ளினான் தயா.
வேகமாகக் கையைத் தட்டிய ஷைனி சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.
“நேற்று ராத்திரி என் மெயிலை ஓப்பன் பண்ணினியா?”
“இதென்னடா புதுசா கேக்குறே? தினமும் தான் ஓப்பன் பண்ணுறேன்…..”
“தினமும் அதில் அப்படி என்ன தேடிக்கிட்டு இருக்கே? அது தவிர ராத்திரி முழுசும் ஆன்லைன்லே இருந்துருக்கே என் மெயிலைத் திறந்து வச்சுக்கிட்டு……..அப்பா பார்த்துட்டு ராத்திரிலாம் ஏன் கண் முழிக்கிறேம்மான்னு சொல்ற அளவுக்குப் போயிருக்கு…”
“அட….உன் நினைப்பா இருந்துச்சா அதுனாலே உன் மெயிலைத் திறந்து வச்சுட்டு இருந்தேன்…அதுக்கு நீ ஏன் இவ்வ்ளோ ரியாக்ட் பண்ணுறே?”
எதுவுமே நடக்காதது போல “நீ உன் எஃப்பி ( FB) பாஸ்வேர்ட் தா ….நிறைய செட்டிங்க் எல்லாம் பண்ணித் தரேன் “ என்றான்.
ஷைனி ஒன்றும் சொல்லாமல் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்தாள். தயா டீக் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு “ சொல்லுப்பா” என்றான். ஷைனி அமைதியாக இருக்கவும்
“ ஆனா ஒண்ணுப்பா நல்லா நேரம் போச்சு ராத்திரி ஒருத்தர் மாத்தி ஒருத்தர் “ஹை “சொல்லிப் பேசிக்கிட்டே இருந்தாங்க………..எல்லாம் நீதான் பேசறென்னு நினைச்சுக் கடலை போட்டுட்டேயிருந்தாங்க……”என்றவாறு சிரித்துக் கொண்டேயிருந்தான் தயா
“டேய் நீ லூசா? என் ஃப்ரெண்ட்ஸ் கூட என்னை மாதிரி நீ பேசினியா?....கொஞ்சமாவது இங்கிதமிருக்கா……”
ஷைனி கோபப்பட கோபப்பட தயா சிரித்துக் கொண்டேயிருந்தான்.
ஒரு முடிவுக்கு வந்தவளாக தயாவிடம் ஒன்றும் சொல்லாமல் கிளம்பி ஆஃபிசுக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜிமெயில் அக்கவுன்ட் பாஸ்வேர்டை மாற்றினாள். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவளுக்கு. தலை பயங்கரமாக வலிப்பது போலிருக்கவும் தோழி கீர்த்தியை அழைத்துக் கொண்டு கேன்டீன் போய் டீ ஆர்டர் செய்துவிட்டு முதல் முறையாகக் கீர்த்தியிடம் தயா பற்றிச் சொன்னாள் ஷைனி.
“ ஷைனி இது ஒத்துவருமாப்பா………அவன் குணம் எதுவும் உன் குணத்துக்கு ஒத்து வர மாதிரியில்லியேப்பா…..அது போக இந்தச் சந்தேகப் புத்தி வாழ்க்கையையே கொன்னுடும்ப்பா…..”
இவ்வ்ளொ நாள அவன் ஒரு இன்னொஸென்ட் அது போக என் மேல் ரொம்ப அளவுக்கதிகமா அன்பு வச்சுருக்கவன் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும்……ஆனா இப்போ அவன் பாஸ்வேர்ட் கேட்கும் போது அவன் பண்ணின அடாவடித்தனம், இப்போ எஃப்பி பாஸ்வேர்ட் கேட்டவிதம்…. என்னை எப்போதும் வேவு பார்க்கிற இந்தக் குணம் இதெல்லாம் எனக்கு அவன் கிட்டே முதல் தடவையா ரொம்பப் பயம் வந்துருக்குப்பா……”
அப்போது ஷைனியின் மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தவள் “தயா தான் “ என்றாள். எடுத்துக் காதில் வைத்தவுடன்” பாஸ்வேர்டை ஏன் மாற்றினே?” என்றான்.
ஷைனி பட்டும் படாமல்.” நான் ஆஃபீஸில் இருக்கேன் அப்புறம் பேசலாம் “என்றாள்.
“எனக்கு இப்பொவே பதில் வேணும் பாஸ்வேர்டை ஏன் மாற்றினே?”
அப்புறம் பேசலாம் “
“எனக்கு இப்பொவே பதில் வேணும் பாஸ்வேர்டை ஏன் மாற்றினே?”
அப்புறம் பேசலாம் “
“எனக்கு இப்பொவே பதில் வேணும் பாஸ்வேர்டை ஏன் மாற்றினே?”
“அப்புறம் பேசலாம் “ என்றவாறு ஃபோனைக் கட் செய்தாள் ஷைனி
பத்து நிமிடத்துக்கு விடாமல் அழைத்துக் கொண்டேயிருந்தான் தயா.
ஒரு கட்டத்தில் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள் ஷைனி.
கீர்த்தி கவலையாக ஷைனியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னப்பா இவ்வ்ளோ டென்ஷன் க்ரியேட் பண்றான்?”
ஷைனி மௌனமாக எழுந்து நடக்க ஆரம்பிக்கவும் கீர்த்தியும் எழுந்து கொண்டாள்.
“அவன் அப்படித்தான் கீர்த்தி எதுவுமே ரொம்ப எஃஸ்ட்ரீம் லெவெல்தான் …..அன்புன்னு பார்த்தா கொட்டோ கொட்டுன்னு கொட்டுவான். கோபமும் அப்பிடியேதான்…..அழுகையும் அப்பிடியேதான் ….எனக்கு இப்போ திடீர்னு இவன் கூட என்னால சந்தோஷமாயிருக்க முடியாதுன்னு தோணிக்கிட்டேயிருக்குப்பா……ஆனால் இதையெப்பிடி ஹேண்டில் பண்ணப்போறேன்னு நினைச்சா கவலையாயிருக்கு. ஏதாவது சொன்னா உடனே செத்துருவேன்னு சொல்லி பயமுறுத்தறான்.
அப்பாகூட என் கிட்டே அடிக்கடி சொல்லியிருக்காங்க…….இந்த ப்ளாக்மெயில் பண்ணி வர அன்பு எவ்வ்ளோ நாளைக்கும்மா தாக்குப் பிடிக்கும் ……..நல்லா யோசிச்சு முடிவெடும்மான்னு…………அவன் என்னைக் கழுத்தை நெறிக்கற மாதிரியான அன்பாலெ கட்டி வச்சமாதிரியும் என்னாலே மூச்சு விட முடியாமல் மூச்சு முட்டறமாதிரி அடிக்கடி ஃபீல் பண்றேன் கீர்த்தி”
“ஷைனி நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே ……….எனக்கென்னமோ நீ ஏதாவது சொல்லி இவன்கிட்டேயிருந்து விலகிடறதுதான் நல்லதுன்னு தோணுது…..உன்னோட இயல்பா பழகற தன்மையே கூட மாறிட்டமாதிரியிருக்குப்பா..”
அன்று முழுவதும் ஷைனியால் வேலையில் கவனமாகவே இருக்கமுடியவில்லை.
ஒவ்வொரு நொடியிலும் தன்னுள் ஒளிந்து கொண்டிருக்கும் "தான்" அடிக்கடி வெளியில் எட்டிப் பார்ப்பதுதான் தயாவின் பிரச்னைகளின் ஆரம்பம். அவனால் அதைச் சவுக்கால் அடித்து நிறுத்த முடியவில்லை. அவனின் மனச் சிக்கல் இதுதான் யாராவது அன்பு பாராட்டி விட்டால் அவன் குரூரமானவனாகி விடுகிறான். அந்த யாராவதை தனக்குச் சொந்தமான பொருளாகப் பார்ப்பதுதான் பிரச்னை. அப்புறம் அவன் கொடுக்கும் சிக்கல்கள் கணக்கிலடங்கா.
விசேஷம் என்னவென்றால் அவனிடம் அன்பு பாராட்டுபவர்களிடம் ஒரு வன்மம் வந்து விடும்.அதை எளிதாக பொறாமையெனப் பெயரிட்டு விட முடியாது. சலனமின்றிக் கோபப்பட அவனால் முடியும்.அன்பு பாராட்டுபவர்களைத் தேடித் தேடி வலை வீசிப் பேச்சில் வீழ்த்தி விழ வைத்து விடுவான்.விழும் வரைதான் பாசமெல்லாம். அப்புறம்தான் ஆட்டம். அவனிடமிருந்து தப்ப முடியாது.நேரம் காலமில்லாமல் தேடல். எங்கே எப்படி அடித்து நொறுக்கலாமென்று...அவ்வ்ளோ இமோஷனல். இதில் “ஓவர் அன்பிருந்தா இப்பிடித்தாம்பா “ அப்ப்டீன்னு விளக்கம் வேற.
”இது பொஸஸ்ஸிவ்னெஸ்பா....ரொம்ப அலட்டிக்காதே “ அப்படீன்னு அட்வைஸ் வேற...இப்படி அன்பே அவனை இம்சிக்கும் விஷயமாக மாறிவிட்டதில், விஷமாகவும் மாறிவிட்டதில் கொஞ்சம் பெருமைதான் நம்ம கதை நாயகன் தயாவுக்கு.
இதையெல்லாம் தீபக்கிடம் வந்து பெருமையடிக்கும் போது மாட்டிக் கொண்டவர்களைப் பற்றிப் பரிதாபமாக இருக்கும் தீபக்குக்கு. இத்தனைக்கும் அந்த அன்பை விட வேறெதுவும் தப்பில்லை. தீபக்குக்கே தானே அவனிடம் மாட்டிக் கொண்டுதான் இருக்கிறோமோன்னு தோணிருக்கு. இப்போ இத்தனை வருடம் கழித்து மறுபடியும் அவனைப் பார்க்க வந்தது கூட அவன் வலைலே விழுந்ததினால்தானோ என்றிருந்தது.
தொடரும்
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Kathaiyai neenga eduthu sellum vitham arumai
Superb update...
Thaya character pathi neenga sollum pothu Shini'kku mattum illai enakkum konjam thigila thaan irukku... Manithargal etthanai vitham!
Pazhaiya episode vachu parthal, Shini Thaya'vai thaan marriage seithuk kondiruppathu puriyuthu... Paavam thaan