தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 70 - பிந்து வினோத்
70. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதியின் முகத்தில் இருந்து லதாவிற்கு என்ன புரிந்ததோ, “சாரி மேடம், சாரை பத்தி தப்பா சொல்றேன்னு நினைக்காதீங்க...” என்றாள் தயக்கத்துடன்!
மறுப்பாக தலை அசைத்த பாரதி, “நீங்க தப்பா எதுவும் சொல்லலியே லதா... நீங்க சொல்றதும் சரி தான்... நான் அவர் கிட்ட பேசுறேன்... எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் லதா, நான் உங்க லாவண்யா மேடமை இப்போ பார்க்க முடியுமா? அப்பாயின்ட்மென்ட் எல்லாம் இல்லை...” என்றாள்!
“என்ன மேடம் நீங்க, லாவண்யா மேடம் உங்களை சந்திக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க... நான் சொல்றேன் அவங்க கிட்ட... இங்கே ஒரு டூ மினிட்ஸ் வெயிட் செய்றீங்களா?”
“ஷ்யூர்... தேங்க்ஸ் லதா...”
லதா உள்ளே செல்ல, பாரதியும் பவித்ராவும் அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்தார்கள்.
“எனக்கு ஒண்ணுமே புரியலை பவி! பணத்துக்காக மட்டும் கல்யாணம் செஞ்ச மனைவியோட போட்டோவை யாராவது ஆஃபிஸ்ல வச்சிருப்பாங்களா?”
“ம்ம்ம்...”
“வீட்டுலன்னா கூட அவர் சொன்னது மாதிரி ட்ராமா செய்யன்னு வச்சுக்கலாம்... ஆஃபீஸ்ல??? ஹுஹும்... இவர் சொல்லும் ரீசன் சரியே இல்லை...”
“நானும் நேத்தே அதை கண்டுப்பிடிச்சுட்டேன் பாரு...” என்ற பவித்ரா, பாரதியின் முகத்தில் இருந்த கேள்வியை புரிந்துக் கொண்டு,
“நேத்தைக்கு நாங்க உன் வீட்டுக்கு வந்தப்போ, அத்தை நீ ஒரு இரண்டு வாரம் எங்க வீட்டுக்கு வந்து தங்கினா நல்லா இருக்கும்னு சொன்னாங்க... அதுக்கு விவேக்கோட அம்மா பொறுமையா பதில் சொல்றாங்க... ஆனால் அவரு அதுக்கு முன்னாடியே அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொன்னாரு... நீ சொல்றதுப் போல விவேக் உன் கிட்ட சொன்னது