“எப்படி கண்டுபிடிச்ச பிரின்சஸ்? இது எனக்கும் கீதாக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்... வேற யாருக்கும் தெரியாது...”
“ஓஹோ அப்படியா விஷயம்...!’ என மனதினுள் நோட் செய்தவள்,
“எனக்கு மட்டும் பட்சி சொல்லிச்சு...” என்றாள் கேலியாக.
“சொல்லும் சொல்லும்! எங்க கல்யாணப் பேச்சு ஸ்டார்ட் ஆச்சோ இல்லையோ அவ்வளவு தான் எல்லாம் ரொம்ப ஸ்மூத்தா போச்சு... கீதாவை யாருக்காவது பிடிக்காமல் போகுமா என்ன...” பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தவன், ஏதோ நினைவு வரவும், அருகில் இருந்தவளை ஒரு பார்வை பார்த்து விட்டு நிறுத்தினான்...
அவன் சொல்லாமல் விட்டது அவளுக்குப் புரிந்தது...
“என்னை தவிர எல்லோருக்கும் பிடிக்கும் அப்படி தானே?” என்றாள் சின்னக் குரலில்!
“அது...”
“அண்ணி எப்படி என்னை மேனேஜ் செய்தாங்க? அவங்களைப் பார்த்தால் சண்டை போடுற கேரக்டரா தோணலை...”
“கீதாவாவது சண்டை போடுறதாவது... அதுவும் நீ எனக்கு ரொம்ப க்ளோஸ்ன்னு அவளுக்கு தெரியும்... ஆனால் பிரின்சஸ், சில சமயம் நீ அவளை ட்ரீட் செய்றது, இன்சல்ட் செய்றதை எல்லாம் பார்த்து எனக்கே கோபம் வந்திருக்கு...”
“சாரிண்ணா...”
“ஹேய் அதெல்லாம் பழைய கதை விட்டு தள்ளு...”