(Reading time: 9 - 17 minutes)

07. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

கிட்டதட்ட இருபது மாதங்களுக்கு பிறகு நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பினாள் மீரா. முழுக்க முழுக்க இது என் நன்றிகடன். புரிந்துகொள்வாய் என எதிர்பார்கிறேன் என்று பொருள்  கொண்டு எழுத பட்டிருந்தது.

 

மின்னஞ்சல் பார்த்த கிருஷ்ணாவிற்கு வலித்தாலும் ஒருப்பக்கம் இதமாக இருந்தது. பொறுப்பான தோழியாக எழுதியிருக்கிராளாம். யாருக்கு என்று சொல்லவில்லை. வார்த்தைகளில் கூட அவளின் விலகல் உணர முடிந்தது. கிருஷ்ண்ணா,கிருஷ்ணாகுட்டி என்று கொஞ்சுவாள் அவளுக்கென்று அவன் ஏதாவது செய்யவேண்டும் என்றால். அந்த கொஞ்சல் இதில் இல்லை.  பதிலாக  கவியின் மேன்மையை எடுத்து சொல்லி அவள் ஆசையை கோடிட்டு காட்டி முடிந்த வரை சீக்கிரமாக முடிவு எடுத்து தக்க நடவடிக்கை எடுக்க தயாராக வர வேண்டுமாம் அவன். படித்ததும் துரோகம் செய்த மனம் கதறி அழுதது. மீராவின் அன்பை புரிந்துக்கொண்டு.

 

ந்த நான்கு ஆண்டுமே லேப் என்றால் கவிதா,கிருஷ்ணா கீர்த்தனா ஒரு எக்ஸ்பெரிமென்ட்டும், மஹி, மீரா, மோகன், நவிதா நான்கு பேர் ஒரு எக்ஸ்பெரிமென்ட் என்று செய்வார்கள். பொறியியல் கல்லூரியில் பின்பற்றும் ஆய்வுகூடம் கட்டுபாடுகள் அது. இயந்திரத்தை ஆய்வுசெய்து புரிந்துக்கொள்ள உதவும் வகை. லேப்பில் கலந்து தான் உட்கார வேண்டும் அதனால் மீரா மஹியுடன் இருப்பாள்.புதிதாய் ஏதாவது ட்ரை பண்ணும் பேர்வழி மீரா செய்தால் கூட நின்று ஊக்குவிப்பான் மஹி. மற்றவர்கள் தங்கள் வேலை முடிந்தது என்று உட்கார்ந்தாலும் மீரா இது என்ன? அது எப்படி என்று ஆராய்வாள்.

 

 நவிதாவிர்க்கு மஹிமேல் ஈர்ப்பு உண்டு. அவனை உரசி நின்றுக்கொண்டு பேசுவாள். இதை மஹி கண்டுகொண்டதே இல்லை. அவனுக்கு மீரா மட்டுமே தெரிவதால். பணதிமிர் படைத்த மோகன் மீராவை வீழ்த்த வேண்டும்,புத்திசாலி என்று போற்றும் பெண்ணே என் காலுக்கடியில் என்று காட்டிக்கொள்ள வேண்டும்  என்ற எண்ணம் இருந்தது. திட்டமிட்டு மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தெய்வீக காதல் என்று அவன் சொன்னதும் மீரா கிண்டல் செய்து கழித்துவிட்டாள். அவள் கிண்டல் மோகன் மனதில் துவேஷத்தை வளர்த்தது.

 

நவிதாவின் எண்ணம் புரிந்த கவி தன் நண்பன் மஹிக்கு மீரா மேல் தான் ஈர்ப்பு அதனால் நீ ஒதுங்கிகொள் என்று பூடகமாக சொல்ல,  நவிதாவிர்க்கு மற்ற ஐவர் மீதும் வஞ்சகம் வளர்ந்தது. பணதிமிர் படைத்த மோகனை நவிதாவிர்க்கு அறவே பிடிக்காது.வேண்டுமென்றே சண்டை கிளப்பி விடுவாள் நவிதா மஹி மீராக்குள். இப்படியே பல வண்ணங்களில் ஏழு செமஸ்டர் முடிய, மஹி கிருஷ்ணாக்குள் எட்டாவது செமஸ்டர் முக்கிய விஷயமான ப்ராஜெக்ட்டில் மனஸ்தாபம் ஏற்பட்டது.

 

அந்த சமயம் மஹியின் அக்காவிற்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது. அதே வேளை அவன் அப்பாவிற்கு கிட்னியில் பிரச்சனை என்று மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்தார். கோபத்தில் இருந்த கிருஷ்ணா மஹியின் அப்பாவின் நிலைமையை கிண்டல் செய்ய அடக்க முடியாத கோபத்தில் மஹி கிருஷ்ணாவை அடித்து விட்டான். அதற்க்கு பின் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அந்த இரண்டு மாதம் ஒரே அறையில் இருந்தும். காலேஜ் முடியும் தருவாயில் மீரா மஹி இல்லாமல் இருக்க முடியாது என்று உணர்ந்து ஒரு இரவு போனில்  காதலை வெளிபடுத்தினாள். கிருஷ்ணா மேல் இருந்த கோபத்தில், சுற்றி இருந்த தற்காலிகமான பிரச்னையில் தவித்தவன் மீரா காதல் சொல்லும் போது "என்னால் இப்போதைக்கு ஏற்க்க முடியாது என்று கறார் குரலில்  சொல்லி போன் கட் செய்து விட்டான். தந்தைக்கு  சீரியஸ் என்று விஷயம் தெரிந்து அன்றே  சென்னைக்கு புறப்பட்டும் சென்று விட்டான். 

 

முட்டாள் தனமாக தன்னை வழியனுப்ப வந்த மோகனிடம் மஹி தன் நிலைமையை பொலம்பி விட்டு போக. இதை பயன்ப்படுத்தி மோகன் மீராவிடம் மஹி அவளை  “ஆண்களுக்காக அலைபவள்,குணம் கெட்டவள், கேவலமான பெண்  என்று சொன்னான் “என்று சொல்ல  மீரா பலம் இழந்த மனம் அதை நம்பி விட்டது. 

 

தன் வெற்றியை யாரிடமோ குடித்து விட்டு பகிர்ந்துகொண்டிருந்தவனின் விவரத்தை இரண்டு பேர் கேட்டனர்,ஒன்று நவிதா இன்னொன்று கிருஷ்ணா.கோபம் கண்களை மறைக்க அதை மீராவிடம் தெரிவிக்கவே இல்லை அன்பான நண்பன்.

 

கிருஷ்ணா மீராவிடம் விவரம் சொல்லி சேர்த்து வைத்து விடுவான் என்று நம்பி நவிதாவும் தெரிந்த விஷயத்தை   பகிரவே இல்லை,மீராவை பார்த்தாலே பொறாமை வழிகிறது என்று கடைசி இருபது நாள் அவள் கல்லூரிக்கும் வரவில்லை.பரீட்சை எழுத மகேந்திரன் வரவில்லை என்றதும் மீரா இன்னும் இறுகிப்போனாள். 

 

பரிட்சை முடிந்து அவரவர் வீட்டிற்க்கு போய் சேர்ந்தும் விட்டனர். கலகலப்பான மீரா இருகிப்போனாள். யாரிடமும் பேசவில்லை. அமெரிக்க செல்ல இருந்த ஆர்வத்தில் மீராவை கிருஷ்ணா கண்டுக்கொள்ளவில்லை. இதே சூழ்நிலையில் மீரா அவள் அம்மாவிடமும்  ஏதோ சண்டையிடும் போது அன்பான தன் ஆன்டிக்கு  உதவுகிறேன்  என்று "இந்த மாதிரி ராட்சசியை எவன் கட்டிப்பான்" என்று ஆரம்பித்து எப்போதும்ப்போல் பேசினான்.அந்த வார்த்தையில் உடைந்தவள் என்ன நினைத்தாலோ அதற்க்கு பின் தன் அம்மாவிடமும் கிருஷ்ணாவிடமும் பேசவே இல்லை. முதுகலை படிக்க ஐ.ஐ.டி இடம் கிடைத்தும் செல்லாது சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் சேர்ந்தாள். இல்லை வாழ்வே வெறுத்ததுப்போல் விட்டதை வெறித்து பார்த்துக்கொண்டும், எரிச்சல் பட்டும் கொண்டிருந்தவளை கவி தான் அவளுக்கு ஏற்றதுப்போல் பேசி   சேர்த்தாள் என்று தான் சொல்ல வேண்டும். 

 

செய்த சிறுபிள்ளை தனம் அமெரிக்காவில் தனிமை உணர்த்திய பின் தினமும் தீயில் உருளும் புழுப்போல் துடித்துகொண்டிருக்கிறான். அதுவும் மீராவின் நிலைமையை சென்னை வந்தபின் அவள் நடந்து கொள்ளும் விதம் கேள்விப்பட்டு நொந்து அவன் நோகாத நாட்கள் இல்லை. மகிழ்ச்சி என்னவென்றால் கவி தொடர்பில் இருப்பது தான். அவன் காதல் சொன்னப்போது வார்த்தையில் வேண்டாம் என்றாலே ஒழிய  அவனை தவிர்த்ததில்லை.

 

இப்படி அவன் மறைத்தது தெரிந்தால். கவிதா பார்க்க கூட மாட்டளே. அவன் செய்தது  தோழமைக்கு துரோகம் அல்லவோ. காதலின் அடிப்படையே நம்பிக்கையும் புரிதலும் தானே. அது இரண்டுமே இல்லாமல் போனதே. தவழும் வயது முதல் பழகியவளின் காதலை விட அடித்துவிட்டான்  என்ற கோபம் தானே தெரிந்தது. அப்படி பார்த்தால் இந்த  சுயநலவாதியை பிறர் நலன் பார்க்கும் இலக்கணமற்ற அந்த கவி(தை) ஏற்குமா என்ன??

 

ப்ளுயிட் மெக்காநிக்ஸ் லேப்பில் தீவிரமாக தண்ணீர் ஓட்டத்தை வெவேறு பிரஷர் வைத்து கண்டு பிடித்துகொண்டிருந்தனர் கவியும் கிருஷ்ணாவும்.நெளிந்துக்கொண்டே  இருந்தான் கிருஷ்ணா. “கவி” என்று அழைத்து எதோ சொல்ல வருவான். பின் தலை குனிந்து கொள்வான். அவன் செயல் விசித்ரமாக பட முறைத்த படி என்னவென்று  கேட்டு தலை குனிந்து  அளவீடுகளை பார்த்துக்கொண்டிருந்தவள் காதில் மட்டும் விழும் வாறு 

"எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு நாம்ப வாழ்கை முழுக்க இப்படியே இருக்கலமா கவி" என்றான்.

 

சில மணித்துளிகள் சுவசிக்கவே முடியவில்லை கவியால். முகம் வெளறி விட்டது. சுதாரித்து "பெயருக்கு ஏற்றார் போல இருக்க?" என்று முயன்று இயல்பான குரலில் ஒற்றை புருவம் தூக்கி கேட்டாள் கவிதா.

 

"இப்படி புருவத்தை தூக்காத கவி,என்னமோ போல இருக்கு,பிடிக்கல என்றால் நண்பர்களாகவே இருக்கலாம்,பெருசுப்படுத்த வேண்டாம் ப்ளீஸ்" என்று முடித்தும் விட்டான்.

 

உடனே பதில் கொடுத்தாள் கவிதா "நண்பர்களாகவே இருப்போம் கிருஷ்ணா" 

 

முடிந்தது காதல் நாடகம்.இந்த சம்பாஷனை இருவர் காதில் மட்டுமே கேட்கும் அளவில் நடந்தது. ஒரு பத்து நிமிட பேச்சு வார்த்தை அவ்வளவு தான். அதற்க்கு பின் ஒரு நாளும் கிருஷ்ணா அதை பற்றி பேசவே இல்லை.

 

டந்த நிகழ்வில் ஒன்று கூட மறக்க வில்லையே. வியப்பாக இருந்தது கவிக்குள். அந்த நிமிடம் இப்போது நினைத்தாள் கூட தித்திப்பாக இருக்கிறதே என்றிருந்தது. தினமும் ஆயிரம் ஆண்களை கடக்கிறாள், பேசுகிறாள், நட்பு  பாராட்டுகிறாள் கிருஷ்ணா மீது தோணும் அந்த உணர்வு,சொல்ல முடியாத தயக்கம், தைரியம் வேறு யவரிடமும் தோன்றியதே இல்லை.

 

மீராவின் மின்னஞ்சல் கொடுத்த தைரியத்தில் கிருஷ்ணா கவிதாவிற்கு போன் செய்தான். அவனுக்கு காலை என்றால் இந்தியாவில் மாலை.

 

எடுத்ததுமே இருவருமே சில நேரம் மௌனம் காத்தனர்.

 

'எதாவது பேசு "என்று ஒன்றாய் சொல்லினார்கள் 

 

கிருஷ்ணா,'மீரா எப்படி இருக்கா" என்று வழக்கம் போல் விசாரணை தொடர்ந்தான்.

 

"தூள் கிளப்புறா" என்று அவள் பழையப்படி திரும்புவது குறித்து மகிழ்ச்சியுடன் கூறினாள்.

 

"ராங்கி ராட்சசி நல்லா தான் இருப்பா" உணர்ச்சி பூர்வமாய் சொன்னான்.

 

திடீரென நடுவில் புகுந்து கீர்த்தனா போன் பிடுங்கி  "இது தான் லவ் பண்ணறவங்க பேசற விதமா?என்னடா கிருஷ்ணா சின்ன பிள்ளையாகவே இருக்க? என் கிட்ட கிளாஸ் எடுத்துக்க சொல்லு உன் ஆளை" என்றாள்.

 

கிருஷ்ணா, "ஆமா சொல்றேன் பட் ராம் என்கிட்டே நீ கொஞ்சம் கஞ்சம்னு சொல்றாரு உண்மையா " என்று கலாய்த்தான்.

 

"உன்னை பச்சைபிள்ளை என்று சொன்னேன் பாரு என்ன அடிக்கணும்" என்று சொல்லிக்கொண்டே போனை கவியின் கையில் திணித்துவிட்டு சென்று விட்டாள்.

 

"ஹே.. கவி.." அன்று அவன் பேசிய அதே வகையான தோரணை!! கவியின் மனம் முரண்டது. அவள் பதிலே சொல்லவில்லை.

 

அவளை உணர்ந்தவன்ப்போல் "முதலில் நீ எனக்கு நல்ல ப்ரெண்ட் கவி அப்பறம் தான் மத்ததெல்லாம், உன்னை தெரிஞ்சவன் நான்,என் கிட்டே தயங்காதே கவி "

 

கவி,"எனக்கு இது அப்பா அம்மாக்கு துரோகம் செய்வதுபோல் தெரிகிறது, நாம்ப பிரெண்ட்ஸ் ஆகவே கொஞ்ச நாள் இருப்போமே, நீங்க இந்தியா வரவரைக்கும்"

 

"என்ன மரியாதையெல்லாம் கொடுக்கிற??"

 

"கொடுக்கணும் தோணுது "

 

"மரியாதை மட்டும் தானா????" என்று அவன் ஒரு விதமாக கேட்க 

மௌனம் தான் பதிலாக வந்தது.

 

சிறிது நேரம் கழித்து கவி "மீராவிற்கு நல்லபடியா வாழ்கை அமைத்து கொடுக்கணும் கிருஷ்ணா..."என்றாள் 

 

மனதில் மின்னல் வெட்டியது. மீராவை கட்டாயப்படுத்தி எதையும்  செய்ய வெக்க முடியாது. அவள் பலவீனம் என்றால் காலேஜில் அவனுக்கு தெரிந்து மகேந்திரன் மட்டும் தான்.பின் அவள் அப்பா. ஆனால் பெண் விசயத்தில் வாசுதேவன் பலவீனமானவர்."அப்பா.."  என்று அவள் இழுத்து கூபிட்டலே மெழுகென உருகிடுவார். 

 

பின் சமாளிக்கும் விதமாக "எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாம்,மீரா கூட இருந்ததுல அதெல்லாம் என்னிக்குமே பெரிய விஷயமா தெரிந்ததில்லை, எனக்கு உன் தோழமை மட்டும் போதும். அப்பறம் கொஞ்சம் கவனிப்பு என்று அவன் இழுக்க கவியின் சிரிப்பு காதில் விழ 

 

"அம்மா தாயே நான் ஜோர்ஜியா வில் இருக்கேன் கொஞ்சம் சத்தமா சிரி அப்போ தான் கேட்கும்" என்று பேச்சை வளர்த்துக்கொண்டே போனான்.

 

மறைத்த விஷயம் தெரிந்தால் மீராவின் கோபம் அவனை கொள்ளுமோ தெரியாது. ஆனால் அவள் காட்டும் வருத்தம் அவனை கொன்று புதைத்து விடும். எதிரிகள் துரோகம் செய்வதில்லை. அது பாதிப்பதும் இல்லை. நண்பர்களின் ஏமாற்றல் உயிரை குடிக்கும் விஷம் போல்.!!! சென்றதையே நினைத்துக்கொண்டு அழுவது ஏன்?? புதிதாக தொடுருவோமே..! நம்பிக்கையுடன் இந்தியா கிளம்ப வேலையில் இறங்கினான் கிருஷ்ணா.  

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 06

Go to Ninaikkatha naal illai rathiye 08

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.