(Reading time: 10 - 19 minutes)

08. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா 

Ninaikkaatha Naalillai rathiye

கால்வலி சரியாகி பழைய படி நடக்க ஆரம்பித்து விட்டாள் மீரா. ஹரிணி நரேன் திருமணத்திற்கு எண்ணி இருபதே நாட்கள் இருந்தது. மேக்அப்  செய்ய ஆள் பார்க்க, முன்பே பரிசோதித்துக்கொள்ள என்று ஹரிணி மீராவை கூட்டிகொண்டு அலைந்தாள். அப்படி ஒரு நாள் அலையும் போது அந்த புகழ் வாய்ந்த மால்லில் மகேந்திரனை பார்க்க நேர்ந்தது.

 

இவர்களை பார்த்தவுடன் அருகில் வந்தவன்.அண்ணி அண்ணி என்று குழைந்து பேசினான்.திருமணத்திற்கு சட்டை எடுக்க வந்தானாம் எதுவுமே பிடிக்க வில்லையாம்.அண்ணி செலக்ட் செய்தால் நல்லா இருக்குமாம்.இப்படி பேசி அந்த மாலில் உள்ள போலோ ஷிர்ட்ஸ் கடைக்கு அழைத்தும் சென்று விட்டான்.

 

அவன் குழைவது இவளுக்கேன் புரியவில்லை.”ஐயோ” என்று இருந்தது மீராக்குள். ஹரிணி சின்ன சின்ன செக்கட் சட்டைகளே செலக்ட் செய்ய மீராவின் மனம் அவனுக்கு ஸ்ட்ரைப்டு ஷிர்ட்ஸ் தான் பிடிக்கும் என்று இயல்பாய் கூவியது. ஹரிணி தேர்ந்தெடுக்கும் ஒவொன்றுக்கும் குறை சொல்லிக்கொண்டே வந்தான் மஹி. 

 

நேரம் கரைவதை உணர்ந்து கடைசியில் மீராவே "அந்த ப்ளூ கிரீன் ஸ்ட்ரைப்ட் ஷர்ட் எடுங்க என்று சொல்லி போட்டு பார்க்க சொன்னாள்" கர்வமாக தனக்கு தான் ஆடைகள் அணிவது பற்றி தெரிவதுப்போல். ஹரிணிக்கு இவர்கள் பழைய கதை தெரிந்தால் சேர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பித்து விடுவாள்.அதெல்லாம் தாங்க முடியாது. அந்த நிலைமையை எதிர்க்கொள்ள இப்போதைக்கு வலு இல்லை. மஹியும்  அவளை முன்பே தெரியும் என்று காட்டிக்கொள்ள வில்லை. என்னவாக இருக்கும் அண்ணியாக வரபோகும் பெண்ணிடம் நன்மதிப்பு பெற முயற்சிக்கிறான் போல.

அதுதான் நல்லவன் என்று காட்டிக்கொண்டு பின் கழுத்தறுக்கும் அந்த கலை அய்யாவிற்கு அல்வா சாப்பிடுவதுப்போல் அல்லவா. மீராவின் நொந்த மனம் என்ன வேண்டும் என்றே தெரியாத மனம் வில்லனை பார்ப்பதுப்போல் பார்த்தது மஹியை.

ஷர்ட் அணிந்து வந்து காட்டி நானும் சலித்தவன் அல்ல என்பதுப்போல் "அண்ணி,அண்ணாக்கு சர்ப்ரைஸ் கிபிட் வாங்கணும் என்று சொன்னீங்கல, அந்த பக்கம் இருக்கிற ஷிர்த்ஸ் பாருங்களேன்” என்று ஞாபக படுத்தி ஊக்குவிக்கும் விதமாக பேசி அனுப்பி விட்டு, அவளிடம் நெருங்கி கிட்டே போய் அவள் கண்களை நேராய் பார்த்து  நல்லாயிருக்கு என்று சொல்லி கண்ணடித்தான்.பதிலுக்கு கண்கள் சிவக்க முறைத்தாள் மீரா.

 

பின் புலத்தில் இருந்த இன்னொரு உண்மை அந்த நிமிடம் உதறல் எடுத்தது மீராவிற்கு. அவன் செயல் எதையோ எதிர்பார்த்தது. ஹரிணி எதுவும் பிடிக்க வில்லையென திரும்பி வர இருவரும் நிலை திரும்பினர். அதற்குப்பின் மீரா மஹியை திரும்பி கூட பார்க்கவில்லை. ஹரிணி எப்போதும்ப்போல் வளவளக்க மீரா "ம் " போட்டுக்கொண்டே ஹரிணியின் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர்.

 

மீராவை அவள் அறைக்கு கூடிப்போய் கல்யாணத்திற்கு எடுத்த புடவை மற்றவையெல்லாம் காட்டினாள்.பின் மூன்று ஒரே மாதிரி புடவைகளை காட்டி ,"இதை தான் நீங்க மூன்றுபேரும் கல்யாணத்திற்கு கட்ட போறீங்க" எனறாள்.

 

புடவை ஒரே மாதிரி டிசைன் ஆனால் வெவேறு நிறம். மீராவிற்கு நீலநிறம் பச்சை பார்டர், கீர்த்தனாவிற்கு பச்சைநிறம் ஊதா பார்டர், கவிக்கு ஊதாபூ நிறம் பச்சைநிற பார்டர். மிகவும் பொருத்தமாக இருந்தது. அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பை புரிந்து அவள் தேர்ந்தடுத்தது மீராக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஹரிணியே வீட்டிற்க்கு வந்து அவர்களுக்கு அழைப்பு விடுத்து புடவைகளை கொடுத்து விட்டு சென்றாள். 

 

மாதங்கள்  வாரங்கள் ஆகி  நாட்கள் ஆக கழிந்து இப்போ நேரக்கணக்கில் வந்து நின்றது. மகிழ்ச்சி வெள்ளம் திசையெங்கும் விரிந்து வழிந்தது ஹரிணிக்கு. முன்தின இரவுக்கு ஹரிணி வாங்கிகொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வந்து அந்த திருமண மண்டபத்தில் பார்கிங்கில் வண்டியை நிறுத்த கவி செல்லவும் கீர்த்தனா உள்ளே நுழைய எத்தனித்தாள்.மீரா இரண்டு நாட்களாய் ஹரிணியுடன் தான் இருந்தாள்.அவளுக்கு துணை தேவைப்பட்டது. 

 

எதிரே "ஹாய் கீர்ட்ஸ்" என்று வந்து நின்ற மஹியை பார்த்ததும் ஆத்திரம் ஏறியது கீர்த்தனாவிற்கு.

 

"ராஸ்கல்" என்று கர்ஜித்து சட்டையை பிடித்து விட்டாள். சரளமாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி கெட்ட வார்த்தைகளை பயன்ப்படுத்தி அடிக்குரலில் திட்டிதீர்த்தாள். 

 

நடுவில் வந்த கவி கண்களில் நீருடன் நின்றாலே தவிர பேசவே இல்லை.பேச தோன்றவில்லை அவளுக்கு. உற்ற நண்பனா?! ஏமாற்றிய துரோகியா?! என்னவென்று சொல்வது. கோபம் எரிச்சல் எல்லாம் கீர்த்தனா பட்டாயிற்று.

 

மஹியும் பேசாமல் “வெல்கம்” என்று சொல்லி தலைகுனிந்து நகர்ந்து விட்டான்.

 

கவியும் கீர்த்தனாவும் அமைதியாக குழபங்கலுடன் வைபவத்தில் கலந்துக்கொள்ள சென்று விட்டார்கள். மீராவின் முகத்தில் எந்த வகை உணர்ச்சியும் தெரியவில்லை கவிக்கு. சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று குழப்பமாக இருந்தது.

 

மீரா மகேந்திரனை பார்த்தால் என்ன செய்வாள்?எப்படி நடந்துக்கொள்வாள்? முன் நடந்த விஷயங்கள் நடந்தது எதுவும் தெரியாது கவி குழப்பத்தில் ஆழ்ந்தாள். அந்த நொடியே மகேந்திரனிடம் சாதரணமாக பேசிவிட்டு அவர்களிடம் வந்த மீராவை அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக பார்த்தனர் தோழிகள்.

 

புரிந்தவளாக "உலகம் ரொம்ப சின்னது கவி, என் விதி இப்படி தினம் தினம் அவமானபட்டு வாழனும் என்று இருக்குப்போல, ஆனால் நான் உடைய மாட்டேன் கீர்த்தனா,ஜெயித்து காட்டுவேன் அவன் எனக்கு ஒன்னுமே இல்லை என்று புரிய வைப்பேன் கவி" என்று உறுதியாக சொன்னாள்.

"மறுபடியும் அவனை பார்த்த பின் தான் எனக்குள் இருக்கும் என்னை நோகடிக்கும் முள் எது என்றே புரிந்தது. உங்க இரண்டு பேரையும் எவ்வளோ கஷ்டப்படுதிருப்ப்பேன், எனக்காக உங்க சந்தோசத்தை இழந்து இருக்கீங்க, உங்க மகிழ்ச்சி இனி என்னால கெடகூடாது என்று தான் அவனை பார்த்ததை சொல்ல வில்லை கவி" என்று முதிர்ச்சியான தோரணையில் மீரா சொல்ல கேட்ட தோழிகளுக்கு அளவில்லா ஆனந்தம்.

 

ராம் சொன்னப்படி அந்த வேதனைக்கு பிரேக்பாயிண்ட் வந்து அது இன்னும் மனஉறுதி தான் கொடுத்துள்ளது என்று கீர்த்தனாவிர்க்குள் பெருமை பொங்கியது.

 

மஹி இரண்டு முறை முயற்சி செய்தும் கவியும் கீர்த்தனாவும் பேசவில்லை. மீரா அவன் இருப்பதுபோல் காட்டிக்கொள்ள வில்லை. அப்போதைக்கு முயற்சியை கைவிட்டு வேறு வேலைகளுள் இறங்கினான்.

 

ஆர்கேஸ்ட்ராவில் பாட வந்தவரிடம் வேண்டுமென்றே அவர்கள் எல்லாம் சேர்ந்து ரசித்த பாடல்களை பாட சொன்னான். பந்தியில் கீர்த்தனாவிற்கு இரண்டு பாசந்தி வைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மஹி அவர்களை பார்த்து சிரித்தான். 

 

டுத்த நாள் முகூர்த்தத்தில் ஹரிணி நரேனின் மனைவியாகினாள். செய்த போட்டோ பிரேம் கொடுத்து அதற்கான பாராட்டுகளை வாங்கிக்கொண்டு பின் மதிய உணவு முடிந்த உடனே தோழிகள் கிளம்பிவிட்டனர். அங்கே இருக்க இனி இயலாதுப்போல் மனம் சொல்ல வந்து விட்டனர் அவர்கள் பிளாட்டிற்கு.

 

கவி மூளைக்குள் அந்த சம்பாஷனை ஓடிகொண்டே இருந்தது 

 

போட்டோ பிரேம் பிரித்து பார்த்த ஹரிணி 

 

"ரொம்ப அழகா இருக்கு மீரா..., ரொம்ப தேங்க்ஸ் " உணர்ச்சிபூர்வமாக சொன்னாள்.

 

"அது எப்படி கிருஷ்ணர் முகம் இவரோட சாயலே  இருக்கு, உனக்கு இருக்கிற திறமைக்கு......." என்று பேசிக்கொண்டேப் போனாள் ஹரிணி.

உற்று பார்த்ததில் அது நரேன் அல்ல மஹி முக சாயல் ஹரிணி தவிர அங்கே இருப்போரின் அணைவருக்கும் அது புரிய தோழிகள் மூவருக்கும் மூச்சு திணறல் என்றால்,அண்ணன் தம்பி இருவருக்குள் அர்த்தமான பார்வை பரிமாற்றம். மஹிக்குள் அவன் எந்த அளவுக்கு அவள் மனதில் பதிந்து இருக்கிறான் என்று புரிந்தது.

 

அடுத்து வந்த நாட்கள் அவன் முகம் பாராமல் சென்றுகொண்டிருந்தது மீராவிற்கு. ஹரிணியும் நரேனும் தேனிலவுக்கு கொடைக்கானல் செல்ல. கொடைக்கானல் என்றதும் பழைய நினைவு பெட்டகம் திறந்துகொண்டது மஹி மனதுக்குள் .

 

மீராவின் நச்சரிப்பால் கொடைக்கானலில் நடக்கவிருக்கும் அந்த காண்பரண்ஸ்க்கு செல்ல தயாரானார்கள் இவர்கள் ஐவர் குழு. இவர்களுடன் மெக்கானிகல் சீனியர்களும் வந்தார்கள். அவர்கள் எழுபேர். இவர்கள் சேர்ந்து பன்னிரண்டு  பேர் ஆட்டம் போட்டுக்கொண்டு சென்று சேர்ந்தனர். அந்த மாநாடு இரண்டு டீபாட்மெண்ட்க்கும் பொதுவாக இருந்தது.

 

அந்த சீனியர்கள் வந்தது கிருஷ்ணாவிற்கு பிடிக்கவில்லை.மீரா கண்டுகொள்ளவில்லை. அடியின் வலி இவர்களுக்கு தானே தெரியும்.  வில்லியம்ஸ், பிரபு,குணா, கவின், யுகேஷ்,ராஜா, ஜென்னி தாஸ், என்று அவர்கள் அனைவருமே நன்றாய் பழகும் அண்ணன்களாக தான் நடந்துக்கொண்டனர். மீராவிடம் மட்டும்!! யுகேஷுக்க்கு எப்போதும் பார்வை கவிதாவின் மேல் தான். கிருஷ்ணாவிற்குஎரிச்சல் பற்றிக்கொண்டது. இதில் குணா சற்றே விசித்ரமாக தெரிந்தான்.யாரிடமும் பேச மாட்டான். கடவுள் பக்தி கொண்டவனாக இருந்தான். பிரபு வேறு விதமாக தெரிந்தான். அவன் குணாவிடம் மட்டும் பேசுவான். மற்றவர்கள் எல்லாரும் நட்புடன் பழகினர்.

 

கொடைக்கானல் சுற்றி பார்க்க என்று எல்லாம் சேர்ந்து சைக்கிள் வாடைக்கு எடுத்து சுற்றினார். கோக்கஸ் வாக்கில் நடந்தார்கள். குளுர்ச்சி, பச்சைப்பசேல் சூழ்நிலை எல்லாருக்குமே இதமாக இருந்தது. உத்ரா விடம் நட்பு பாராட்டும் அளவிற்கு வில்லியம்ஸ் அண்ணா வளர்ந்திருந்தார். அவருக்கு உலகமே வேறாக செல்போனிலே இருந்தது. சிலருக்கு குளிருக்கு சூடு தரும் பானம் அருந்தியதில் தூக்கம் தொற்றிக்கொண்டது.

 

மஹியும் மீராவும் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தனர். அங்கே குணா பிரபுவை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். பார்த்தாலே தெரிந்தது விபரீதம் ஏதோ என்று. இவர்களும் அவர்கள் பின்னால் ஓடினார்கள். அங்கே குணா வேண்டாம் போகாதே என்று தடுதுக்கொண்டிருந்தான், பிரபு "என்னால் தான் எல்லாம் நடந்தது… நீ நல்லாயிரு மச்சான் " என்று சொல்லி அழுதுகொண்டிருந்தான்.

      

இவர்களை பார்த்ததும் குணா அமைதி ஆகிவிட்டான். பிரபு புலம்பலில் அவர்கள் இருவரும் ஓரின சேர்கையினர், மற்றவருக்கு இன்று  தெரிந்து எல்லாம் கிண்டல் செய்து விட்டார்களாம்.குணா மறைத்து வைத்திருந்த ஒன்றை பிரபு வெளிப்படுத்தி விட்டதால் குணா வாழ்கை கெட்டு விட்டதாம். அதனால் பிரபு தற்கொலை செய்துக்கொள்ள போகிறானாம் என்று தெரிந்து கொண்டனர்.  கேட்டதுமே மஹிக்கு பயமாக .அருவருப்பாக  இருந்தது.

 

ஆனால் மீரா, "அண்ணா,நீங்க இப்படி பாதில போகறதுக்காகவா பொறந்தீங்க? வாழ்கை நாம்ப எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கு, வழி துணை யாரா இருந்தா என்ன? வாழ்கையை பிறர் பார்த்து ஆச்சர்ய படுகிற மாதிரி வாழ்ந்து காட்ட வேண்டாம்!!?? உங்கள படைத்த கடவுள் இப்படி இருந்தாலும் சாதிக்கலாம் என்று உலகத்துக்கு காட்ட தான் உங்களை படைச்சிருக்கார் அண்ணா! இதை பெருசா எடுத்துகிட்டு உங்க வாழ்கை, கனவு, லட்சியம் எல்லாம் பாழ் பண்ணிக்காதீங்க" என்றும் மகாபாரததில்  சிகண்டியையும் மோகினி அவதாரம் எடுத்த பெருமாளையும் எடுத்து காட்டாக காட்டி, பாப் பாடகர் பாய் ஜார்ஜ், என்று பல நிஜ வாழ்கை சாதனையாளர்களை எடுத்துக்கட்டி  அந்த பிரபுவின் மனதை மாற்றினாள் மீரா. குணா பேசவே இல்லை. அவன் கண்ணில் நன்றி மட்டும் தெரிந்தது.

 

யாரிடமும் இதை பற்றி பேச மாட்டாது, தெரிந்தத்து போல் காட்டிகொள்ள மாட்டோம் என்று உறுதி  கொடுத்து விடை பெறுகையில் மீரா "இன்னொரு பெண்ணோட வாழ்க்கையும் கெடுக்காதீங்க, முடிந்த வரை நீங்க யார் என்று வீட்டுக்கு சொல்லிவிடுங்க" என்று அறிவுரை சொன்னாள், ஓர் உயிரை காப்பாற்றிய திருப்தி இருந்தது மஹிக்குள். இப்படி ஒரு முதிர்ச்சியா இந்த குறும்பு கார பெண்ணுக்குள்?? ஆச்சரியமாக இருந்தது.

 

கிர்ஷ்ணவிர்க்கு விவரம் தெரிந்தப்போது "இவளை கண்ட கண்ட புத்தகம் படிக்க விட்டா இப்படி தான்" என்று சொன்னனே தவிர அவனும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

மற்றவர் வாயையும் அடக்கும் சாமர்த்தியம் அவளுக்கு இருந்தது. யாரும் மீராவின் பேச்சிற்கு பின் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை அவர்கள் இருவரையும்.

 

அப்படி பட்டவளா நான் வேண்டாம் சொன்னதும் ஒடிந்து வெறுத்து போனாள்.பெண் மனம் என்ன பூவா இல்லை அசைக்க முடியாத மலையா. தொலைந்துபோகும் இருள் நிறைந்த காடா என்ன???  

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 07

Go to Ninaikkatha naal illai rathiye 09

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.