(Reading time: 12 - 23 minutes)

ஹேமா பதிலுக்கு பேச தொடங்குவதைக் கண்ட வெங்கட் அவர் தோளில் கைபோட்டு  “உனக்கு ஒன்னு தெரிமா அவளுக்கு அப்படியே அவங்க அம்மா மாதிரி அழகான கண்ணு டி” என்று தன் மனைவியிடம் காதல் ரசம் பொழிந்தார்.

அவரது காதல் ரசத்தில் உருகி கன்னம் சிவக்க அதை காட்டிக்கொள்ளாமல் வேலை செய்வது போல் வேறு புறம் திரும்பி கொண்டு “போதும் போதும் நீங்க காதல் ரசம் போளிஞ்சது தோளுக்கு மேல வளந்த பசங்கள வச்சுக்கிட்டு பேசுற பேச்ச பாரு போங்க போய் கெளம்புங்க ஆபீசுக்கு டைம் ஆச்சு” என்று அவரது வெட்கத்தை காட்டி கொள்ளாமல் கூறினார் ஹேமா. மனைவியின் புன் முறுவலை பார்த்த திருப்தியில் வெங்கட் சிரித்தவாறே தன் வேலையை கவனிக்க நகர்ந்தார்.

வெங்கட் ஒரு பிரைவேட் வங்கியில் அக்கௌன்ட் மேனேஜராக பணி புரிந்து வருகிறார். வீட்டில் அவர் ஸ்ட்ரிக்ட் ஆபீசராக இருக்க முயற்சிப்பதே கிடையாது, பொதுவான விஷயங்கள் தவிர பிள்ளைகளுக்கு அட்வைஸ் செய்யும் பழக்கம் வெங்கட்டிற்கு கிடையாது. அவரும் தன் பிள்ளைகளிடம் ஒரு நல்ல தோழனாகவே பழகி வந்தார். எல்லா குடும்பத்தை போலவே இங்கும் அர்ஜுன் அம்மாவின் செல்ல மகனாகவும், அனன்யா வெங்கடின் செல்ல மகளாகவும் வளர்ந்தனர்.

திருப்பூரிலேயே புகழ் பெற்ற பள்ளி அது, வருடம் தோறும் நல்ல மதிப்பெண்கள் காட்டும் பள்ளி. புத்தக அறிவை தவிற மற்ற பாட்டு, நடனம் என்று பல கலைகள் கற்றுத் தந்தனர். பள்ளி ஆரம்பிக்கும் நேரம் என்பதால் மாணவர்கள் ஓடி வந்துக் கொண்டு இருந்தனர். பெற்றோர் சிலர் தங்களது வாகனங்களில் வந்து பிள்ளைகளை விட்டு சென்றனர். சில மாணவர்கள் ஆட்டோக்களில் வந்துக் கொண்டிருந்தனர். அனன்யாவின் வீடு பள்ளிக்கு அருகில் இருந்ததால் நடந்தே சென்றாள்.    

அவசரஅவசரமாக ஓடி வந்து தன் தோழி தேஜஸ்ரீ அருகே அமர்ந்தாள் அனன்யா. அவள் உள்ளே நுழைவதற்கும் பள்ளியின் மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது. காலையில் தான் கண்ட கனவை தேவியிடம் சொல்வதற்காக அனன்யா வாய் திறக்க ஆசிரியர் புத்தகத்தை திறந்தார். அதை பார்த்த தேஜஸ்ரீ “இரு இரு லஞ்ச் பிரேக்ல பேசிக்கலாம் இப்ப பேசி மாட்டி விட்டுறாத டி இவர்ட மாட்டினா இம்போசிஷன் தா என்னால 10 பக்கம் எழுத முடியாது டி” என்று ரகசிய குரலில் கெஞ்ச இருவரும் வகுப்பை கவனிக்க துவங்கினர்.

****தேஜஸ்ரீ பத்தி சொல்லனுனா அனன்யாவோட கேரக்டர் செராக்ஸ் படிப்புல கெட்டிகார பொண்ணு ஆனா சேட்டை அத்தனையும் சைலெண்டா செய்வா, 5 ரூபாய்க்கு பேச சொன்னா கரெக்டா 5 ரூபாய்க்கு பேசுவா ஆனா 50 ரூபாய்க்கு வொர்தா சும்மா நச்சுனு பாயின்ட்டுக்கு வருவா****   

குப்பு அமைதியாக சென்றது, சிறிது நேரம் வகுப்பை நடத்திய ஆசிரியர் தன் அறிவிப்பை கூறினார், “யாருலா முன்னாடியே சயின்ஸ் எக்ஸ்ஹிபிஷன்ல பார்டிசிப்பேட் பண்ணிருகிங்க” என்று அவர் வினவ. அனன்யா, தேஜஸ்ரீ மற்றும் சிலர் கைகளை தூக்கினர். “அப்ப சேரி புதுசா சொல்ல தேவையில்ல, இன்னும் ஒரு வாரத்துல டிஸ்ட்ரிக்ட் லெவல் சயின்ஸ் எக்ஸ்ஹிபிஷன் நடக்க போது அதுல செலக்ட் ஆகுற டீம் நேஷனல் லெவல்க்கு போகலாம், யாருலா பார்டிசிபேட் பண்ண விருப்ப படுரின்களோ என்கிட்ட வந்து பேரு குடுங்க ஒரு டீம்ல 3 பேர் இருக்கலாம், நல்ல தலைப்பா செலக்ட் பண்ணிட்டு வாங்க ஆல் தி பெஸ்ட் ஸ்டுடேன்ட்ஸ்” என்று கூறி விடை பெற்று சென்றார்.

அறிவிப்பின் தொடர்ச்சியாக அனன்யாவும், தேஜுவும் அந்த கண்காட்சியில் கலந்துக் கொள்ள முடிவு செய்தனர். மதிய உணவு வேளையும் வந்தது, அனன்யா மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

“ஹே நூடுள்ஸ், உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனு...” என்று அனன்யா தொடங்க

“ஒத வாங்குவடி எத்தன தடவ உன்ன அப்படி கூப்புடாதனு சொல்லிருக்கே” என்று கூறி தேஜு முறைத்தாள்.

“என்ன பண்றது நூடுள்ஸ் உன்னோட அழகான முடிய பாத்தாலே எனக்கு இந்த பேரு தா வருது” என்று பாவம் போல் கூறினாள்

தலையில் அடித்துக் கொண்டு “சொல்லித்தொல” என்றாள்

“நூடுள்ஸ்...”

“ம்ம்ம்ம்..”

“அது வந்து...”

“என்ன ஓவர் பில்டுஅப் குடுக்குற, சொல்லு டி..”

“இன்னைக்கு ஒரு கனவு கண்டே...” என்று அனன்யா இழுக்க.

“அத அப்படி சொல்ல கூடாதுமா இன்னைக்கும் ஒரு கனவு கண்டேன்னு சொல்லணும்” என்று நக்கலாக அவளை போலவே இழுத்துக் கூறினாள்.

அவள் தேஜுவை முறைத்தாள். “என்ன அஷ் குட்டி கனவுல வந்துச்சா?” என்று ஓர கண்ணால் பார்த்து கொண்டே கேட்டாள் தேஜூ.

அவனது பேரை சுருக்கி அழைத்ததில் காரணம் புரியாமல் கோவம் வர “ஆமா ஆமா அஷ் புஷ் னுட்டு கருமோ ஃபுல்லா தா பேர சொல்லேடி” என்று எரிந்து விழுந்தாள்.

“நீ மட்டும் என் பேர ஒழுங்காவா சொல்லுற, அதலா முடியாது எனக்கு தோனுற மாதிரித்தான் கூப்பிடுவே நீ மேல சொல்லு” என்று கூறினாள்.

“செரி எப்படியோ கூப்பிடு, ஆமா உனக்கு எப்படி அவன பத்திதா கனவுன்னு தெரியும்?” என்று ஆச்சர்யமாக வினவினாள்.

“ஆமா இத கண்டுப் புடிக்க வெத்தலைல மை தடவியா பாப்பாங்க அதா எப்பப்பாரு தேஞ்சு போன கேசட் மாதிரி இதையே சொல்றியே என்ன ஒரு வித்தியாசம் வேற வேற கதை சொல்ற” என்று சாப்பிட்டவாறே கூறினாள்.

“....”

“ஆமா இன்னைக்கும் அதே மாதிரி சண்டதா போட்டிங்களா இல்ல வேற எதாவது நடந்துச்சா?” என்று பதில் தெரிந்தும் தெரியாதது போல் வினவினாள்.

“....”

“அது எப்படி டி டெய்லி ஒரு சண்ட போடுற அவ்ளவா சண்ட போட்டிங்க சேந்து படுச்சப்ப?!” என்று படிப்பில் பெரிய சந்தேகம் கேட்பது போல் முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக்கொண்டு கேட்டாள் தேஜூ.

“ஆமா நூடள்ஸ், ஏனே தெரியாது ஆனா டெய்லி சண்டப் போட்டோம், அட்லீஸ்ட் காரணம் சொல்லி இருந்தா கூட பரவாலயே, நானு எப்படியாவது காரணம் கேட்டுடலானு பாத்தா எனக்கு ஸ்கூல்ல மாத்திட்டாங்க. ஹ்ம்ம், காரணமே தெரியாம 3 வர்ஷம்ம்ம்ம் நூடுள்ஸ் எப்பா...” என அனன்யாவே ஆச்சர்யமாக கூறிக்கொண்டாள்.

“ஆமா ஆமா ரொம்ப பெருமையான விஷயம் தா” என்று நக்கலாக கூறினாள்.

“...”

அனன்யா பதில் கூறாமல் சாப்பிட்டு கொண்டு இருக்க அவளை நோக்கி “ஆமா தெரியாம தா கேக்குறே நீ என்ன எப்ப பாரு அவனையே நினைச்சுட்டே படுப்பியா?” என்று வேண்டும் என்றே நக்கல் அடித்தாள்.

அவளை முறைத்தவாரே “ஆமா அவன் பெரிய உலக அழகன் பாரு நெனச்சு நெனச்சு உருக” என்று வெறுப்புடன் கேட்டாள்.

“யாருக்கு தெரியும் பண்ணாலும் பண்ணுவ” என்று சிரிப்பினூடே கூறினாள்.

“அது இருக்கட்டும் அனு... நம்ம அஷ் குட்டிய நீ எத்தன தடவ சைட் அடுச்சுருக்க” என்று கண்ணடித்து கிண்டலாக கேட்டாள்.

“யாரு நானா நாலா சைட் அடுச்சதே இல்லப்பா” என்று அறியா சிறுமிப் போல் முகத்தை வைத்துக்கொண்டு பதில் கூறினாள் அனன்யா.

“யாரு நீயா... நம்பிட்டேபா” என்று நம்பாத லுக் விட்டாள் தேஜூ.

“செரி செரி... இப்படி பாக்காத டி, இப்படி கேட்டா என்ன சொல்றது, ம்ம்ம்ம் அப்ப சண்டதா போட தோனுச்சு சோ சைட் அடிக்கல ஆனா இப்ப யோசிச்சா, ம்ம்ம்ம் பரவால்ல சைட் அடிக்கலாம்” என்று சலனமின்றி கூறி சாப்பிட தொடர்ந்தாள்.  

அவள் கூறியதை நம்பாமல் பார்த்தவாறே சாப்பிட தொடர்ந்தாள் தேஜூ.

நம்ம தேஜுக்கு இருக்க டவுட் ஒருபக்கம் இருக்கட்டும்ங்க, அது எப்டிங்க ஹீரோயின மட்டும் காட்டின போதுமா ஹீரோ என்ன ஆனாரு? நெக்ஸ்ட் எபிசொட் பாக்கலாம்....

Go to Kadhal Payanam # 02

பயணம் தொடரும்...  

 {kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.